``ஆடிட்ல என்ன சொல்லப்போறாங்கன்னு...'' - சி.ஏ.ஜியின் நிகழ்ச்சியில் அப்பாவு
9-ம் வகுப்பு மாணவிக்கு பெண் குழந்தை பிரசவம்; 10-ம் வகுப்பு மாணவன் போக்சோவில் கைது - தஞ்சை அதிர்ச்சி!
தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு வயிறு சற்று வீக்கமாக இருந்துள்ளது. ஆனால் அவரது பெற்றோர் அதை முறையாக கவனிக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அந்தச் சிறுமிக்கு சில தினங்களுக்கு முன்பு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது பெற்றோர் சிறுமியை தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனால் சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து அந்த சிறுமிக்கு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் சிறுமியிடம் பெற்றோர் விசாரித்துள்ளனர்.
இதில் சிறுமி, ``நம்ம ஊரைச் சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் சிறுவன், காதலிப்பதாக கூறி, என்னிடம் முறைகேடாக நடந்து கொண்டான்" என கூறியுள்ளார். இதையடுத்து வல்லம் அனைத்து மகளிர் போலீஸில், சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதில் சிறுவன், சிறுமியை காதலிப்பதாக சொல்லி பாலியல் ரீதியாக நடந்து கொண்டது தெரிய வந்துள்ளது. சிறுவனும் இதை ஒப்புக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து 15 வயதாகும் அந்த சிறுவனை போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.