செய்திகள் :

Adani: 'குற்றம் நிரூபிக்கப்படும் வரை நாங்கள் நிரபராதிகளே!' - அதானி குழுமத்தின் அறிக்கை கூறுவதென்ன?!

post image

'இது அடிப்படையற்ற குற்றசாட்டு' என்று அதானி மீதான அமெரிக்காவின் ஊழல் குற்றச்சாட்டிற்கு அதானி நிறுவனம் பதிலளித்துள்ளது.

அதானி நிறுவனம் தனது அறிக்கையில், "அமெரிக்க நீதித்துறை மற்றும் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற கமிஷன், அதானி குழுமத்தின் இயக்குநர்கள் மீது குற்றம்சாட்டியுள்ளது அடிப்படையில்லாதது ஆகும். அந்தக் குற்றச்சாட்டை நாங்கள் மறுக்கிறோம்.

அமெரிக்க நீதித்துறை தங்களது குற்றச்சாட்டில் கூறியுள்ளதுபடி, இவை வெறும் குற்றச்சாட்டே மற்றும் குற்றம் நிரூபிக்கப்படும் வரை நாங்கள் நிரபராதிகள்தான்.

இந்தக் குற்றம் சம்பந்தமாக அனைத்து சட்டரீதியான நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்.

அதானி குழுமம் சட்ட திட்டங்கள், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை முழுவதுமாக கடைபிடிக்கும் நிறுவனம் ஆகும். நாங்கள் எங்கள் பங்குதாரர்கள், ஊழியர்களுக்கு நாங்கள் சட்டத்தை முழுவதும் பின்பற்றும் நிறுவனம் என்பதை உறுதியளிக்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.

நேற்று அதானி நிறுவனத்தின் மீது அமெரிக்கா, 'சோலார் ஒப்பந்தத்தில் ஊழல்' என்று புகார் எழுப்பியது. இதனால், இன்று அதானி குழுமத்தின் பங்கு பெரிதும் சரிவடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து, தற்போது அதானி குழுமத்தில் இருந்து இந்த அறிக்கை வெளியாகி உள்ளது.

Maharashtra-வில் BJP+; Jharkhand-ல் INDIA BLOC -வெற்றிபெற்றது எப்படி? JMM Congress |Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* மகாராஷ்டிரா & ஜார்க்கண்ட் முடிவுகள்!* Maharashtra: கைகொடுத்த பெண்கள் வாக்கு; ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் பாஜக கூட்டணி * மூன்றாவது முறையாக முதல்வராகும் ஹேமந்த் ச... மேலும் பார்க்க

Rajini-யை வைத்து Seeman ஆட நினைக்கும் கேம்... வொர்க்அவுட் ஆகுமா?! Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்சீமானும் ரஜினியும் திடீர் சந்திப்பு.... பின்னணியில் அவர்கள் பேசிய முக்கிய சமாச்சாரங்கள். த.வெ.க குறித்தும், விஜய் குறித்தும் தமது ஆதங்கத்தையும் சீமான் பகிர்ந்து கொண்டார். அடுத... மேலும் பார்க்க

``ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால்... அவரை அருகில் உட்கார வைத்திருந்த நீங்கள் சொங்கியா?" - சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்ததிலிருந்து விமர்சனங்களை எதிர்க்கொண்டார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கட்சி தொடங்கியதால், ரஜினி ரசிகர்களை தன் பக்கம்... மேலும் பார்க்க

`மகாராஷ்டிரா வெற்றி பாரத தேசத்தின் கருத்து; 2026... எழுதி வைத்துக் கொள்ளுங்கள்’ - தமிழிசை உற்சாகம்

மகாராஷ்டிரா தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி அமோக முன்னிலையில் இருக்கிறது.மகாராஷ்ராவில் ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜக கூட்டணி 221 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த வெற்றியை த... மேலும் பார்க்க