செய்திகள் :

America: `ஓர் அரசாக அமெரிக்காவின் நடவடிக்கையை ஆதரிக்கிறோம்...' - அமைச்சர் ஜெய்சங்கர் கூறுவதென்ன?

post image

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றதிலிருந்து சிறு பதற்றமான சூழல் நிலவுவதை மறுப்பதற்கில்லை. புலம்பெயர்ந்தவர்கள், எல்லைப் பிரச்னை, மூன்றாம் பாலினம், பொருளாதார வரி விதிப்பு, ஏற்றுமதி இறக்குமதி வரி உயர்வு, ட்ரம்ப் சுவர் அமைத்தல், உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறியது எனப் பல்வேறு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டிருக்கிறது. அதேநேரம் சட்டவிரோத குடியேறிகளுக்கும் சிக்கல் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில், ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

அந்த நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``சட்டவிரோதமாக இங்கு குடியிருக்கும் மக்களில், இந்தியர்கள் இருந்தால், அவர்கள் இந்தியர்கள்தான் என்பது உறுதியானால் அவர்களுக்காக இந்தியாவின் கதவுகள் திறந்திருக்கிறது. இந்தக் கருத்தில் நாங்கள் எப்போதும் உறுதியாக இருக்கிறோம். இது அமெரிக்காவிற்கு மட்டுமேயான நிலைப்பாடு அல்ல... ஒரு அரசாக நாங்கள் அமெரிக்காவின் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை ஆதரிக்கிறோம்.

இந்தியத் திறமைகள் உலக அளவில் அதிகபட்ச வாய்ப்பைப் பெற வேண்டும் என விரும்புகிறோம். அதே நேரத்தில், சட்டவிரோத இடம்பெயர்வை உறுதியாக எதிர்க்கிறோம். சட்டவிரோதமான ஒன்று நடக்கும்போது, ​​அதில் பல சட்டவிரோத நடவடிக்கைகள் இணைகின்றன. இது விரும்பத்தக்கதல்ல. எனவே உலகின் அனைத்து நாட்டிலும் இந்தியர்கள் இருக்கிறார்கள். இதில் அமெரிக்காவும் விதிவிலக்கல்ல." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Private Bus: 'சென்னை புறநகர் பகுதிகளில் தனியார் மினி பஸ்?' - மக்கள் விரோத முடிவை எடுக்கிறதா அரசு?

சென்னையின் புறநகர் பகுதிகளான சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் மூலம் மினி பேருந்துகளை இயக்க தமிழக அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகவும், பிப்... மேலும் பார்க்க

மதுரை: அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து! - மத்திய அரசு

மதுரையில் அரிட்டாபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு விடுத்த ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏலம் விடப்பட்ட நாள்முதல், டங்ஸ்டன... மேலும் பார்க்க

Two-gender policy: `இது ஒன்றும் நோயல்ல மிஸ்டர் ட்ரம்ப்..!’ - பாலினம் குறித்து ஏன் இப்படி ஒரு முடிவு?

ிறம் Gender Identity "பாலின அடையாளம்" என்ற சொல் முதன்முதலில் 1960-களில் தோன்றியது. ஆணாகவோ, அல்லது பெண்ணாகவோ சமூகத்தால் வகைப்படுத்தப்பட்ட நபர், தன் உள்ளுணர்வின் அடிப்படையில், தன்னை யாராகக் கருதுகிறார் ... மேலும் பார்க்க

Union Budget: "வரி பயங்கரவாதம்... பாதிக்கும் நடுத்தர வர்க்கம்" - கெஜ்ரிவாலின் 7 பரிந்துரைகள் என்ன?

2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. மறுபக்கம், டெல்லியில் பிப்ரவரி 5-ம் தேதி சட்டமன்றத் தேர்தலும் நடைபெறவிருக்கிறது. இந்த நில... மேலும் பார்க்க

``அப்போது ரெய்டுக்கு பயந்து பதுங்கியிருந்தாரா பழனிசாமி?" - ஐ.பெரியசாமி

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, 100 நாள் வேலைத்திட்டம் 150 நாள்களாகவும், 300 ரூபாய் ஊதியம் உயர்த்தப்படும் என திமுக வாக்குறுதி அளித்து நிறைவேற்றவில்லை என அறிக்கை வெளியிட்டிருந்தார்.இந்நிலையில் அ... மேலும் பார்க்க