சிறந்த வாழ்க்கையா? மாதம் 1,500 ரூபாயா? பெண்களுக்கு பிரியங்கா கேள்வி!
`Anmol' buffalo: ஹரியானாவில் ஒரு எருமையின் விலை ரூ.23 கோடி... அதன் `டயட்' இன்னும் அதிர்ச்சி ரகம்!
இதுவரை மாட்டின் விலை எவ்வளவு என கேள்விப்பட்டிருப்போம்? ரூ.30 ஆயிரம் என்று சொல்லலாமா... இன்னும் அதிகமாக போனால் ஒரு லட்ச ரூபாய், இரண்டு லட்ச ரூபாயாக இருக்கும். ஆனால், ஹரியானாவை சேர்ந்த 'அன்மால்' என்ற எருமையின் விலை ஒன்றல்ல... இரண்டல்ல, 23 கோடி ரூபாயாம். இந்த எருமை தான் தற்போது லேட்டஸ்ட் வைரல்.
அன்மாலின் விலையை விட, அதன் டயட் இன்னும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுக்கிறது. ஒரு நாள் அன்மாலுக்கு ஆகும் டயட் செலவு ரூ.1,500. அப்படி என்ன சாப்பிடும் என்று பார்த்தால்...கால் கிலோ பாதாம், 4 கிலோ மாதுளைப்பழம், 30 வாழைப்பழம், 5 கிலோ பால், 20 முட்டை. இதுப்போக, பசும்தீவனம், புண்ணாக்கு, நெய், சோயாபீன்ஸ், மக்காச்சோளம் ஆகியவற்றை அதன் வளர்ச்சிக்காகவும், சத்திற்காகவும் கொடுக்கப்படுகிறது.
'ஸ்பெஷல் ஐட்டம்' என்பதுப்போல இதன் அலங்காரத்திற்கும் தனி கவனம் கொடுக்கப்படுகிறது. அன்மால் தினமும் இரண்டு முறை பாதாம் மற்றும் கடுகு எண்ணெயால் குளிக்க வைக்கப்படுகிறது.
இதன் உரிமையாளர் கில் ஒரு கட்டத்தில் அன்மாலின் செலவுக்கு காசு இல்லாமல், அன்மாலின் தாய் மற்றும் சகோதரியை விற்றுள்ளார். அன்மாலின் தாய் தினமும் 25 லிட்டர் பால் கறந்து சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ரூ.23 கோடி கொடுத்து அன்மாலை வாங்க போட்டிகள் இருந்தாலும், கில் அன்மாலை விற்க தயாராக இல்லையாம்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb