ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் எம்ஜிஆர் குரல்! எடப்பாடி பழனிசாமியை பாராட்டி பேச்சு
AR Rahman: `ரஹ்மானை பிரிந்ததற்கு இதுதான் காரணம்!' - ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு!
ஏ. ஆர். ரஹ்மானுடனான திருமண வாழ்வை முறித்துக் கொள்வதாக சாய்ரா பானு தனது வழக்கறிஞர் மூலம் அறிவித்திருந்தார்.
ஏ. ஆர். ரஹ்மான் குறித்துப் பகிரப்படும் பொய்யான தகவல்களை நிறுத்தக்கோரியும் அவரை பிரிந்த காரணத்தையும் கூறியும் ஒரு ஆடியோவை வெளியிட்டிருக்கிறார்
அந்த ஆடியோவில் சாய்ரா பானு. ``நான் இப்போது மும்பையில் இருக்கிறேன். நான் கொஞ்ச நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேன். அதனால்தான் ரஹ்மானிடமிருந்து இடைவெளி எடுத்துக் கொள்ள விரும்பினேன். இப்படியான நேரத்தில் ரஹ்மான் குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என தமிழ் மீடியாக்களிடம் கேட்டுக் கொள்கிறேன். ரஹ்மான் நல்ல மனிதர். அவர் உலகத்திலேயே சிறந்த மனிதர். எனது உடல்நிலையை கருத்தில் கொண்டுதான் நான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன்.
நான் இப்போது மும்பையில் சிகிச்சையை மேற்கொண்டு வருகிறேன். ரஹ்மானின் பிஸி நேரங்களில் அவரையும் என்னுடைய குழந்தைகளையும் தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை. இந்த நேரத்தில் இடைவெளி எடுத்துக் கொள்ளவே நாங்கள் விரும்பினோம். அதை தாண்டி வேறு எந்த விஷயத்தையும் நாங்கள் அறிவிக்கவில்லை. இப்படியான நேரத்தில் அவர் மீது பொய்யான தகவல்களை பரப்பப் வேண்டாம். என்னுடைய சிகிச்சைகளை முடித்துவிட்டு நான் விரைவில் சென்னைக்கு வருகிறேன். " எனத் தெரிவித்திருக்கிறார்.