இந்தியாவின் டேவிட் வார்னர் இவர்தான்; இளம் வீரருக்கு புஜாரா புகழாரம்!
Bala: `இம்முறை நம்புகிறேன்..!' - 4-வது திருமணம் செய்துகொண்ட நடிகர் பாலா
வீரம், காதல் கிசு கிசு உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் அறிமுகமான மலையாள நடிகர் பாலா, இன்று நான்காவது திருமணம் செய்திருக்கிறார். கேரளாவின் எர்ணாகுளத்திலுள்ள கலூர் பாவகுளத்தில் இன்று காலை 08:30 மணியளவில் தனது தாய்மாமன் மகள் கோகிலாவை பாலா மணந்தார்.
பாலாவின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாலா, ``கோகிலா எனது உறவினர்தான். இந்தத் திருமணத்தில் என்னுடைய அம்மாவும் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அவரும், திருமணத்தில் கலந்துகொள்ள நினைத்தார். ஆனால், அவரின் உடல்நிலை சரியில்லை.
கோகிலாவின் கனவை இந்தத் திருமணம் நிறைவேற்றும். கோகிலாவுக்கு மலையாளம் தெரியாது. இருப்பினும், கடந்த ஒரு வருடமாக எனது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதில் அவர் எனக்குப் பெரும் ஆதரவாக இருந்தார். இந்தத் திருமண வாழ்க்கை நன்றாகச் செல்லும் என்று நம்புகிறேன். கோகிலா எனது உறவினர் என்பதால் எனக்கு இதில் நம்பிக்கை இருக்கிறது" என்று கூறினார்.
ஏற்கெனவே, மூன்று திருமணங்களைச் செய்திருக்கும் பாலா கடந்த சில நாள்களுக்கு முன்பு, தனது முன்னாள் மனைவி பிரபல பாடகி அம்ருதா அளித்த புகாரில் கைதுசெய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.