செய்திகள் :

Basics of Share Market 11: போர்ட்ஃபோலியோ, ஃபேஸ் வேல்யூ... ஷேர் மார்க்கெட்டும் முக்கிய வார்த்தைகளும்!

post image
நேற்றைய தொடர்ச்சியான பங்குச்சந்தையில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளை இன்று பார்ப்போம்...

போர்ட்ஃபோலியோ: நீங்கள் பங்குச்சந்தையில் என்னென்ன பங்குகள், பத்திரங்கள்...ஆகியவற்றில் முதலீடு செய்திருக்கிறீர்கள் என்ற லிஸ்டே போர்ட்ஃபோலியோ. இன்னும் எளிதாக புரிய சொல்ல வேண்டுமானால், பங்குச்சந்தை முதலீட்டின் பயோ டேட்டா, போர்ட்ஃபோலியோ.

ஃபேஸ் வேல்யூ: ஒரு பங்கின் குறைந்தபட்ச தொகையாக அந்த பங்கை முதன்முதலாக முதலீடு செய்தபோது குறிப்பிடப்பட்ட தொகை. அதாவது இந்த தொகை அந்த பங்கின் மினிமம் கேரண்டி தொகை.

காளையும், கரடியும்: பங்குச்சந்தையில் காளை, கரடி என்ற வார்த்தைகள் அடிக்கடி அடிப்படும். பங்குச்சந்தை ஏறுமுகத்தில் சென்றால் காளை, இறங்குமுகத்தில் சென்றால் கரடி.

லார்ஜ், மிட், ஸ்மால் கேப் ஸ்டாக்...

லார்ஜ், மிட், ஸ்மால் கேப் ஸ்டாக்: வளர்ச்சி, வருமானம் போன்ற அளவுகோல்களின் அடிப்படையில், செபி ஒன்றிலிருந்து 100 வரை ரேங்க் செய்யும் கம்பெனிகள் பங்குகள் லார்ஜ் கேப் ஸ்டாக். 101 - 250 ரேங்க் பெறப்படும் கம்பெனிகள் மிட் கேப் ஸ்டாக். 251-ல் இருந்து ரேங்க் செய்யப்படும் கம்பெனிகள் ஸ்மால் கேப் கம்பெனிகள்.

52 வார உச்சம் / குறைவு: ஒரு பங்கின் விலை 52 வாரத்தில் (1 வருடத்தில்) எந்த பெரிய தொகையில் வர்த்தகம் ஆகி இருக்கிறதோ, அது 52 வார உச்ச விலை. இதுவே குறைவான தொகையில் வர்த்தகம் ஆகியிருப்பது 52 வார குறைவு விலை.

லிக்விடிட்டி: ஒரு பங்கை விற்கும்போது, அதை எவ்வளவு எளிதாக சிக்கலின்றி பணமாக மாற்ற முடிகிறது என்பதற்கு லிக்விடிட்டி என்று பெயர்.

வோலடாலிட்டி (Volatility): ஒரு பங்கின் ஏற்ற, இறக்கங்கள் தான் வோலடாலிட்டி என்று கூறப்படுகிறது.

நாளை: டிரேடிங், டிமேட் கணக்கு என்றால் என்ன?!

ITC பங்கு ஏன் எல்லோருக்கும் favourite? | IPS FINANCE | EPI - 49

இந்த வீடியோவில், ஐடிசி பங்குகள் ஏன் பல முதலீட்டாளர்களுக்கு பிடித்தமானவை என்பதை ஆராய்வோம். அதன் வலுவான அடிப்படைகள், பல்வேறு வணிக போர்ட்ஃபோலியோ மற்றும் சாதகமான சந்தை நிலைமைகள் ஆகியவற்றுடன், ITC ஒரு கவர்... மேலும் பார்க்க

பங்கு சந்தையில் வெற்றியடைய உதவும் 10 முக்கிய குறிப்புகள்

இங்கே பங்கு சந்தையில் வெற்றியடைய உதவும் 10 முக்கிய குறிப்புகள் தமிழில்:படிப்பின் முக்கியத்துவம்: பங்கு சந்தை பற்றிய அடிப்படைகளை நன்கு கற்றுக்கொள்ளுங்கள். எப்போது எது செய்ய வேண்டும் என்பதற்கான அறிவு மு... மேலும் பார்க்க

ஷேர்லக்: உச்சத்திலிருந்து 7% இறங்கிய சந்தை... முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு வந்து சேர்ந்தார் ஷேர்லக். இந்த வாரத்துக்கான நாணயம் விகடன் அட்டையை கம்ப்யூட்டர் திரையில் உற்றுநோக்கியவர், ‘‘சூப்பர், வாசகர் களுக்கு மிகச் சரியான தீபாவளிப் பரிசு...’’ எனப் பா... மேலும் பார்க்க

HSBC Flash PMI-ல கவனிக்க வேண்டிய விஷயம் என்ன? | IPS FINANCE | EPI - 48

HSBC Flash PMI என்பது ஒரு நாட்டில் வணிக நடவடிக்கைகளை அளவிடும் ஒரு முக்கிய பொருளாதார குறிகாட்டியாகும். 50-க்கு மேல் உள்ள PMI மதிப்பு பொருளாதார விரிவாக்கத்தைக் குறிக்கிறது, அதே சமயம் 50-க்குக் கீழே இருந... மேலும் பார்க்க

Basics of Share Market 10: `CAGR, Square Off, Stop Loss'- ஷேர் மார்க்கெட்டும் முக்கிய வார்த்தைகளும்!

பங்குச்சந்தை பற்றி தெரிந்துகொள்ள ஆரம்பிக்கும்போது, அங்கே பயன்படுத்தப்படும் வார்த்தைகளையும் தெரிந்துகொள்வோம்... வாங்க!பங்குச்சந்தை டைமிங்: பங்குச்சந்தை வாரத்தில் திங்கட்கிழமை முதல் வெள்ளிகிழமை வரைதான் ... மேலும் பார்க்க

BAJAJ FINANCE பங்கு 5% ஏற்றம்.. இன்னும் அதிகரிக்குமா? | IPS FINANCE | EPI - 47

இந்த வீடியோவில், BAJAJ FINANCE இல் 5% அதிகரிப்பு பற்றி ஆராய்ந்து அதன் சாத்தியமான எதிர்கால விலை நகர்வுகளைப் பற்றி விவாதிக்கிறோம். IPS FINANCE மற்றும் EPI - 47 பற்றிய விரிவான பகுப்பாய்வை நாங்கள் வழங்குக... மேலும் பார்க்க