ஜோ பைடனைப் போல பிரதமர் மோடி நினைவை இழந்து வருகிறார்: ராகுல் காந்தி
Basics of Share Market 30: நிறுவனத்தின் பங்கு மதிப்பு சரியும்போது, பங்கை விற்காதீங்க... வாங்குங்க!
இதுவரையில் வந்த அத்தியாயங்களில் சரியும் பங்கை வாங்காதீர்கள்... நிறுவனத்தை ஆராய்ந்து பங்கை வாங்குங்கள் என அடிக்கடி சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், இப்போது தலைப்பு அந்தக் கூற்றுக்கு முற்றிலும் மாறாக இருக்கிறது. அதனால், உங்களுக்கு தலைப்பு சரி தானா என்ற கேள்வி எழுந்திருக்கலாம். ஆம், தலைப்பு முற்றிலும் சரியானது தான்.
ஆனால், அது நீண்ட கால முதலீட்டிற்கு ஆனது. ஒரு நிறுவனத்தின் பங்கை பல கட்ட ஆராய்ச்சிக்கு பின் வாங்கியிருப்பீர்கள். ஆனால், இப்போது ஏதோ ஒரு காரணத்திற்காக ஒரு நிறுவனத்தின் பங்கு மதிப்பு குறையலாம். அப்போது அந்தப் பங்கை உடனடியாக விற்க வேண்டும் என்பதில்லை. அதற்கு பதிலாக வாங்கலாம். அப்போது நமக்கு தான் லாபம். குழப்பமாக இருக்கிறதா?
அதானி நிறுவனத்தை எடுத்துகாட்டாக கொள்ளலாம். ஹிண்டண்பர்க் அறிக்கை வந்தபோது, அதன் மதிப்பு சரிந்தது. ஆனால், மீண்டும் பழைய வேகத்தை அடைந்து, முன்பை விட பங்குகளின் விலை உயர்ந்திருக்கிறது.
அதானி போன்ற பிரபலமான, நீண்ட கால பங்குச்சந்தையில் இருக்கும் நிறுவனங்கள் சரிவை கண்டால் பெரும்பாலும் மீண்டு வந்து நன்றாக செயல்பட தொடங்கிவிடும். அந்த சரிவு தற்காலிகமானதாகவே இருக்கும். அதனால், நீண்ட கால முதலீட்டிற்காக, அந்த மாதிரியான பங்கில் முதலீடு செய்திருப்பவர்கள் பின்வாங்க கூடாது. அப்போது மிக குறைந்த விலைக்கு விற்க நேரிடும். ஆனால், அது மீண்டு வரும்போது, நாம் திரும்ப அந்தப் பங்கை வாங்க நினைத்தால் மிகவும் கஷ்டமானதாக மாறி விடும்.
அதனால், நிறுவனங்களின் பங்கு சரியும்போது, பங்குகளை வாங்கலாம். ஏனெனில், அப்போது குறைந்த விலைக்கு தான் வாங்கியிருப்போம். ஆனால், அந்தப் பங்கு மீண்டு வந்த உடன், நல்ல லாபம் பார்க்கலாம்.
'ஓஹோ...அப்படியா' என்ற சரிந்த நிறுவனங்களின் பங்கை வாங்கக் கூடாது மற்றும் எல்லா நிறுவனங்களின் பங்கையும் சரியும்போது விற்காமல் இருப்பதும், வாங்குவதும் கூடாது. ஒரு நிறுவனத்தின் மதிப்பு சரிகிறது என்றால் அந்த நிறுவனத்தின் இதுவரையான செயல்பாடுகள், அதன் நம்பகத்தன்மை, சந்தையில் அதற்கு இருக்கும் மதிப்பு ஆகியவற்றை பார்த்து ஆராய வேண்டும். பின்னர் தான் அந்தப் பங்கை விற்க வேண்டுமா... வாங்க வேண்டுமா என்பதை முடிவு செய்யலாம்.
இது நீண்ட கால முதலீட்டிற்கு பொருந்தும். இன்ட்ரா டே டிரேடிங்கிற்கு இந்த கான்செப்ட் செட் ஆகாது.
நாளை: பங்குச்சந்தை முதலீட்டில் 'வரி'யில் இருந்து எப்படி தப்பிக்கலாம்?