Basics of Share Market 27: "கேண்டில் ஸ்டிக் பேட்டர்ன் வகைகள் என்னென்ன?"
கேண்டில் ஸ்டிக் பேட்டர்ன் பற்றி நேற்று பார்த்தோம். இன்று அதன் வகைகளில் சிலவற்றை பார்ப்போம்.
Marubozu வகை கேண்டில் ஸ்டிக்: இதில் செவ்வகத்தில் மேலேயும், கீழேயும் எந்தக் கோடும் இருக்காது. இப்போது கேண்டில் பச்சை நிறத்தில் இருந்தால் ஒரு குறிப்பிட்ட கால அளவில் பங்கு விற்பனை தொடங்கியதில் இருந்து இறக்கம் இல்லாமல் ஏறுமுகமாகவே இருக்கிறது என்று பொருள். சிவப்பு கேண்டில் பங்கு விற்பனை தொடங்கியதில் இருந்து இறங்குமுகமாகவே இருக்கிறது என்று அர்த்தம். இது மிகவும் பவர்ஃபுல்லான கேண்டில் ஆகும்.
ஸ்பின்னிங் டாப்: இதில் சின்ன அளவே செவ்வகம் இருக்கும். ஆனால், மேல் இருக்கும் கோடும், கீழ் இருக்கும் கோடும் கிட்டதட்ட ஒரே அளவில் இருக்கும். இது பொறுத்தவரை, விற்பனையாளர் விலையை குறைக்க பார்க்கிறார்கள்... வாங்குபவர்கள் விலையை ஏற்ற பார்க்கிறார்கள். இதில் ஒரு குறிப்பிட்ட கால அளவில் பச்சை கேண்டில் கடைசி பங்கு விற்பனை விலை ஆரம்ப பங்கு விற்பனை விலையை விட அதிகமாக இருக்கிறது. சிவப்பு கேண்டில் ஒரு குறிப்பிட்ட கால அளவில் ஆரம்ப பங்கு விற்பனை விலையை விட கடைசி பங்கு விற்பனை விலை குறைவாக இருக்கிறது என்று பொருள்.
டாஜி: இதில் செவ்வகம் மிகவும் சிறியதாகத் தான் தெரியும். பங்கு விற்பனையின் ஆரம்ப விலையும், முடிவு விலையும் கிட்டதட்ட ஒரே மாதிரி இருப்பது. இந்த பேட்டர்ன் அரிதாகத் தான் நடக்கும்.
நாளை: ஹேமர், ஷூட்டிங் ஸ்டார் என்றால் என்ன...தெரிந்துகொள்வோமா?!