Adani: அதானி மீதான குற்றச்சாட்டு; 20% வீழ்ந்த அதானி குழுமம்; எந்தெந்த பங்குகள் எவ்வளவு வீழ்ச்சி?
கௌதம் அதானி உள்ளிட்ட எட்டு பேர் மீது அமெரிக்காவின் லஞ்சம் மற்றும் மோசடி குற்றச்சாட்டால் அதானி குழுமத்தின் பங்கு 20 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
'அடுத்து 20 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலர் லாபம் கிடைக்க உள்ள சோலார் ஒப்பந்தத்தைப் பெற அதானி இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கினார்' என்று நேற்று (நவம்பர் 20) அமெரிக்க வழக்கறிஞர்கள் அமைப்பு ஒன்று குற்றம் சாட்டியிருந்தது.
இதனால், இன்று (நவம்பர் 21) காலை பங்குச்சந்தை தொடங்கியதுமே, அதானி குழுமத்தின் முக்கிய மூன்று நிறுவனங்களின் பங்குகள் 20 சதவிகித வீழ்ச்சியைக் கண்டன. இதன் விளைவாக, அதானி குழுமத்தின் 11 பங்குகளின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் கோடியிலிருந்து ரூ.12.3 லட்ச கோடி வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. முக்கியமாக, அதானி க்ரீன் எனர்ஜி சுமார் 19.5%, அதானி பவர் சுமார் 17.5%, அதானி எண்டர்பிரைசஸ் சுமார் 23% வரை பங்குகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளன.
ஃபோர்ப்ஸ் தகவலின் படி, தற்போது அதானியின் சொத்து மதிப்பு 11.4 பில்லியன் டாலர் குறைந்து, 58.4 பில்லியன் ஆக மாறியுள்ளது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...