தாராவி நிலத்தை அரசு அதானிக்கு தாரைவார்க்கலாமா? - தேர்தல் பிரசாரத்தில் காங்.
Basics of Share Market 31: `பங்குச்சந்தை முதலீட்டால் அதிக வரி வந்துவிடுமா?’ - தெரிந்து கொள்ளுங்கள்
முதலீடு என்று வரும்போது வருமானம் வரும். வருமானம் வரும்போது வரி வரும். இப்படி நாம் பங்குச்சந்தையில் செய்திருக்கும் முதலீடுகளுக்கும் வரிகள் உண்டு. உங்கள் வருமானத்திற்கு வரி எவ்வளவு என வரி ஃபைல் செய்யும்போது www.incometax.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
அதில் நீங்கள் பழைய வரி முறையை தேர்ந்தெடுக்கிறீர்களா... புதிய வரி முறையை தேர்ந்தெடுக்கிறீர்களா என்பதை பொறுத்து உங்கள் வரி அமையும். நீங்கள் முதலீடு செய்யும்போது, எந்த முறை குறைந்த வரி விகிதம் வருகிறது என்று ஆராய்ந்து பார்த்து வரிக்கட்டுங்கள். சிலவற்றில் முதலீடு செய்தால் வரி சலுகை என்று கூறுவார்கள். ஆனால், அது உண்மையிலேயே சலுகையா அல்லது கூடுதல் தொகைக்கு வரி கட்ட வேண்டியிருக்கிறதா என்பதை செக் செய்துகொள்ளவும்.
முதலீட்டால் அதிக வரி வந்துவிடுமோ என்று பயப்பட வேண்டாம். நம் வருமானம் + முதலீட்டில் வரும் வருமானம் பொறுத்தே வரி அமையும். வரி சம்மந்தமான எதாவது சந்தேகம் எழுந்தால் நிதி ஆலோசகரையோ, ஆடிட்டரையோ அணுகி, அதை தெளிவு செய்து கொள்ளலாம்.
நாளை: பங்குச்சந்தையில் 'இது' ஆபத்து...'இதை' பண்ணாதீங்க!