செய்திகள் :

Basics of Share Market 35 : 'பங்குகளா... ஃபண்டுகளா?' - நீங்கள் முதலீடு செய்ய ஏற்றது எது?!

post image
சந்தையில் நீங்களே முதலீடு செய்ய கீழே உள்ள செக்லிஸ்ட் உங்களுக்கு டிக் ஆகிறதா என்பதை ஒரு முறை சரிபார்த்து கொள்ளுங்கள்.

சந்தை எப்படி இருக்கிறது, எதில் முதலீடு செய்யலாம், சந்தையின் முக்கிய போக்கு என்ன போன்ற சந்தை அறிவும் உங்களுக்கு இருக்கிறதா?

உங்களது தேவைக்கேற்ப எந்தப் பங்கில் முதலீடு செய்யலாம், அதன் லாபம் எப்படி இருக்கும், வருங்காலத்தில் அந்தப் பங்கின் மதிப்பு எப்படி இருக்கும் என்பதை ஓரளவு கணிக்க முடிகிறதா?

தெரிந்திருக்கிறதா?!

நம் கணிப்புக்கு மாறாக நாம் வாங்கிய பங்கு இறங்கினால், அதை எப்படி சமாளிக்கலாம்...அதை எப்படி மாற்றி அமைக்கலாம் என்று தெரிகிறதா?

சந்தையில் ஏற்ற, தாழ்வுகள் சகஜம் தான். இதனால் அதிக மகிழ்ச்சியோ, படபடப்போ அடையக் கூடாது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கிறதா?

சந்தையில் ரிஸ்குகளும் உண்டு... லாபம் பார்க்க காத்திருக்க வேண்டும் என்பது தெரிந்திருக்கிறதா?

மேலே கூறியிருக்கிற அனைத்தும் உங்களுக்கு தெரிந்திருக்கிறது... அதை சந்திக்க தயார் என்றால் நீங்கள் தாராளமாக பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம். இல்லையென்றால், மியூச்சுவல் ஃபண்ட் ஆப்ஷனை தேர்ந்தெடுப்பது நல்லது. காரணம், உங்களுடைய இந்த ரிஸ்குகளை எல்லாம் ஓரளவு மியூச்சுவல் ஃபண்ட் மேனேஜர் நிர்வகித்து கொள்வார்... அதனால், ரிஸ்குகள் ஒப்பீட்டு அளவில் குறைவு.

கடைசி வரை, மியூச்சுவல் ஃபண்டில் மட்டும் தான் முதலீடு செய்ய வேண்டும் என்பதில்லை. மியூச்சுவல் ஃபண்ட் போட்டுக்கொண்டு இருக்கும் காலத்தில் சந்தையின் போக்கு, சந்தை பற்றி நன்கு தெரிந்துகொண்டு, பின்னர் பங்குச்சந்தையை களம் காணுங்கள்.

நாளை: 'பங்குச்சந்தையில் பின்பற்ற வேண்டிய 10 கோல்டன் ரூல்ஸ்!'

SENSEX, NIFTY-யிலிருந்து நீக்கப்படும் பங்குகள் ஏன், என்ன காரணம்? | IPS FINANCE | EPI - 72

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...https://bit.ly/TATAStoryepi01 மேலும் பார்க்க

Basics of Share Market 37: 'எந்த ஃபண்டை தேர்ந்தெடுக்க வேண்டும்?!' - மியூச்சுவல் ஃபண்ட் டிப்ஸ்

என்னடா இது... இதுவரை பங்குச்சந்தை பற்றி சொல்லி வந்தவர் மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்ய சொல்கிறாரே... மியூச்சுவல் ஃபண்டில் எதில் முதலீடு செய்ய வேண்டும்... அது பாதுகாப்பானதா போன்ற கேள்விகள் எழலாம்.... மேலும் பார்க்க

Basics of Share Market 36: 'பங்குச்சந்தையில் பின்பற்ற வேண்டிய 10 கோல்டன் ரூல்ஸ்!'

'பங்குச்சந்தை பற்றி நன்றாக தெரிந்துகொண்டேன்...இனி நானே நேரடியாக முதலீடு செய்யப்போகிறேன்' என்று முடிவுக்கு வந்துவிட்டீர்களா? அப்போது, உங்கள் முதலீட்டில் நீங்கள் பின்பற்ற வேண்டிய பத்து முக்கிய கோல்டன் ர... மேலும் பார்க்க

Share Market: 'தொடர்ந்து இறங்குமுகம்' - முதலீடு செய்யலாமா, காத்திருக்கலாமா? - நிபுணர் சொல்வதென்ன?

செப்டம்பர் இறுதி முதல் பங்குச்சந்தை ஒரு சில தினங்களைத் தவிர இறங்குமுகமாகவே இருந்தது...இருக்கிறது. இதனால், 'இப்போது முதலீடு செய்யலாமா...இல்லை, காத்திருக்கலாமா?' என்ற கேள்வி முதலீட்டாளர்கள் மத்தியில் கே... மேலும் பார்க்க