BB Grand Finale Exclusive: `கடைசி நேர ட்விஸ்ட்' - டைட்டில் வின்னர் இவர்தான்; சர்ப்ரைஸ் லிஸ்ட்
விஜய் டிவியில் கடந்தாண்டு அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 8 ன் கிராண்ட் ஃபினாலே ஷூட் சென்னை பூந்தமல்லியிலுள்ள பிக்பாஸ் செட்டில் நேற்று நடந்ததன் தொடர்ச்சியாக தற்போது டைட்டிலை வென்றது யார் என்ற விபரம் தெரிய வந்துள்ளது.
24 பேரில் தொடங்கிய ஆட்டம்:
அர்னவ், ரவீந்தர், முத்துக்குமரன், ஜாக்குலின், சௌந்தர்யா உள்ளிட்ட பதினெட்டு போட்டியாளர்கள் என்ட்ரி ஆக ஆட்டம் பாட்டம் எனக் கலகலப்பாகத் தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில் சில வாரங்களுக்குப் பின் ராணவ், ரயான், மஞ்சரி முதலான ஆறு பேர் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் இணைந்தனர்.
ஆக மொத்தம் இந்த சீசனில் 24 பேர் கலந்துகொள்ள, அடுத்தடுத்த எவிக்ஷன் மூலம் ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கினர்.
கடைசி வாரத்தில் பணப்பெட்டி டாஸ்க்கில் தோல்வியடைந்ததன் மூலம் மிட் வீக் எவிக்ஷனில் ஜாக்குலின் வெளியேற, பவித்ரா, முத்துக்குமரன், விஷால், ரயான் சௌந்தர்யா ஆகிய ஐந்து பேர் இறுதிச் சுற்றுக்கு வந்திருக்கிறார்கள்.
பிரமாண்ட கிராண்ட் பினாலே
யாருக்கு சீசன் 8 ன் டைட்டில் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு பிக்பாஸ் ரசிகர்களைத் தொற்றிக்கொண்டிருக்கும் சூழலில், நேற்று கிராண்ட் ஃபினாலேவுக்கான ஷூட் நடந்தது.
தற்போது கிடைத்த நம்பகமான தகவல்களின்படி இந்த சீசனில் டைட்டிலை வென்றது யார் என்பது குறித்த தகவல் தெரிய வந்துள்ளது.
ரசிகர்களின் வாக்குகளின் அடிப்படையில் முத்துக்குமார் பிக்பாஸ் சீசன் 8 ன் டைட்டிலை வென்றிருக்கிறார்.
இரண்டாம் இடம்பிடித்த செளந்தர்யா:
அடுத்ததாக இரண்டாம் இடம் சௌந்தர்யாவுக்குக் கிடைத்துள்ளது.
மூன்றாவது இடத்டைப் பிடித்திருக்கிறார் விஷால்.
முன்னதாக ரயான் மற்றும் பவித்ரா ஜனனி இருவரும் வெளியேறியிருக்கிறார்கள்.
முத்துக்குமரனுக்கு ஆரம்பத்திலிருந்தே ரசிகர்கள் ஆதரவு இருந்ததாகச் சொல்லப்பட்ட நிலையில் அது தற்போது உறுதியாகியுள்ளது.
சௌந்தர்யாவுக்கு முன்னால் போட்டியாளர்கள் ஓவியா, அர்ச்சனா, விஷ்ணு ஆகியோர் ஆதரவு தெரிவித்து வந்தனர்.
மூன்றாமிடம் பிடித்த விஷாலுக்கு பாக்யலட்சுமி சீரியல் நட்சத்திரங்கள் திரளாக ஆதரவு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.