Bank Scam: `மரண தண்டனையை ரத்துசெய்ய 9 பில்லியன் அமெரிக்க டாலர்' - ட்ருங் மை லான்...
BB Tamil 8: ``என்னை வெளியே விடுங்க நான் போறேன்..."- அலறும் அன்ஷிதா! - நடந்தது என்ன?
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் 59- வது நாளுக்கான புரோமோ வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் டெவில்ஸ் மற்றும் ஏஞ்சல்ஸ் டாஸ்க் தொடங்கி இருக்கிறது. ஏஞ்சல்ஸ் அணியில் இருக்கும் போட்டியாளர்களை வெறுப்பேற்றி அவர்கள் கோபத்திற்கு ஆளானாலோ, இல்லை அழுதாலோ அவர்களிடம் இருக்கும் ஹார்ட் சிம்பலை கழற்றி கொடுத்து விட வேண்டும் என்பது ரூல்ஸ் ஆக இருக்கிறது. பிறகு அவர்கள் டெவில்ஸ் அணியுடன் சேர்ந்து விடுவார்கள். அதுபோல அதிகமான ஹார்ட் பெறுபவர்கள் இந்த வாரம் நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க்கை பெற போகிறார்கள் என்று பிக் பாஸ் அறிவித்திருக்கிறார்.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான புரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் அன்ஷிதா, சாச்சனா இடையே மோதல் ஏற்படுகிறது. " எனக்கு கோபம் வருது, எனக்கு கோபம் வருதுனு அன்ஷிதா பயங்கரமாக கத்துகிறார். என்னை விடு, அதை ஓபன் பண்ணி என்னய வெளியே விடு, நான் போகிறேன் " என்று அன்ஷிதா கூறுகிறார். என்ன நடக்கப்போகிறது என்று இன்றைய எபிசோடில் வெளியாகும் போது தெரியும்.!