செய்திகள் :

BB TAMIL 9: DAY 12: `கத்திக்குத்து ராணி' அரோரா; கதை சொல்லும் நேரம் இந்த வார `worst performer' யார்?

post image

ஒருவரை பின்னால் கத்தியால் குத்தினால்தான், தான் தலைவராக முடியும் என்கிற ஆதாரமான அரசியல் பாடத்தை ‘தல’ டாஸ்க்கின் வழியாக கற்றுக் கொடுத்தார் பிக் பாஸ். 

இப்போதைய நிலவரத்தின் படி சபரி, கனி ஆகிய இருவரும் முன்னணி போட்டியாளர்களாக நகர்ந்து வருகிறார். இந்த வரிசையில் விக்ரம், கெமி, பிரவீன், ஆகியோரையும் சொல்லலாம். (பிரவீன் காந்தி எலிமினேட் ஆனதில் ஒரு நல்ல விஷயம், எந்த பிரவீன் என்கிற குழப்பம் இனி வராது). 

BB TAMIL 9: DAY 12
BB TAMIL 9: DAY 12

இந்த வாரம் முழுவதும் சிறந்த போட்டியாளர்களாக இருந்த இரண்டு நபர்களை (பிக் பாஸ் வீட்டில் இருந்து மட்டும்) தேர்ந்தெடுக்கும் டாஸ்க். வீட்டு தல போட்டியில் இவர்கள் பங்கேற்பார்கள். 

இதில் பெரும்பான்மையானவர்கள் சபரி மற்றும் கனிக்கு தலைமைப் பண்பும் பொறுமையும் இருப்பதாக காரணம் சொல்லி வாக்களித்தார்கள்.

விக்ரம் மற்றும் கெமிக்கும் கணிசமான வாக்குகள் கிடைத்தன. ‘விமன் பவர்’ என்று சொல்லைப் போட்டு கனிக்கு வாக்களித்தார் பாரு. (சர்காஸம்?!). முன்கோபம் உள்ள எஃப்ஜே தலைவரானால் என்ன செய்வார் என்று பார்க்க விரும்புவதாக ஆதிரையும் பாருவும் சொன்னார்கள்.

 பேச எழுந்து வரும் போதெல்லாம் “நான்தான் உங்க நடிப்பு…… அரக்கன் திவாகர்’ என்று ரீப்பீட் மோடில் சொல்லி இம்சித்தார் வாட்டர் மெலன். (இவன்..இன்னும் திருந்தல மாமா’ மொமெண்ட்!).

இந்த டாஸ்க்கின் இறுதியில் சபரியும் கனியும் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று தலைவர் போட்டிக்கு தகுதி பெற்றார்கள். மாஸ்க் டாஸ்க்கில் ஏற்கெனவே வெற்றி பெற்ற கம்ருதீனும் இவர்களுடன் இணைவார். 

BB TAMIL 9: DAY 12
BB TAMIL 9: DAY 12

அடுத்தது, 'worst performer'. இதில் அராரோவிற்கு எக்கச்சக்கமான வாக்குகள் விழுந்தது நியாயமே. காலை வசதியாக நீட்டிக் கொண்டு ரொமான்ஸ் உரையாடல்கள் நிகழ்த்தியதை தவிர அவர் வேறு எதையும் பொிதாக செய்யவில்லை.

இதைப் போலவே ஆதிரைக்கும் நிறைய வாக்குகள் வந்தன. எஃப்ஜே கூட ஆதிரைக்கு வாக்களித்து ஆச்சரியப்படுத்தினார். (பய தெளிவா இருக்கான்!) இறுதியில் அரோரா மற்றும் ஆதிரை மோசமான பங்கேற்பாளர்களாக தோ்வானார்கள். இவர்கள் சிறைவாசம் மேற்கொள்வார்கள். 

“என் அழகை வெச்சுதான் இங்க வண்டியோட்ட முடியுதுன்னு சொல்றாங்க.. நான் ஒரு மாடல்.. அப்படித்தானே என்னைக் காட்டிக்க முடியும்.. அதைப் போயா ஒரு காரணமா சொல்வாங்க?” என்று பாருவிடம் புலம்பிக் கொண்டிருந்தார் அரோரா.

“அவ்ள ஒண்ணும் சீன் இல்ல. நீ மொக்கையாத்தான் இருக்கே” என்று முகத்திற்கு நேராகவே கிண்டலடித்தார் பாரு. (சமயங்களில் பாரு உண்மையும் பேசி விடுகிறார் என்பதைத் தாண்டி பாரு இருக்கும் இடத்தில் வேறு யார்தான் அழகாக இருக்க முடியும்?!). 

BB TAMIL 9: DAY 12
BB TAMIL 9: DAY 12

கடந்து வந்த பாதையில் கதை சொல்லும் நேரம். ‘என் கதை அழுவாச்சியா இருக்காது.. சுவாரசியமாத்தான் இருக்கும்’ என்று சிரிப்புடன் ஆரம்பித்த கம்ரூதீன், தன் கதையைச் சொன்ன போது ஒரு கட்டத்தில் சுயபச்சாதாபத்துடன் கண்கலங்க ஆரம்பித்து விட்டார்.

உருவக்கேலி, அம்மாவை டார்ச்சர் செய்த அப்பாவால் குடும்ப வன்முறை போன்றவற்றை விவரித்த கம்ருதீன் “எங்க அப்பாவை எனக்குப் பிடிக்காது. ஆனா அவர் கிட்ட இருந்த கோபம் எனக்கு வந்துடுச்சு” என்றது அவரது முன்கோபத்திற்கு முக்கியமான காரணமாக இருக்கலாம். 

‘சீரியல்ல நடிக்கும் போது ஒருத்தர் கூட லவ் இருந்தது..” என்று சந்தடி சாக்கில், கம்ரூதின் சிரித்துக் கொண்டே சொல்ல “கூட்டத்துல கட்டு சோத்தை ஏண்டா அவுக்கற?” என்கிற மாதிரியே சங்கடத்திற்கு ஆளானார் ஆதிரை. (அப்ப இவங்கதானா அது?!) ‘வெச்சேன் பத்தியா ஆப்பு’ என்கிற எக்ஸ்பிரஷனை வில்லத்தனமான சிரிப்புடன் தந்தார் கம்ரூதீன். 


அடுத்து கதை சொல்ல வந்தவர் அப்சரா. இளம் வயதிலேயே தனக்குள் நிகழ்ந்த மாற்றத்தை உணர்ந்தவர், கண்டிப்பான அம்மாவிடம் இதைச் சொல்வதற்கு நிறைய பயந்திருக்கிறார்.

என்றாலும் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு வீட்டை வெளியேறுவதாகச்  சொன்ன போது சகோதரன் அழ, கூடவே அம்மாவும் அழுது ‘எங்க கூடவே இரு” என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள் என்று பயந்து கொண்டிருந்த போது ஒரு நொடியில் நிலைமை மாறியதை அப்சரா சொன்ன போது வீடு நெகிழ்ந்து கைத்தட்டியது.

இதைப் போலவே மற்ற குடும்பத்தினரும் இந்த மாற்றத்தை இயல்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பாராட்டினார் வினோத். 

BB TAMIL 9: DAY 12
BB TAMIL 9: DAY 12

‘குத்துங்க எஜமான் குத்துங்க’ என்கிற வீட்டு ‘தல’ டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். தலைவர் போட்டியில் இருப்பவர்களின் மூன்று கட் அவுட்கள், வரவேற்பறையில் இருக்கும்.

சம்பந்தப்பட்டவருக்குத் தெரியாமல் கத்தியால் மற்றவர்கள் குத்த வேண்டும். மூன்று கத்திக்குத்து வாங்கியவர் போட்டியில் இருந்து வெளியேறுவார்.

ரம்யா குத்த வரும் போது ‘பார்த்துட்டேன்.. பார்த்துட்டேன்’ என்று அலறினார் கம்ரூதீன். எனவே இருவருக்கும் மோதல் வந்தது. ‘என்னை அண்ணான்னு கூப்பிடதெல்லாம் ஃபேக்” என்று கம்ருதீன் சொல்ல “அப்படிச் சொன்னதுக்கு என்னைத்தான் செருப்பால அடிச்சுக்கணும்” என்று ரம்யா சொல்ல சூழல் ரணகளமாயிற்று. 

BB TAMIL 9: DAY 12
BB TAMIL 9: DAY 12

சரபி மீது பாரு கொலைகாண்டில் இருக்கிறார் என்பது வெளிப்படை. எனவே சடக்கென்று ஒரு சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு சபரியின் கட்அவுட் மீது குத்தினார்.

ஆனால் கத்தியை விடவும் சபரி படு ஷார்ப்பாக இருக்கிறார். எங்கு நகர்ந்தாலும் அவரது கண்கள் கட்அவுட்டின் மீதே பதிந்திருக்கின்றன. எனவே ‘பாரு.. பார்த்துட்டேன்” என்று சொல்ல அதை பாரு ஏற்கவில்லை. 

பிக் பாஸே தலையிட்டு ‘சபரி பார்த்துட்டார்’ என்று தீர்ப்பு சொல்ல, அதை ஏற்றுக் கொள்வதை தவிர பாருவிற்கு வேறு வழியில்லை. பாருவிற்கு சிறந்த நோஸ் கட். .. “எப்படியோ.. இந்த பாரு ஒரு மோமெண்ட்டை உருவாக்கிட்டா பத்தியா. அங்க நிக்கறா” என்று தன்னைத் தானே கன்டென்ட் க்வீனாக நினைத்து தற்பெருமை அடித்து தன் தோல்வியை சமாளித்துக் கொண்டார் பாரு. 

சபரியின் கட்அவுட் மீது எவருமே குத்த முடியாத அளவிற்கு கண்காணிப்பு வளையத்தை பலப்படுத்தியிருந்தார் சபரி. என்றாலும் அந்தக் காவலை உடைத்துக் கொண்டு முதன் முதலாக குத்தி ‘கத்திக்குத்து ராணி’ என்கிற பட்டத்தை பெற்றார் அரோரா.

கம்ரூதீனுக்கு ஏற்கெனவே இரண்டு கத்திகள் குத்தப்பட்ட நிலையில் ஆதிரை மூன்றாவது கத்தியை இறக்கி அவரை போட்டியிலிருந்து வெளியேறச் செய்தார்.

இதனால் காண்டான கம்ருதீன் அனைவரையும் திட்டி விட்டு பிறகு பெருந்தன்மையாக தோல்வியை ஒப்புக் கொண்டார். 

BB TAMIL 9: DAY 12
BB TAMIL 9: DAY 12

ஆக.. கனிக்கும் சபரிக்கும் இடையில்தான் இனி போட்டி. கனியக்கா பேசிக் கொண்டிருக்கும் போதே பின்னால் நைசாக வந்து கத்தியை இறக்கிறார் பிரவீன்.

கனிக்கு இரண்டு கத்திகள், சபரிக்கு ஒரு கத்தி என்கிற நிலையில் போட்டி நிறுத்தப்பட்டது. சபரிதான் ‘தல’ ஆவார் என்று தோன்றுகிறது. 

பிறகு நடந்த ரேம்ப் வாக் நிகழ்ச்சியில் FJ- ஆதிரை ஜோடி பரிசு வென்றது. 

இரண்டாவது வாரத்தை நெருங்கியும் கூட இந்த சீசனில் சுவாரசியமான சம்பவங்களோ, போட்டியாளர்களோ இதுவரை தென்படவில்லை. ‘ஆரம்பிச்சாச்சு. ஓடுற வரை ஓடட்டும்’ என்கிற மாதிரிதான் சலிப்பாக போய்க் கொண்டிருக்கிறது. 

சின்னத்திரை நடிகை அப்சரா க்யூட் க்ளிக்ஸ்| Album

சின்னத்திரை நடிகை அப்சராசின்னத்திரை நடிகை அப்சரா மேலும் பார்க்க

BB TAMIL 9: DAY 11: தல பதவியை இழந்த துஷார்; புறணி பேசி புலம்பி டைம்பாஸ் செய்யும் பாரு!

துஷார் உஷாராக இல்லாததால் ‘தல’ பதவியை இழந்தார். கேப்டன் பொறுப்பை மறந்துவிட்டு அரோரா பின்னாலேயே சுற்றியதால் அவருடைய பதவி அரோகரா ஆயிற்று.பிரதிக்ஷா வெஷம்.. ரம்யா வெஷம்.. வியன்னா.. வெஷம்.. பிக் பாஸ் வெஷம்.... மேலும் பார்க்க

ரங்கராஜ் - ஜாய் கிறிசில்டா விவகாரம்: `இதில் தலையிட எங்களுக்கு அதிகாரம் இருக்கு’ - மகளிர் ஆணையம்

'நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்து விட்டு ஏமாற்றி விட்டார்' என அவரது முன்னாள் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிசில்டா தந்த புகாரின் மீது தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் விச... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 9: "சபரி வெளியே போனது எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்துச்சு"- விஜே பார்வதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான (அக்.16) மூன்றாவது புரொமோ வெளியாகி இருக்கிறது.அதில் "நாமினேஷன் போனதால பிரவீன் அப்படியே மாறிட்டான். பயங்கரமா நடிக்கிறான். இவுங்களோட டாக்ஸிக் லெவல் கம்பே... மேலும் பார்க்க