கோலியைப் பின்னுக்குத் தள்ளிய 21-ம் நூற்றாண்டின் அதிவேக வீராங்கனை; 37 வருட சாதனைய...
Bison: "மெய்சிலிர்த்து கண்ணீரை வரவழைத்தது"- 'பைசன்'படத்தைப் பாராட்டிய சேரன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையில் வெளியாகியிருக்கும் படம் 'பைசன்'.
இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. திரைப்பிரபலங்கள் பலரும் இப்படத்தைப் பாராட்டி இருக்கின்றனர்.
அந்தவகையில் இயக்குநர் சேரன் 'பைசன்' படத்தைப் பாராட்டி பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " பரியேறும் பெருமாளுக்கு பிறகு மாரி செல்வராஜ் தம்பியின் ஆகச்சிறந்த படைப்பு 'பைசன்'.
நேர்த்தியான கதையமைப்பும் கதாபாத்திரங்களும் ஆச்சர்யப்படவும் கைதட்டவும் மெய்சிலிர்த்து கண்ணீரையும் வரவழைத்தது.
கபடி விளையாட்டு என்பது பழக்கப்பட்டதுதான்.. ஆனால் அந்த கபடி வீரனை சுற்றியுள்ள உலகம் புதுசு." என்று பாராட்டி இருக்கிறார்.
பரியேறும் பெருமாளுக்கு பிறகு @mari_selvaraj தம்பியின் ஆகச்சிறந்த படைப்பு #Bison. நேர்த்தியான கதையமைப்பும் கதாபாத்திரங்களும் ஆச்சர்யப்படவும் கைதட்டவும் மெய்சிலிர்த்து கண்ணீரையும் வரவழைத்தது.. கபடி விளையாட்டு என்பது பழக்கப்பட்டதுதான்.. ஆனால் அந்த கபடி வீரனை சுற்றியுள்ள உலகம் புதுசு
— Cheran Pandiyan (@CheranDirector) October 22, 2025