செய்திகள் :

Bulldozer Justice: புல்டோசர் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றத்தின் கடிவாளமும்... 10 வழிகாட்டுதல்களும்!

post image
பாஜக ஆளும் மாநிலங்களில் நடைபெறும் புல்டோசர் நடவடிக்கைகளுக்கு எதிரான வழக்கில், அதிகாரியே ஒருவரைக் குற்றவாளி எனத் தீர்மானிக்க முடியாது என்றும், விதிமுறைகளை மீறி வீடுகளை இடித்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளே சொந்தப் பணத்தில் அதைச் சீரமைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

முன்னதாக, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில், குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர், சட்டவிரோத கட்டுமானம் என்ற பெயரில் சிறுபான்மையினர் உள்ளிட்ட குறிப்பிட்ட மக்களின் வீடுகளை அரசு இடிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மனுக்களும் குவிந்தன.

புல்டோசர்

இந்த மனுக்கள் மீதான விசாரணையின்போதே, `குற்ற வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டிருந்தாலே எப்படி அவர்களின் வீட்டை இடிக்க முடியும்' என நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு அரசிடம் கடுமையான கேள்விகேட்டது. அதைத்தொடர்ந்து, கடந்த மாதம் விசாரணை முடிவில் தீர்ப்பை ஒத்திவைத்தது.

இந்த நிலையில், நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அமர்வில் வழக்கு இன்று தீர்ப்பு வந்தது. அப்போது நீதிபதிகள், ``அதிகாரி ஒருவரைக் குற்றவாளி எனத் தீர்மானிக்க முடியாது. குற்றம்சாட்டப்பட்டவரின் வீட்டை வெறும் குற்றச்சாட்டின் அடிப்படையில் மட்டுமே இடித்தால், அது சட்டத்தின் அடிப்படைக் கோட்பாட்டின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். அதிகாரியே நீதிபதியாகி குற்றம்சாட்டப்பட்டவரின் வீட்டையோ, கட்டடத்தையோ இடிக்க முடியாது. குற்றவாளியாக இருந்தாலும், சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட முறையான நடைமுறையைப் பின்பற்றாமல் இடிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது.

உச்ச நீதிமன்றம்

அவ்வாறு செய்வது, சட்டத்தின் செயல்முறையைத் தவறாகப் பயன்படுத்துவதாகும். சொத்துகள் அரசால் தன்னிச்சையாக எடுக்கப்பட மாட்டாது என்பதைத் தனிநபர்கள் அறிந்துகொள்வதற்குச் சட்டத்தின் விதிமுறைகள் ஒரு கட்டமைப்பை வழங்குகிறது. எனவே, அரசு மற்றும் அதன் அதிகாரிகள் தன்னிச்சையான மற்றும் அதிகப்படியான நடவடிக்கைகளை எடுக்க முடியாது.

உச்ச நீதிமன்றம்

அப்படி தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து தன்னிச்சையாகச் செயல்படும் எந்தவொரு அதிகாரியையும் விட்டுவிட முடியாது. ஒரு சராசரி குடிமகனுக்கு, வீட்டைக் கட்டுவது என்பது பல வருட கடின உழைப்பு மற்றும் கனவுகளின் உச்சம். பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களை ஒரே இரவில் தெருவில் நிற்க வைப்பது மகிழ்ச்சியான காட்சி அல்ல." என்று குறிப்பிட்டு, இடிப்பு நடவடிக்கையில் அதிகாரிகள் கடைப்பிடிக்கப்பட வேண்டிய வழிகாட்டுதல்களை வெளியிட்டனர்.

உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள்:

* உள்ளூர் நகராட்சி விதிகளில் இருக்கும் கால அவகாசத்தின்படியோ அல்லது நடவடிக்கை எடுப்பதற்கு 15 நாள்களுக்கு முன்னரோ நோட்டீஸ் போன்ற முன்னறிவிப்பு இல்லாமல், எந்த இடிப்பு நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது.

* கட்டட உரிமையாளருக்குப் பதிவு செய்யப்பட்ட தபாலில் இடிப்புக்கான காரணங்களுடன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அதோடு, அந்த நோட்டீஸ் கட்டடத்தின் வெளிப்புறத்தில் ஓட்ட வேண்டும்.

புல்டோசர்

* முன்தேதியிட்டு இடிக்கப்பட்டதாக எழும் குற்றச்சாட்டுகளைத் தவிர்க்க, கட்டட உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பியவுடனேயே, மாவட்ட ஆட்சியருக்கும், மாவட்ட மாஜிஸ்திரேட்டுக்கும் தெரிவிக்க வேண்டும்.

* அனைத்து நகராட்சிகளும் இன்றிலிருந்து மூன்று மாதங்களுக்குள் இதற்கான டிஜிட்டல் போர்ட்டலை உருவாக்க வேண்டும். அதில், இடிப்பு நடவடிக்கைகள் குறித்த அனைத்து தகவல்களும் இடம்பெற வேண்டும்.

* சம்பந்தப்பட்ட நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். அந்தச் சந்திப்பு விவரங்கள் பதிவுசெய்யப்பட்ட வேண்டும்.

* கட்டடத்தை இடிப்பதற்கான இறுதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும், நீதிமன்ற ஆய்வுக்குட்படுத்தவும் கட்டட உரிமையாளருக்கு வாய்ப்பு வழங்கவேண்டும்.

* 15 நாள்கள் அவகாசத்துக்குப் பிறகு கட்டடத்தின் அங்கீகரிக்கப்படாத பகுதியை உரிமையாளர் அகற்றப்படவில்லையென்றாலோ, மேல்முறையீட்டு ஆணையம் தடை உத்தரவு விதிக்கவில்லையென்றாலோ, அதிகாரிகள் இடிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

புல்டோசர் அரசியல்

* கட்டடம் இடிக்கப்படுவதை வீடியோவாகப் பதிவு செய்ய வேண்டும்.

* இடிக்கப்பட்டதற்கான அறிக்கை, காவல்துறை மற்றும் நகராட்சி ஆணையருக்கு அனுப்ப வேண்டும்.

* இந்த வழிகாட்டுதல்கள் மீறப்பட்டு கட்டடம் இடிக்கப்பட்டால், அது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வழிவகுக்கும். அதோடு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பேற்று தங்களின் சொந்த செலவில் கட்டடத்தைச் சீரமைக்க வேண்டும்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

குருமலை: தொட்டில் கட்டி தூக்கிவரப்பட்ட கர்ப்பிணி; மலைவாழ் மக்களின் வேதனை தீர்வது எப்போது?

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையையொட்டிய ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதியில் குருமலை, குழிப்பட்டி, மாவடப்பு, பூச்சிக்கொட்டாம்பாறை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன. இங... மேலும் பார்க்க

சல்லி சல்லியாய் நொறுங்கும் ஆம் ஆத்மி?! - சபதத்தை நிறைவேற்றுவாரா அரவிந்த் கெஜ்ரிவால்?

டெல்லி ஆத் ஆத்மி அரசின் அமைச்சரவையிலிருந்தும் கட்சியிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட், கட்சியிலிருந்து விலகிய கையோடு பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறார். ஒரே ஆண்டி... மேலும் பார்க்க

`ஒடுக்குமுறைக்கு எதிரான குரல் அது...' - பெண்கள் உரிமைக்காக போராடும் ஆப்கன் சிறுமிக்கு அமைதிப் பரிசு!

ஆப்கானிஸ்தானின் காபூலில் பெண் குழந்தைகளின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வாதிட்ட 17 வயது சிறுமி நிலா இப்ராஹிமிக்கு, அவரின் சிறப்புப் பணியை பாராட்டி மதிப்புமிக்க சர்வதேச குழந்தைகள் அமைதி பரிசு செவ்வாய் ... மேலும் பார்க்க

Rain Alert: `நவம்பர் 25, 26 தேதிகளில் கனமழை' - விடுமுறை தொடர்பாக அறிவிப்பு வெளியிட்ட அன்பில் மகேஸ்!

வடகிழக்குப் பருவமழை ஆரம்பித்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் லேசான மழை, அடை மழை, கன மழை என பெய்து வருகிறது.கடந்த ஆண்டைவிடவும் இந்த ஆண்டு மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என் வானிலை ஆய்வு மையம் முன்... மேலும் பார்க்க

இயல்பு நிலைக்குத் திரும்பிய திருச்செந்தூர் கோயில் யானை; முகாமிற்கு அனுப்ப திட்டமா.. என்ன நடக்கிறது?

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் யானை தெய்வானை கடந்த 18-ம் தேதி உதவி பாகர் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசபாலன் ஆகியோரை துதிக்கையால் தாக்கி, காலாலும் உதைத்தது. யானை குடிலில... மேலும் பார்க்க

1000 நாள்களை எட்டிய போர்... உக்ரேனுக்கு எதிராக அணு ஆயுதத்தை கையிலெடுக்கப்போகிறதா ரஷ்யா?!

ஓயாத போர் மேகம்!1000 நாள்கள்...ஆயிரம் நாட்களைக் கடந்தும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்ரோஷப் போர் இன்னும் நின்றபாடில்லை. போர் நிறுத்தும் ஏற்படுமா என உலக நாடுகள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், உக... மேலும் பார்க்க