செய்திகள் :

CBSE பள்ளிகளில் கற்பித்தல் தரத்தை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை..!

post image

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகளில் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்த ஊக்கத்தொகை முறையை அடுத்த கல்வி ஆண்டிலிருந்து அறிமுகப்படுத்தவுள்ளதாக சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் ஆசிரியர்களிடையே போட்டி மனப்பான்மையை வளர்த்து அதன் மூலம் புதுமையான கல்வி முறைகளை மாணவர்களிடையே நடைமுறைப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தை அடுத்த ஜூன் மாதத்தில் அறிமுகமாகவுள்ள 'மதிப்பீட்டு மைய'த்தின் வழியே செயல்படுத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது. 15,000 - 20,000 ரூபாய் வரை மட்டுமே சம்பாதிக்கும் மூன்றாம் கட்ட (டியர்-3) நகரங்களில் இருக்கும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு உதவி செய்ய இத்திட்டம் முயல்கிறது.

Representational Image

பள்ளிகளின் திருப்தியற்ற கற்பித்தலுக்கான காரணம் ஆசிரியர்களே என்பதாகக் கல்வி அமைச்சகத்தின் தேசிய சாதனை ஆய்வு (National Achievement Survey), கல்வியின் ஆண்டு நிலை அறிக்கை மற்றும் சி.பி.எஸ்.இ யின் கட்டமைக்கப்பட்ட மதிப்பீட்டு முறையியல் சுட்டிக்காட்டுகின்றன. எனவே, இப்புதிய திட்டம் நடைமுறையில் இருக்கும் கற்றல் இடைவெளிகளை நிரப்புவதற்காகவும், ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்களைகுறைப்பதற்காகவும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தைப் பற்றி சிபிஎஸ்இ அமைப்பின் தலைவர் ராகுல் சிங் கூறுகையில், "இது ஆசிரியர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய முயற்சி, மதிப்பீடுகள் வடிவமைக்கப்படும் விதம் கற்பித்தல் முறைகளை நேரடியாக பாதிக்கிறது. அதன்படி இந்தியாவில் இருக்கும் மொத்தம் 15 லட்சம் சிபிஎஸ்இ ஆசிரியர்களையும் அவர்களின் மதிப்பீட்டு முறையியலையும் பாதிக்கும். மிகவும் பயனுள்ள மதிப்பீடுகளை உருவாக்க ஆசிரியர்களுக்கு உதவுவதன் மூலம் இந்த பிரச்னைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது." என்றார்.

இதன்படி வரும் காலத்தில் ஆசிரியர்களுக்கு இப்புதிய திட்டத்தின்படி பயிற்சி அளிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

``மாணவர்கள் பேசாமல் இருக்க வாயில் டேப்'' - அரசுப் பள்ளி தலைமை ஆசிரிய மீது பெற்றோர் புகார்!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள அய்யம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில், தலைமை ஆசிரியராக புனிதா என்பவர் பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த பல மாணவர்கள் படித்து வருகின்றனர். இந... மேலும் பார்க்க

திருவொற்றியூர் தனியார் பள்ளியில் மீண்டும் வாயு கசிவு? - மாணவிகள் மயக்கம், பெற்றோர்கள் முற்றுகை!

சென்னை, திருவொற்றியூரில் கடந்த அக்டோபர் 25-ம் தேதி தனியார் பள்ளியொன்றில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதாக 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் மயக்கமடைந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அப்போதே, பாதிக்... மேலும் பார்க்க