``ஆறு மாசமா கிணத்தைக் காணோம் சார்..." - வடிவேலு பாணியில் விவசாயி புகார்! - என்ன ...
Champions Trophy 2025: பாகிஸ்தான் நிபந்தனையை ஏற்க மறுக்கும் BCCI - இணக்கமான முடிவு எட்டப்படுமா?
சாம்பியன்ஸ் டிராபி தொடர்பான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெத் வாரியம் இடையிலான பேச்சு வார்த்தை நீண்ட நாள்களாக தீர்வை எட்டாமல் இருக்கிறது.
சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தியாவின் போட்டிகளை ஹைபிரீட் முறையில் நடத்த சில நிபந்தனைகளுடன் ஒப்புக்கொண்டு, துபாயில் நடத்த திட்டமிடுவதாக வெளியான செய்திகள் ஆறுதலாக அமைந்தாலும் அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
பாகிஸ்தான் முன்வைத்த முக்கிய நிபந்தனை, இனி இந்தியாவில் நடைபெறும் தொடர்களில் பாகிஸ்தான் பங்கேற்கும் போட்டிகள் ஹைபிரீட் முறையில் நடத்தப்பட வேண்டும் என்பதுதான்.
பிசிசிஐ இந்த நிபந்தனையை மறுத்ததாக தி டெலிகிராப் இந்தியா செய்தி தளம் தெரிவிக்கிறது.
இந்திய அணி பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாகவே பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுவதில்லை. ஆனால் இந்தியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என பிசிசிஐ தரப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா வருங்காலத்தில் பல ஐசிசி தொடர்களை நடத்தவிருக்கிறது. 2025 ஆம் ஆண்டு மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை, 2026ம் ஆண்டு இலங்கையுடன் இணைந்து டி 20 உலகக்கோப்பை, 2029 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2031 ஒருநாள் உலகக் கோப்பை போன்ற தொடர்கள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் பிசிசிஐ என இரண்டு தரப்புக்கும் இணக்கமான முடிவுவை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில நாள்களில் ஐசிசி நிர்வாகத்தினர் சேர்ந்து பேசி முடிவெடுப்பர் எனக் கூறப்பட்டுள்ளது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...