செய்திகள் :

Delhi Ganesh: ``நேத்து நைட்கூட நல்லாதான் பேசினார்; திடீர்னு..." - டெல்லி கணேஷ் மகன் மஹா உருக்கம்

post image
பிரபல குணசித்திர நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தியிருக்கிறார். இவருக்கு வயது 81.

தமிழ் சினிமாவில் காமெடி, வில்லன் என அத்தனை கதாபாத்திரங்களிலும் இவர் நடித்து அசத்தியிருக்கிறார். சொல்லப்போனால், இன்றைய `ஜென் சி' உலகத்தின் மீம்ஸ்களிலும் இவருடைய காமெடி காட்சிகள் பெரும்பான்மையாக இருந்து வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவரின் மறைவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

டெல்லி கணேஷின் மறைவு குறித்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவரின் மகன் மஹா, "அப்பாவுக்கு 80 வயசு ஆகிடுச்சு. இப்போ சமீபத்துல சதாபிஷேகம்கூட பண்ணியிருந்தோம். இப்போ கொஞ்சம் நாட்களாக வயது மூப்பின் காரணமாக சில பிரச்னைகள் வந்தது. ஆனால், திடீர்னு இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல. நேற்று இரவு வழக்கம்போல மாத்திரை கொடுக்கலாம்னு போனோம். அப்போது அவர் உடலிலிருந்து எந்த அசைவும் தெரியல. அடுத்ததாக மருத்துவரை அழைத்துப் பார்த்தோம்.

Delhi Ganesh son Maha

அவங்க அப்பா மறைஞ்சுட்டார்னு சொன்னாங்க. எங்களுக்கு இது மீளமுடியாத இழப்பு. நாளைக்கு காலைல அப்பாவினுடைய இறுதிச் சடங்குகள் நடக்கவிருக்கு. எங்க உறவினர்களும் பலர் வரணும், நடிகர் சங்கத்துல இருந்தும் வரவிருக்காங்க. அக்கா நேத்து இரவுகூட அப்பாகிட்ட எப்போதும் போல நல்லாதான் பேசிட்டு இருந்தாங்க. அப்பாவும் நல்லாதான் பேசினாரு. ஆனால் திடீர்னு இப்படி ஆகிடுச்சு..." என்றார் உருக்கமாக.

Lubber Pandhu:`ஹரிஷ் கல்யாணின் மாமியார்; ரிஸ்க் எடுக்க முடிவு செய்தேன்’ - ஸ்வாசிகா விஜய் ஷேரிங்க்ஸ்

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பரபரப்பாக ஓடி வெற்றிப் பெற்றப்படம் 'லப்பர் பந்து'. தற்போது ஓடிடி-யிலும் வெளியாகி பாராட்டைப் பெற்று வருகிறது. இந்தத் திரைப்படத்தின் முக்கிய பலமே அதன் கதாபாத்திரங்கள்... மேலும் பார்க்க

Dhanush Lineup: 'இட்லி கடை, NEEK, குபேரா, D55...' - லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

ஒரே சமயத்தில் நடிப்பு, இயக்கம் என இரண்டு டிராக்கிலும் அதிரடியாகக் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். 'ராயன்' படத்திற்குப் பின் இரண்டு படங்கள் இயக்கி வருகிறார். ஒன்று 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்', மற்... மேலும் பார்க்க

கங்குவா: `படத்தை வெளியிடக்கூடாது' நிபந்தனை விதித்த நீதிமன்றம்... கடைசி நேரத்தில் வந்த சிக்கல்..!

20 கோடி ரூபாயை வரும் 13ம் தேதிக்குள் உயர்நீதிமன்ற சொத்தாட்சியருக்கு செலுத்தாமல் ‘கங்குவா' படத்தை வெளியிடக் கூடாது என்று ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.சூர்யா... மேலும் பார்க்க

Kanguva: `அண்ணனுடைய முதல் க்ரஷ் கெளதமி!' - சூர்யாவை மாட்டிவிட்ட கார்த்தி!

`கங்குவா' திரைப்படம் நவம்பர் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.புரோமோஷன் பணிகளுக்காக பல பகுதிகளுக்கும் சென்று சுழன்று இயங்கி வருகிறார் சூர்யா. இது போன்ற ப்ரோமோஷன் பணிகளுக்காக பாலைய்யாவின் ... மேலும் பார்க்க