செய்திகள் :

`கருணாநிதிக்கு பேரனாக இல்லாமல் இருந்தால், கவுன்சிலர் தேர்தலில்கூட..!'- உதயநிதியைச் சாடும் உதயகுமார்

post image

"எடப்பாடியாருக்கு சவால் விடும் அளவிற்கு உதயநிதிக்கு தகுதியும், அனுபவமும் இன்னும் வரவில்லை..." என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, "மாவட்டம் தோறும் ஆய்வுக் கூட்டம் என்கிற பெயரிலே முதலமைச்சர் போட்டோ ஷூட், ரோடு ஷோ நடத்தி வருவது தமிழக மக்களுக்கு பலன் தரவில்லை. இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி மக்களுக்காக கேள்விகளை முன் வைக்கின்றபோது அதை கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டுமே தவிர, எள்ளி நகையாடுவதும் வரம்பு மீறி பேசுவதும் நாகரிக அரசியல் அல்ல.

எடப்பாடி பழனிசாமி ஆதாரத்தோடு வைக்கிற குற்றச்சாட்டுகளை பொய்  என்று திசை திருப்புவதில்தான் அக்கறை செலுத்துகிறார்களே தவிர தீர்வு காண்பதற்கான அக்கறை செலுத்தவில்லை.

  அரசு செலவில் செயல்படுகின்ற திட்டங்களுக்கு தொடர்ந்து உங்கள் தந்தையார் பெயரை சூட்டுகிறீர்கள், உங்கள் டிரஸ்ட் மூலமாக திட்டங்களுக்கு பெயரை வைக்க ஆட்சேபனை இல்லை, ஆனால் மக்கள் வரிப் பணத்தில் உங்கள் தந்தையார் பெயரை தொடர்ந்து சூட்டுவதால் மக்கள் முகம் சுழிக்கிறார்கள் என்று மக்களின் எண்ணத்தைத்தான் எடப்பாடியார் கேட்டுள்ளார்.

ஆர்.பி.உதயகுமார்

முன்வைத்த அந்த கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு திக்கி திணறி போன மு.க.ஸ்டாலின், உங்களுக்கு என்ன திறமை இருக்கிறது என்று தரம் தாழ்ந்த கேள்வியை கேட்டதற்கு, கடந்த நான்கரை ஆண்டு காலம் முதலமைச்சராக இருந்து மக்களுக்கு செய்த திட்டங்களான ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், 6 புதிய மாவட்டங்கள், குடிநீர் திட்ட பணிகள், கால்நடை பூங்காக்கள், சாலை பணிகள், 7.5 சதவிகித இட ஒதுக்கீடு, குடிமராமத்து திட்டங்கள், 50 ஆண்டுக்கால காவேரி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு, மேட்டூர் அணை தூர் வாருதல், ஜெயலலிதாவின் திட்டங்களான தாலிக்கு தங்கம் திட்டம், கறவை மாடு ஆடுகள் திட்டம், மடிக்கணினி திட்டம், தடுப்பணை கட்டி அதன் மூலம் நீர்நிலை உயர்த்தியது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை புள்ளி விவரத்துடன் துண்டு சீட்டு இல்லாமல், குறிப்பு இல்லாமல் என்னால் பேச முடியும், முதலமைச்சர் செய்த திட்டங்களை பேசத் தயாரா? என்று எடப்பாடியார் சவால் விடுத்தார்.

ஆனால், இன்றைக்கு உதயநிதி ஸ்டாலின் எடப்பாடியாரை பார்த்து சவால் விடுகிறார், இரண்டு கோடி தொண்டர்கள் சார்பில் நான் உதயநிதி ஸ்டாலினுக்கு சவால் விடுகிறேன். முதலமைச்சர் ஸ்டாலின் மகனான உங்களோடு விவாதிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்... நீங்கள் எந்த இடத்திற்கு அழைத்தாலும் நாங்கள் வரத் தயார்.

சட்டம் ஒழுங்கு பிரச்னை, போதைப் பொருள் கடத்தல், மின்சார கட்டணம் உயர்வு, சொத்துவரி உயர்வு, என மக்கள் வடிக்கிற கண்ணீரை துடைப்பதற்கு நீங்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கருணாநிதிக்கு மகனாக பிறந்ததால் முதலமைச்சராகவும், கருணாநிதியின் பேரனாக பிறந்த ஒரே காரணத்தினால் நீங்கள் துணை முதலமைச்சராகி இன்று சவால் விடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

கருணாநிதிக்கு பேரனாக இல்லாமலிருந்தால், ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட நீங்கள் வெற்றி பெற முடியாது என்று கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை பட்டவர்த்தமாக கூறி உங்கள் முகத்திரையை ஒரே வார்த்தையில் தோலுரித்துக் காட்டியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடியாருக்கு சவால் விடும் அளவிற்கு உதயநிதிக்கு தகுதியும், அனுபவமும் இன்னும் வரவில்லை. சவால் விடுவது முக்கியம

ல்ல, மக்களை காப்பதுதான் முக்கியம் என்பதை உதயநிதி நினைவில் கொண்டு பணியாற்ற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Wayanad: `வாக்களிக்கும் மனநிலையில் வயநாடு மக்கள் இல்லை'- வாக்குப்பதிவு சரிவு குறித்து பாஜக வேட்பாளர்

வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. கேரள மாநிலத்தின் 7 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய வயநாடு தொகுதியில் சுமார் 14 லட்சத்து 70 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். அனைவ... மேலும் பார்க்க

வயநாடு இடைத்தேர்தல்: இதுவரை இல்லாத அளவு சரிந்த வாக்கு சதவிகிதம் - குழப்பத்தில் அரசியல் கட்சிகள்

கேரள மாநிலத்தில் வயநாடு நாடாளுமன்ற தொகுதி, சேலக்கரை, பாலக்காடு சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல்கள் நவம்பர் 13-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் பாலக்காட்டில் பிரசித்திபெற்ற கல்பாத்தி ... மேலும் பார்க்க

விருதுநகர்: பெயர்த்தெடுக்கப்பட்ட பாரத மாதா சிலை; கோர்ட் கண்டனம்; மீண்டும் அதே இடத்தில் வைக்க அனுமதி!

விருதுநகரில், மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட பா.ஜ.க தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷாவால் கடந்த ஆண்டு இந்த கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையில் மாவட்ட... மேலும் பார்க்க

'மக்கள் அரசு மருத்துவமனைகள் மீதான நம்பிக்கையை இழந்து வருகின்றனர்' - வானதி சீனிவாசன்

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ-வும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் கோவை ராமநாதபுரம் பகுதியில் மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "கோவை தெற்கு சட்டமன்ற தொக... மேலும் பார்க்க