செய்திகள் :

What to watch on Theatre and OTT: 'கங்குவா, Gladiator II', Deadpool - இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

post image

கங்குவா

கங்குவா

'சிறுத்தை' சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'கங்குவா'. நவீன கால காவல் வீரனையும், வரலாற்றுக் கால வீரமிக்க தலைவனின் வீரம், பேரன்பு, மன்னித்தல், வாக்கைக் காப்பாற்றும் ஆகச் சிறந்த வீரமிக்க குணங்கள் உள்ளிட்டவற்றைப் பேசும் பிரமாண்ட திரை அனுபவத்தைக் கொண்ட இத்திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், பிரஞ்சு, ஸ்பானிஷ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் உலகெங்கிலும் வெளியாகியிருக்கிறது.

Matka (தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம்)

Matka

கருணா குமார் இயக்கத்தில் வருண் தேஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'Matka'. வறுமையில் அடிபட்டுக் கொண்டிருக்கும் கதாநாயகன் சூதாட்டம் மூலம் எப்படி பணக்காரனாக உருவெடுத்தார், அதை சுற்றி நடந்த சிக்கல்களும், சம்பவங்களும் என்ன என்பதைப் பற்றியது இதன் கதைக்களம். ஆக்‌ஷன், திரில்லர் நிறைந்த இத்திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Anand Sreebala (மலையாளம்)

Anand Sreebala

விஷ்ணு வினய் இயக்கத்தில் அர்ஜின் அசோகன், சாய்ஜு குருப், அபர்ணா தாஸ், அஜு வர்கீஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் மலையாள திரைப்படம் 'Anand Sreebala'. சஸ்பன்ஸ், திரில்லர், போலீஸ் இன்வெஸ்டிகேஷன் நிறைந்த இத்திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

The Sabarmati Report (இந்தி)

தீரஜ் சர்ணா இயக்கத்தில் '12th Fail' படத்தில் நடித்த விக்ராந்த் மெஸ்ஸே நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'The Sabarmati Report'. 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி குஜராத் கோத்ரா ரயில் நிலையத்தில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Gladiator II (ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி)

பண்டைய கால ரோம் பேரரசில் போர் வீரர்களை அடிமைகளாக மாற்றி மக்கள், அரச குடும்பங்கள் மத்தியில் அவர்களை சண்டையிட வைப்பது பெரும் பொழுபோக்காக இருந்தது. இதை மையமாக வைத்து எடுக்கப்பட்டது 'Gladiator' முதல் பாக திரைப்படம். போரிலிருந்து விடுதலை பெற்று தனது மீதி வாழ்வை குடும்பத்துடன் வாழ வேண்டும் என்று நினைக்கும் மக்சிமஸ் என்ற போர்வீரன், அரசியல் சூழ்ச்சியால் தனது குடும்பத்தினரைப் படுகொலை செய்தவர்களை பழிவாங்குவதுதான் இதன் கதைக்களம். இதன் தொடர்ச்சியாக வெளியாகியிருக்கிறது Gladiator இரண்டாம் பாகம். முதல் பாகத்தை இயக்கிய ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் புதிய கதாநாயகனாக பால் மெஸ்கல் இதில் நடித்திருக்கிறார்.

இதுதவிர ஓடிடி-யில் வெளியாகியிருக்கும் திரைப்படங்கள்

Emilia Perez (ஆங்கிலம்) - Netflix

Hot Frosty (ஆங்கிலம்) - Netflix

Operation Blood Hunt (ஆங்கிலம்) - Lionsgate

வெப்சீ ரிஸ்

Bad Sisters S2 (ஆங்கிலம்) - Apple TV+

Freedom at Midnight (இந்தி) - SonyLIV

Silo S2 (ஆங்கிலம்) - Apple TV+

The Day of the Jackal (ஆங்கிலம்) - Jio Cinema

தியேட்டர் டு ஓடிடி

Deadpool And Wolverine (ஆங்கிலம்) - Disney + Hotstar - Nov 12

Maa Nanna Superhero (தெலுங்கு) - Amazon Prime Video- Nov 13

Usha Parinayam (தெலுங்கு) - etv WIN

The Watchers (ஆங்கிலம்) - Jio Cinema

Inbox 2.0 Ep 9: Kanguva படம் பார்த்தவங்க இந்த வீடியோவையும் பாருங்க! | Cinema Vikatan

இன்பாக்ஸ் 2.0 எபிசோட் 9 இப்போது வெளிவந்துள்ளது.முழுமையாக காண லிங்கை கிளிக் செய்யவும். மேலும் பார்க்க

AR Rahman: `நண்பர்களே, முக்கியமான ஒன்றைப் பேச விரும்புகிறேன்' - ஏ.ஆர். ரஹ்மானின் பதிவு

இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர். ரஹ்மான், உலக நீரிழிவு தினத்தையொட்டி (நவம்பர் 14) விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்திருக்கிறார்.அந்தப் பதிவில், ``நண்... மேலும் பார்க்க

கங்குவா விமர்சனம்: சத்தியத்தைக் காக்கப் போராடும் சூர்யா; ஆனால் இந்தத் திரைக்கதையை யார் காப்பது?

இரண்டு காலவரிசையில் நடக்கும் கதையில் 2024-ம் ஆண்டில் குற்றவாளிகளை ரகசியமாகப் போலீசுக்குக் கண்டுபிடித்துத் தரும் 'பவுன்ட்டி ஹண்டராக' இருக்கிறார் பிரான்சிஸ் தியோடர் (சூர்யா). அதே நேரத்தில் இந்திய எல்லைப... மேலும் பார்க்க

Bloody Beggar: விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை திருப்பிக் கொடுத்தாரா நெல்சன்? - உண்மையில் நடந்தது என்ன?

இயக்குநர் நெல்சன் தயாரிப்பில், கவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'பிளடி பெக்கர்' (Bloody Beggar). தீபாவளி வெளியீடாக வந்த இந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு, அதனால் 7 கோடி ரூபாய் வரை நஷ்டம் ... மேலும் பார்க்க