செய்திகள் :

வேலூர்: சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் - 66 வயது முதியவருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை!

post image
வேலூர், கஸ்பா பகுதியைச் சேர்ந்த 66 வயது முதியவர் சேகர்.

கடந்த 2018-ம் ஆண்டு, விருதம்பட்டு பகுதியில் 12 வயது சிறுமி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட புகாரில், காட்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீஸாரால் முதியவர் சேகர் கைது செய்யப்பட்டார். அவர் மீது `போக்சோ’ வழக்கு பாய்ந்தது. இந்த வழக்கு விசாரணை, வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தீர்ப்பு அளிக்கப்பட்டது.

முதியவர் சேகர்

போக்சோ குற்றவாளியான முதியவர் சேகருக்கு 17 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. அபராதத் தொகையைக் கட்டத் தவறினால், கூடுதலாக மேலும் 6 மாத காலம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். இதையடுத்து, முதியவர் சேகர் வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

மாணவர்களை மிரட்டி தன்பாலின உறவு; விடுதிக் காப்பாளர் உள்ளிட்ட மூவர் கைது- தாராபுரத்தில் நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியின் விடுதியிஸ் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கிப் பயின்று வருகின்றனர். இந்நிலையில், விடுதியில் தங்கிப் படி... மேலும் பார்க்க

சேலம்: கஞ்சா வழக்கு கைதியை பாலியல் வதை செய்த சக கைதிகள்; அலட்சியமாக இருந்த சிறைக்காவலர்கள் சஸ்பெண்ட்

சேலம் ஆத்தூரில் மாவட்ட கிளைச் சிறை செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட கைதிகள் தண்டனைப் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனைப் பெற்றுவரும் கை... மேலும் பார்க்க

கிண்டி: அரசு மருத்துவரை கத்தியால் குத்தியது ஏன்? - கைதான இன்ஜினீயர்; விசாரணையில் வெளிவந்த தகவல்

சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருபவர் பாலாஜி ஜெகநாதன் (55). இவர் இன்று காலை (13.11.2024) பணியிலிருந்த போது அங்கு வந்த இளைஞர் ஒருவர், மருத்துவரை கத்தியால் குத்திவிட்டு ... மேலும் பார்க்க

சென்னை: நகைக்கடை ஓனருக்கு ஷாக் கொடுத்த இளம்பெண் - தங்கம், வைர நகைகளைத் திருடியது எப்படி?

சென்னை தி.நகர் டாக்டர் நாயர் சாலையில் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையை சுரேஷ் என்பவர் நடத்தி வருகிறார். தீபாவளி பண்டிகையையொட்டி இந்த நகைக்கடையில் வாடிக்கையாளர்களின் கூட்டத்தை சமாளிக்க ... மேலும் பார்க்க

கிண்டி: ``அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு கூட பாதுகாப்பு இல்லை"- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை கத்தியால் குத்தி இருக்கின்றனர்.பணியில் இருந்த மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. புற்றுநோய் துறை மருத்... மேலும் பார்க்க

கிண்டி: `அம்மாவுக்கு சரியா சிகிச்சை அளிக்கல’ மருத்துவருக்கு கத்திகுத்து; போராட்டத்தில் மருத்துவர்கள்

சென்னை கிண்டியில் அரசு பன்நோக்கு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு சரியாக சிகிச்சை அளி... மேலும் பார்க்க