பெங்களூரு: கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கேட்டரிங் பெண்!
Delhi: மோடி முன்னிலையில் டெல்லி முதல்வராகப் பதவியேற்ற ரேகா குப்தா; ரேஸில் இருந்தவர்களுக்கும் பதவி!
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த பா.ஜ.க, முதல்வர் யார் என்பதை இறுதி செய்யாமல் இழுத்தடித்து வந்தது. நேற்று மாலைதான் புதிய முதல்வர் யார் என்பதை கட்சித் தலைமை அறிவித்தது. புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரேகா குப்தா இன்று காலையில் ராம்லீலா மைதானத்தில் நடந்த விழாவில் புதிய முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார். ரேகா குப்தாவை தொடர்ந்து முதல்வர் பதவி கிடைக்கும் என்ற ஆசையில் இருந்த பர்வேஸ் சர்மா, கபில் சர்மா ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இது தவிர மஞ்ஜிந்தர், ஆசிஷ் சூட், பங்கஜ் குமார், ரவீந்தர் ஆகியோரும் அடுத்தடுத்து பதவியேற்றனர். பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சரவை சகாக்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நட்டா உள்ளிட்டோருடன் கலந்து கொண்டார்.

பா.ஜ.க ஆளும் மாநில முதல்வர்கள், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர். மற்றொரு பா.ஜ.க மூத்த தலைவர் விரேந்தர் குப்தா சபாநாயகராக அறிவிக்கப்பட்டார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சட்டமன்றத்தில் ஏற்பட்ட அமளியால் விரேந்தர் குப்தா அவையில் இருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு இப்போது அவர் சபாநாயகராக மீண்டும் அவைக்குச் செல்கிறார். பதவியேற்பு விழாவில் ஆம் ஆத்மி கட்சி எம்.பி.ஸ்வாதியும் கலந்து கொண்டார். அமைச்சராகப் பதவியேற்று இருக்கும் கபில் சர்மா இதற்கு முன்பு ஆம் ஆத்மி கட்சியில் இருந்தார். முதல்வராகப் பதவியேற்றுக்கொண்ட ரேகா குப்தாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார்.