செய்திகள் :

Doctor Vikatan: வேர்க்கடலை.. வறுத்ததா, வேகவைத்ததா... எது ஆரோக்கியமானது?

post image

Doctor Vikatan: எங்கள் வீட்டில் எல்லோருக்கும் அடிக்கடி வேர்க்கடலை சாப்பிடும் வழக்கம் உண்டு. வேர்க்கடலையை வறுத்துச் சாப்பிடுவது நல்லதா, வேகவைத்துச் சாப்பிடுவது சரியானதா... தினமும் எடுத்துக்கொள்ளலாமா?

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ்  நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

வேர்க்கடலைக்கு 'ஏழைகளின் புரதம்' என்றொரு பெயர் உண்டு.  காஸ்ட்லியான பாதாம், வால்நட்ஸை விட அதிக புரதச்சத்து வேர்க்கடலையில் இருக்கிறது. அந்தக் காலத்தில் வேர்க்கடலை உருண்டையும் வேர்க்கடலை சிக்கியும்தான் பிரபல புரத உணவுகளாக, ஆரோக்கிய நொறுக்குத்தீனிகளாக இருந்தன.

100 கிராம்  வேர்க்கடலையில் 25 கிராம் புரதச்சத்தும், கொழுப்புச்சத்து 40 சதவிகிதமும்  567 கலோரிகளும் இருக்கின்றன. வேர்க்கடலையை யார், எப்படிச் சாப்பிடலாம் என ஒரு கணக்கு இருக்கிறது. வயதானவர்களுக்கு வேகவைத்துக் கொடுப்பதுதான் சிறந்தது. வறுத்த வேர்க்கடலை அவர்களுக்கு எளிதில் செரிமானமாகாது.

குழந்தைகளுக்கும் வொர்க் அவுட் செய்வோருக்கும்கூட வறுத்த வேர்க்கடலையை விட வேகவைத்த வேர்க்கடலையே சிறந்தது. குழந்தைகளுக்கு வேர்க்கடலை சுண்டலை ஸ்னாக்ஸாக கொடுக்கலாம். புரதச்சத்து தேவையைப் பூர்த்தி செய்யும். 

வேர்க்கடலை சாப்பிட்டால் சிலருக்கு பித்தம் அதிகமாகும். அதனால் எந்த வடிவில் வேர்க்கடலையை எடுத்துக்கொண்டாலும் அளவோடு சாப்பிட வேண்டியது முக்கியம்.

வேர்க்கடலை சுண்டல்

வெறும் 100 கிராம் வேர்க்கடலையிலேயே 567 கலோரிகள் இருப்பதால், எடைக்குறைப்பு முயற்சியில் உள்ளவர்கள் இதைப் பார்த்துச் சாப்பிட வேண்டும். மற்றபடி, சைவ உணவுக்காரர்கள் புரதத்தேவைக்காவும், புரதச்சத்து குறைபாடு உள்ளவர்களும் வாரத்துக்கு 3 நாள்கள் வேர்க்கடலை எடுத்துக்கொள்ளலாம்.  குறிப்பாக, ஏதேனும் உடற்பயிற்சி செய்த பிறகோ, விளையாடி முடித்த பிறகோ தசைகளின் ஆரோக்கியத்துக்கு புரதம் தேவைப்படும் என்பதால், அந்த நேரம் வேர்க்கடலை எடுத்துக்கொள்வது நல்லது.

பொதுவாகவே, வறுத்த வேர்க்கடலையைவிடவும் வேகவைத்த வேர்க்கடலையே ஆரோக்கியமானது. எப்போதாவது ஒரு மாறுதலுக்கு வறுத்த வேர்க்கடலை சாப்பிடலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Israel - Gaza: ``என்னிடம் மூன்று செய்திகள் இருக்கிறது..." - போர் முடிவு குறித்து இஸ்ரேல் பிரதமர்!

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலின் தொடர் அத்துமீறலுக்கு எதிராக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது ஹமாஸ் குழு. ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் யஹ்யா சின்வர். தொடர்ந்து அந்த அமைப்பி... மேலும் பார்க்க

``தமிழகத்தின் இருமொழி கொள்கையை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும்'' - ப.சிதம்பரம்

"தமிழக மக்களின் எண்ணங்கள் இரு மொழிக் கொள்கைதான், அதை தமிழக அரசு பிரதிபலிக்கிறது இதனை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும்" என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.ஆளுநர் ரவி - ப.சிதம்பரம்... மேலும் பார்க்க

Israel: ``இஸ்ரேல் விவகாரத்தில் பாஜக அரசின் மௌனத்துக்கு இதுதான் காரணம்.." - செல்வப்பெருந்தகை தாக்கு

பாலஸ்தீனத்துக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து நடத்திவரும் போரை நிறுத்த வேண்டும் என அமைதிக்கான மக்கள் இயக்கம் கருத்தரங்க கூட்டம் ராயப்பேட்டை ரம்ஜான் மஹாலில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ்... மேலும் பார்க்க

தெற்கு ரயில்வே சார்பில் மதுரையில் Track Machine பராமரிப்பு நிலையம்..!

மதுரை விளாங்குடியில் முதன்முதலாக இருப்புப் பாதை பராமரிப்பு இயந்திரத்தை (Track Machine) சரிபார்க்க ஒரு பெரிய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் இருப்புப் பாதை பராமரிப்பு இயந்திரங்களை பழுது நீ... மேலும் பார்க்க

மதுரை: பல நூற்றாண்டுகளாக விவசாயத்திற்கு உதவிய கிருதுமால் நதி... கழிவுநீர் ஓடையாக மாறிய அவலம்..!

மதுரை மாவட்டம் நாகமலை அடிவாரத்தில் அமைந்த துவரிமான் கண்மாயில் உற்பத்தியாகிறது. இது மதுரையைக் கடந்து சிவகங்கை மாவட்டத்தின் கொந்தகை கண்மாயை அடைகிறது. பின் இராமநாதபுரம் மாவட்டத்தின் கீழவலசை எனுமிடத்தில் ... மேலும் பார்க்க

Pakistan: ``கடந்த காலத்தை புதைக்க வேண்டிய நேரம்'' - ஜெய்சங்கர் வருகை பற்றி நவாஸ் ஷெரிஃப் கருத்து!

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான இறுக்கத்தைத் தளர்த்த இது ஒரு நல்ல தொடக்கம் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெ... மேலும் பார்க்க