செய்திகள் :

Doctor Vikatan: திடீரென தோன்றும் மச்சம்... புற்றுநோயின் அறிகுறியா?

post image

Doctor Vikatan: மச்சம் என்பது திடீரென வருமா...  திடீரென வரும் மச்சத்தை எப்படிப் புரிந்துகொள்வது?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா  

சருமநல மருத்துவர் பூர்ணிமா

மச்சம் என்பது எப்போது வேண்டுமானாலும் வரலாம். திடீரென மச்சம் வந்தால் அதைப் பார்த்து பயப்படத் தேவையில்லை. அதே சமயம், எல்லா மச்சங்களையும் அப்படி அணுக முடியாது.

திடீரென தோன்றும் மச்சம் பலருக்கும் புற்றுநோயின் அறிகுறியாக இருக்குமோ என்ற பயத்தை ஏற்படுத்துவதைப் பார்க்கலாம். மச்சம் குறித்து நீங்கள் எப்போது கவலைப்பட வேண்டும், எச்சரிக்கையாக வேண்டும் என்பதற்கு சில அறிகுறிகள் உள்ளன.  உதாரணத்துக்கு, ஒரு மச்சம் திடீரென அளவில் பெரிதாகிக் கொண்டே போகிறது என்றாலோ, ஒரே மாதத்தில் அதன் அளவானது வித்தியாசமான அளவில் பெரிதாகிறது என்றாலோ, அந்த மச்சத்திலிருந்து நீர்க்கசிவு போன்ற ஏதேனும் இருந்தாலோ, மச்சம் இருக்கும் இடம் புண்ணாகிப் போனாலோ அது குறித்து கவனிக்க வேண்டியது அவசியம். உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

திடீரென தோன்றும் மச்சம்

சில மச்சங்களில் ஏற்படும் புண்ணானது, ஆறினாலும், மீண்டும் மீண்டும் வரலாம். அந்தப் பகுதியில் குழி போன்று வரலாம். மச்சத்தைச் சுற்றிய பகுதியானது சீராக இல்லாமலிருக்கலாம். இவையெல்லாம் அந்த மச்சமானது புற்றுநோயாக மாறக்கூடும் என்பதற்கான அறிகுறிகள். எனவே, இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். மற்றபடி, இந்த அறிகுறிகள் இல்லாமல் திடீரென தோன்றும் மச்சம் குறித்து பயப்பட வேண்டாம். மச்சம் புதிய இடங்களில் வரலாம். அது சாதாரணமானதுதான்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Kerala: `இந்து மல்லு அதிகாரிகள்' வாட்ஸ்அப் குரூப்... சர்ச்சையில் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்!

கேரள மாநிலத்தின் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குனர் கே.கோபாலகிருஷ்ணன், வேளாண் மேம்பாடு மற்றும் விவசாயிகள் நலத் துறையின் சிறப்புச் செயலர் என் பிரசாந்த் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்... மேலும் பார்க்க

``வன்மம், வயிற்றெரிச்சல்... தன் நிலை மறந்து விமர்சிக்கிறார்'' - இபிஎஸ்-ஐ கடுமையாகச் சாடிய ஸ்டாலின்!

தி.மு.க ஆட்சியைக் கண்டு எதிர்முகாமில் இருப்பவர்கள் வயிற்றெரிச்சலில் புலம்புவதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தன் நிலை மறந்து விமர்சிப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் சாடியிருக்கிறார்.எடப்பா... மேலும் பார்க்க

``சாப்பிடும்போது உணவில் நெளியும் புழு, பூச்சி" -மாணவர்கள் அதிருப்தி; பல்கலை நிர்வாகம் சொல்வதென்ன?

திருவாரூர் மாவட்டம் நீலக்குடி நாகக்குடி பகுதியில் 516 ஏக்கர் பரப்பளவில் மத்திய அரசின் மனித வளத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்.தமிழக முன்னாள் முதல்வரான கருணாநிதியின் ப... மேலும் பார்க்க

Wayanad: ``வயநாட்டிற்கு வந்த பிறகுதான் அன்பு என்ற வார்த்தையை பயன்படுத்தினேன்" - ராகுல் காந்தி!

கேரள மாநிலத்தின் வயநாடு நாடாளுமன்ற இடைத்தேர்தல் வரும் 13-ம் தேதி நடைபெற உள்ளது. இறுதிகட்ட பிரசாரம் நேற்று (நவ.11) மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி, பா.ஜ.க வேட்பாளர் ந... மேலும் பார்க்க

Ukraine War: ``ஒரு நாளுக்கு 1,500 ரஷ்ய வீரர்கள் மரணிக்கின்றனர்" - இங்கிலாந்து தகவல்

ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் தொடுத்திருக்கும் 3 ஆண்டுகளில் இப்போதுதான் ரஷ்ய படைகள் மிகவும் மோசமான கட்டத்தில் இருக்கின்றன என்று பிரிட்டன் ஆயுதபடைத் தலைவர் தெரிவித்துள்ளார்.கடந்த அக்டோபர் மாதத்தில் நாளொ... மேலும் பார்க்க

பா.ஜ.க-வுடன் உறவா? பகையா? குழப்பியடிக்கும் எடப்பாடி!

கடந்த நவம்பர் 6-ம் தேதி எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைபெற்ற அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், ' தி.மு.க-தான் நமது எதிரி. அவர்களை மட்டும் விமர்சனம் செய்தால்போதும். வேறு யாரையுமே விமர்சனம் செய்ய அவசி... மேலும் பார்க்க