திருமணத்தை நிறுத்திவிட்டு, கட்டிப்பிடித்த மணமகனிடம் கட்டணம் வசூல் செய்த சீனப்பெண...
Dude: "உங்களில் ஒருவராக என்னைப் பார்க்கிறீர்கள்; அதற்கு நன்றி" - ரசிகர்கள் குறித்து மமிதா பைஜூ
பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் `டூட்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.
பிரதீப்புடன் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார். சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் `டூட்' படத்தை இயக்கியிருக்கிறார்.
ரோகினி, சரத்குமார் ஆகியோர் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.
சாய் அபியங்கர் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (அக்டோபர் 13) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய மமிதா பைஜூ, " மிகப்பெரிய அன்பு கொடுத்து சப்போர்ட் செய்யும் ரசிகர்களுக்கு நன்றி.
உங்களில் ஒருவராக என்னைப் பார்க்கிறீர்கள். அதற்கு ரொம்ப நன்றி. இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று.
இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த கீர்த்தீஸ்வரன் அண்ணாவுக்கு நன்றி. எனக்கு ரொம்ப சப்போர்ட் செய்த பிரதீப் சாருக்கும் நன்றி.
நிறைய அவரிடம் இருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன். நான் படப்பிடிப்பில் அமைதியாக இருந்தால் சரத் சார் வந்து ஏன் என்னாச்சு உனக்கு என்று கேட்பார்.
யாரும் அதை கவனித்து இருக்க மாட்டார்கள். ஆனால் அவர் கவனித்து என்னிடம் கேட்பார்.

அந்த அளவிற்கு அன்பு வைத்திருக்கிறார். ஏற்கனவே நான் சாய் உடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் அது கை கூடவில்லை. இந்த முறை அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருக்கிறது. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி" என்றார்.