மகன் திருமணத்துக்கு சென்றபோது திடீர் மாரடைப்பு - கோவை செல்வராஜ் மரணம்
EICMA 2024: மாருதியின் முதல் எலெக்ட்ரிக் கார் இதோ!
EICMA: இத்தாலியில் நடக்கும் கார்/பைக் கண்காட்சி! மாருதியின் முதல் எலெக்ட்ரிக் கார் இதோ!
நம் தலைநகர் டெல்லியில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஆட்டோ எக்ஸ்போ தெரியும்தானே! அதைப்போன்று இத்தாலியில் EICMA (Esposizione Internazionale Ciclo Motociclo e Accessori) என்றொரு ஆட்டோ ஷோ நேற்றிலிருந்து நடந்து கொண்டிருக்கிறது. இதில் நம் ஊர் நிறுவனங்கள் பல தங்களுடைய வாகனங்களை ரிவீல், லாஞ்ச் செய்து கலக்கி வருகிறார்கள்.
இதில்தான் நேற்று ராயல் என்ஃபீல்டு தனது எலெக்ட்ரிக் பைக்கான C6 எனும் பாபர் ஸ்டைல் க்ளாஸிக் பைக்கை அறிமுகப்படுத்தியது. ‛சரி; அதுக்கென்ன இப்போ’ என்று அசால்ட்டாக இதைக் கடந்து போய்விட முடியாது. இங்கே அன்வீல் செய்யப்படும் கான்செப்ட் வாகனங்கள்தான், கொஞ்ச மாதங்களில் நம் ஊரில் சாலைகளில் புரொடக்ஷன் மாடலாக ஓடக் காத்திருக்கும். 10-ம் தேதி வரை இந்தக் கண்காட்சி நடக்க இருக்கிறது. இப்போது வரை ஒரு முக்கியமான 4 வாகனங்களைப் பற்றிப் பார்க்கலாம்.
போன ஆட்டோ எக்ஸ்போவில் ஏற்கெனவே eVX எனும் கான்செப்ட் காரைக் காட்சிப்படுத்தி இருந்தது மாருதி சுஸூகி. அந்தக் காரின் புரொடக்ஷன் மாடல்தான் இந்த எலெக்ட்ரிக் கிராண்ட் விட்டாரா. 4.27 மீட்டர் நீளம்; 2.7 மீட்டர் வீல்பேஸ், 180 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், 19 மற்றும் 18 இன்ச் ஸ்டைலிஷான அலாய்வீல்கள் என்று கலக்குகிறது இ-கிராண்ட் விட்டாரா. எலெக்ட்ரிக் ஆச்சே! இதன் பேட்டரி பேக் பற்றிப் பாருங்கள். 49kWh மற்றும் 61kWh பேட்டரி பேக்கில் வரப் போகிறது இது. உலகப்புகழ்பெற்ற சீன நிறுவனமான BYD -இடம் இருந்து பெறப்பட்ட LFP பிளேடு பேட்டரியுடன் வருகிறது கிராண்ட் விட்டாரா. இதில் AWD - ஆல்வீல் டிரைவ் என்றால் 144hp மற்றும் 174hp பவரும்…. RWD -அதாவது ரியர்வீல் டிரைவ் என்றால், 184hp பவரும் 300Nm டார்க்கும் கொண்டிருக்கும். சிவப்பு, சில்வர், புளூ, சிவப்பு, கிரே என்று பல கலர்களில் வருகிறது இ- கிராண்ட் விட்டாரா. இது அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகலாம். இதுதான் மாருதியின் முதல் எலெக்ட்ரிக் கார்.