செய்திகள் :

Gold: உச்சத்தில் இருக்கும் தங்கம் விலை; உலகின் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு - எங்கே?

post image

உலகம் முழுவதும் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், சீனாவில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது உலக தங்கச் சந்தையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள பிங்ஜியாங் கவுண்டியில் சீன புவியியலாளர்கள் இந்த மிகப் பெரிய தங்கச் சுரங்கத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

தங்கச் சுரங்கம்

இங்கு சுமார் 1,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான தங்கம் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது சீனா அரசு ஊடகமான சின்ஹுவாவால் அக்டோபர் தொடக்கத்தில் உறுதி செய்யப்பட்டது.

முதற்கட்ட மதிப்பீடுகளின்படி, 2,000 மீட்டர் ஆழத்தில் 300 டன் தங்கம் உடனடியாகக் கிடைக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுரங்கத்தில் 40க்கும் மேற்பட்ட தங்கம் கொண்ட பாறைப் படிவங்கள் உள்ளன. இங்கு எடுக்கப்பட்ட மாதிரிகளில், ஒரு டன் தாதுவுக்கு 138 கிராம் வரை தங்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, இது மிகவும் உயர் தரமானதாகக் கருதப்படுகிறது.

ஆனால் 2,000 முதல் 3,000 மீட்டர் ஆழத்தில் இருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது பெரும் சவாலாக இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்கம் | Gold

அதிக பாறை அழுத்தம், நிலத்தடி நீர் கட்டுப்பாடு மற்றும் காற்றோட்ட வசதிகளை ஏற்படுத்துவது போன்ற தொழில்நுட்ப சிக்கல்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்தக் கண்டுபிடிப்பில் இருந்து உற்பத்தியைத் தொடங்க 10 முதல் 20 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று டைம்ஸ் ஆப் இந்தியா வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை வரலாற்று உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இந்தக் கண்டுபிடிப்பு உலகப் பொருளாதாரத்தில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No Marriage: 'கென்ஸ்' இருந்தால் போதும், கணவர் வேண்டாம் - சீனாவில் வைரலாகும் வினோத டிரெண்ட்!

திருமணம் என்ற கலாச்சாரம் ஒவ்வொரு காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கிறது. தற்போது இருக்கும் தலைமுறையினர்கள் தங்கள் சொந்த விருப்பங்களுக்கும், சுதந்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர... மேலும் பார்க்க

போலாந்து: 15 வயதில் மகளைப் பூட்டி வைத்த பெற்றோர்; 42 வயதில் காவலர்களால் மீட்கப்பட்டது எப்படி?

போலாந்து நாட்டில் 15 வயது மகளை, பெற்றோர் 27 ஆண்டுகளாக ஒரு சிறிய அறைக்குள் பூட்டி வைத்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. நடக்கக் கூட முடியாத நிலையில் 42 வயதில் அந்தப் பெண் மீட்கப்பட்டுள்ளார்.போலாந்தீன் ஸ்விட... மேலும் பார்க்க

ஆன்லைன் ஆர்டர்: 2 ஆண்டுகள் ஏமாற்றி ரூ.21 லட்சத்துக்கு உணவு சாப்பிட்ட நபர் - சிக்கியது எப்படி?

ஜப்பானில் உள்ள பிரபல உணவு டெலிவரி செயலி ஒன்றில், 'ஆர்டர் செய்த உணவு வரவில்லை' எனப் பொய் கூறி, கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 1,095 முறை பணத்தைத் திரும்பப் பெற்று, ரூ.21 லட்சம் மதிப்புள்ள உணவை உண்டு ஏம... மேலும் பார்க்க