Telangana: திருநங்கை தன்னார்வலர்களை போக்குவரத்து காவலில் ஈடுபடுத்த திட்டம்; ரேவந...
Gold Price: 'இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,320 குறைவு!' - காரணம் என்ன?!
'குறையுமா...குறையாதா?...இப்படி ராக்கெட் வேகத்துல ஏறிகிட்டு இருக்கே' என்று எதிர்பார்த்துகொண்டிருந்த மற்றும் பேசப்பட்டு கொண்டிருந்த தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.1,320 குறைந்துள்ளது.
கடந்த மாதம் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு கிட்டதட்ட ரூ.2,500 உயர்ந்தது. விரைவில் ரூ.60,000-த்தை தொட்டுவிடும் என்று நினைத்துகொண்டிருந்த நிலையில், புதிய இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது தங்கம் விலை.
நேற்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.7,365-க்கும், பவுன் ஒன்றுக்கு ரூ.58,920-க்கும் விற்பனை ஆனது. இன்று கிராமுக்கு ரூ.165 குறைந்து ரூ.7,200 ஆகவும், பவுனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ.57,600 ஆகவும் விற்பனை ஆகி வருகிறது.
இந்த திடீர் விலை குறைவிற்கு முக்கிய காரணம், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளட்ரம்பின் வெற்றி. பெரும்பாலும் தங்கம் விலை அமெரிக்காவின் சந்தை, மாற்றங்கள் பொறுத்தே அமையும். நேற்று ட்ரம்பின் வெற்றிக்கு பிறகு, முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை தொழில் நிறுவனங்கள் பக்கம் திருப்பியதால், தங்கம் மீதான முதலீடுகள் குறைந்தது. இதையொட்டி, தங்கம் விலை குறைந்துள்ளது.
தங்கம் விலை மட்டுமல்லாமல், இன்று வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.102-க்கு விற்பனை ஆகி வருகிறது.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY