செய்திகள் :

GRT: தங்க தீபாவளிக்கு இரட்டிப்பு சந்தோஷம்

post image

ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் 1964 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை, இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் நகை நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. அவர்களின், காலத்தால் அழியாத வடிவமைப்புகள், சிறந்த கைவினைத்திறன் மற்றும் பல தலைமுறைகளாக வாடிக்கையாளர்களின் நீடித்த நம்பிக்கை ஆகியவற்றால் மக்கள் மத்தியில் போற்றப்படுகிறது. அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, வாடிக்கையாளர்களின் மிகவும் அர்த்தமுள்ள நிகழ்வுகளில், தங்களது பாரம்பரிய மற்றும் நவீன வடிவமைப்பு நகைகளால் ஓர் அங்கமாகும் மரபை இந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. இன்று, தென் இந்தியாவில் 65 மற்றும் சிங்கப்பூரில் 1 கிளை என மொத்தம் 66 ஷோரூம்களுடன் ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் இயங்கி வருகிறது. தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் விலையுயர்ந்த ரத்தினக் கற்கள் போன்ற கலெக்ஷகளை வழங்குகிறது. 

GRT
GRT

ஒவ்வொரு தீபாவளியிலும், ஜி.ஆர்.டி. அதன் பிரத்தியேக ‘தங்கத்திற்கு வெள்ளி இலவசம்’ என்ற அதன் பிரச்சாரத்தை கொண்டு வருகிறது, இந்த ஆண்டும் அதற்கு விதிவிலக்கல்ல. ஒவ்வொரு தங்க நகை வாங்கும் போதும், வாடிக்கையாளர்கள் சமமான எடையுள்ள வெள்ளியை முற்றிலும் இலவசமாகப் பெறுவார்கள், மேலும் தங்க நகைகளுக்கு கிராமிற்கு ரூ.100 குறைவாக கிடைக்கும். இந்த இரட்டை பலன்கள் பண்டிகை காலத்தை மேலும் சிறப்பானதாக்குகிறது. இந்த பிரச்சாரம், தமிழ்நாட்டில் தங்க தீபாவளி என்ற பெயரிலும், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் ஸ்வர்ண தீபாவளி என்ற பெயரிலும் முன்னெடுத்து நடத்தப்படுகிறது. 

இது குறித்து ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி. ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் மேலும் கூறியதாவது: “தீபாவளி என்பது வெறும் விளக்குகள் மற்றும் கொண்டாட்டங்களைப் பற்றியது மட்டுமல்ல, நாம் விரும்பும் மக்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதும் கூட. ஜி.ஆர்.டி.-இல், ஒவ்வொரு நகையும் அந்த நினைவுக்கூர்ந்த தருணங்களின் ஒரு பகுதியாக உருவாக்கப்படுகிறது.

GRT
GRT

இந்த திருவிழா காலத்தை நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுடன் கொண்டாடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். அதுமட்டுமல்லாது, எங்கள் 'கோல்டன் லெவன் ஃப்ளெக்ஸி' நகை சேமிப்புத் திட்டத்திற்கு கிடைத்த உற்சாகமான வரவேற்பிற்கு நாங்கள் குறிப்பாக நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், மேலும் எங்கள் வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான நம்பிக்கை மற்றும் ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கிறோம்.” என்றார்.

சென்னை: பூந்தமல்லியில் போத்தீஸ் ஸ்வர்ண மஹாலின் 7 வது கிளை திறப்பு

போத்தீஸ் குழுமத்தின், அங்கமான போத்தீஸ் ஸ்வர்ண மஹால் தனது 7வது கிளையை, சென்னை பூந்தமல்லியில் Oct 5ம் தேதி துவங்கி இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். போத்தீஸ் ஸ்வர்ண மஹாலின் நகை க... மேலும் பார்க்க

பிரின்ஸ் ஜுவல்லரி: பழைய தங்கத்திற்கு புதிய மதிப்பு தரும் Gold Exchange Festival

தென் இந்தியாவின் மிக நம்பகமான நகைக்கடைகளில் ஒன்றான பிரின்ஸ் ஜுவல்லரி, தனது Gold Exchange Festival-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களிடம் இருக்கும் பழைய, பயன்படுத்தப்படாத நகைகள... மேலும் பார்க்க

`டவுசர் கடை' சாப்பாடு: கோலா உருண்டை முதல் மட்டன் சுக்கா வரை; 81 வயதில் அசத்தும் ராஜேந்திரன் தாத்தா

சென்னை மந்தைவெளி டவுசர் கடைஒவ்வொரு நாகரிக சூழலுக்கு ஏற்றவாறு காலந்தோறும் உணவு முறையும் அதன் மீதான மோகமும் மக்களிடையே அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும். ஆனால் 1977-ல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு உணவகம் இன்றும்... மேலும் பார்க்க

`StartUp' சாகசம் 42: "பாலில் கொட்டிக் கிடக்கும் லாப பிசினஸ்" - நம்பிக்கை தரும் `தமிழ் பால்' நிறுவனம்

உலகளாவிய பால் உற்பத்தியில் இந்தியா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. 2023-24ம் ஆண்டில் நாட்டின் பால் உற்பத்தி 239.3 மில்லியன் டன்னைத் தாண்டி சாதனை படைத்தது. உலக விநியோகத்தில் சுமார் 25 சதவிகித பங்களிப்பு... மேலும் பார்க்க

GRT: அன்னதானம், சத்திர கட்டுமானத்திற்காக ரூ. 50 லட்சத்தை நன்கொடையாக வழங்கிய ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்!

இந்தியாவின் முன்னணி நகை நிறுவனங்களில் ஒன்றான ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் உண்மையான வெற்றி என்பது வணிகத்தைத் தாண்டி அதன் பிறகு மதிப்பை உருவாக்குவதில் உள்ளது என்று நம்புகிறது. ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக இந்த நிற... மேலும் பார்க்க

SharonPly: முன்னாள் இராணுவ அதிகாரிகளை கௌரவித்த ஷரான் பிளை–ன் 6 வது ‘ஐ ஆம் ஸ்ட்ராங்கஸ்ட்’ விருதுகள்

சமீபத்திய “ஆபரேஷன் சிந்தூர்” நம் நாட்டின் வெற்றிக்கும், புகழுக்கும் பின்புல ஆதரவை வழங்கிய குரல்களுக்கு சொந்தக்காரர்களான பாதுகாப்பு பகுப்பாய்வாளர்களாக தங்களை மாற்றிக் கொண்டிருக்கும் ஓய்வுபெற்ற முன்னாள்... மேலும் பார்க்க