செய்திகள் :

Ind vs Aus: ``ஆரம்பத்தில் எங்கள் மீது ப்ரஷர் இருந்தது; ஆனால்..!’’ - வெற்றி குறித்து கேப்டன் பும்ரா

post image

இந்தியா ஆஸ்திரேலியா நாடுகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின் முதல் போட்டியை வென்றுள்ளது இந்திய அணி. வேகப் பந்துவீச்சாளர் பும்ரா கேப்டனாக செயல்பட்ட இந்த போட்டியை 4 வது நாளில் வென்றது இந்தியா.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆனால் ஆஸ்திரேலியாவை 104 ரன்களுக்குள் சுருட்டியது. இரண்டாவது இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி சதம் விளாச, 487 ரன்கள் குவித்து, 6 விக்கெட் இழந்த நிலையில் டிக்ளர் செய்தது இந்திய அணி.

இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் அதிகபட்சமாக 89 ரன்கள் அடிக்க, 238 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலியா. இதன்மூலம் முதல் போட்டியைக் வென்றது இந்தியா.

முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளும் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்களும் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார் கேப்டன் பும்ரா.

கேப்டன் பும்ரா

போட்டிக்குப் பிறகு பும்ரா பேசியதாவது, "இது மகிழ்ச்சியளிக்கக் கூடிய தொடக்கம். ஆரம்பத்தில் எங்கள் மீது ப்ரஷர் இருந்தது, ஆனால் நாங்கள் அதற்கு பதிலளித்த விதம் பெருமையாக இருந்தது.

நான் 2018-ம் ஆண்டில் இங்கு விளையாடினேன். இங்கு ஆரம்பத்தில் விக்கெட் மெதுவாக இருக்கும். ஆனால் போகபோக வேகமெடுத்துவிடும். நான் அந்த அனுபவங்களை நம்பியிருந்தேன்.

நாங்கள் மிக நன்றாக தாயாராகியிருந்தோம். ஒவ்வொருவரையும் அவர்களது செயல்முறையிலும் திறமையிலும் நம்பிக்கைக்கொண்டிருக்கும்படி கூறினேன்.

அனுபவம் முக்கியம்தான். ஆனால் உங்கள் மீது நீங்கள் நம்பிக்கையுடன் இருந்தால் நிச்சயம் சிறப்பான ஒன்றை செய்ய முடியும். அதைவிட வேறொன்றைக் கேட்க முடியாது.

Team India

ஜெய்ஸ்வால் அவரது டெஸ்ட் கெரியரில் சிறந்த தொடக்கத்தைப் பெற்றிருந்தார். இதுதான் அவரது சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ். அவர் பந்தை அடித்து ஆடும் சுபாவம் கொண்டவர். ஆனால் இன்று சில பந்துகளை விட்டு விலகி, சிறப்பாக ஆடினார்.

விராட்டைப் பொறுத்தவரையில் அவரை அவுட் ஆஃப்-ஃபார்மாக நான் என்றுமே காணவில்லை. சவாலாக விக்கெட் விழும்போது பேட்ஸ்மேன் ஃபார்மில் இருக்கிறாரா இல்லியா எனக் கூறுவது கடினம். நெட்ஸில் அவர் சிறப்பாக விளையாடினார். ரசிகர்களின் சப்போர்டை என்ஜாய் செய்தோம்." என்றார்.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், "நிச்சயம் இது ஒரு ஏமாற்றம்தான். நாங்கள் தயாரான விதம் சரியாக இருக்கிறது என நினைத்தோம். இது எதுவும் சிறப்பாக செல்லாத ஒரு ஆட்டம்.

Pat Cummins

தோல்விக்குப் பிறகு நாம் விரைவாக மீண்டெள வேண்டும். ஆனால் நாங்கள் அடிலெய்ட் (அடுத்த ஆட்டம் நடக்கும் மைதானம்) செல்லும் முன் இரண்டு நாட்கள் ஓய்வெடுக்கிறோம்." என்றார்.

மேலும் தோல்விக்கான காரணம் குறித்து, "முதல் நாளின் பிற்பகுதியை நாங்கள் வெற்றிகரமாக கடந்திருந்தால் இரண்டாம் நாள் வேறுமாதிரி இருந்திருக்கும்.

பேட்டிங்கில் நிறைய அனுபவம் வாய்ந்தவர்கள் இருந்தனர். இது ஒரு சாம்பிள்தான். இந்த தோல்வி குறித்து நிறைய விவாதங்கள் நடக்கும், நிறைய நேரம் நெட் பிராகடீஸ் இருக்கும். நாங்கள் வித்தியாசமாக என்ன செய்திருக்கலாம் என்பதை விவாதிப்போம்" என்றார்.

மேலும் பத்திரிகையாளர் சந்திப்பில், "இப்போதும் நாங்கள்தான் நம்பர் ஒன் டெஸ்ட் அணி. இந்த வாரம் அதை மாற்றிவிடாது" என நம்பிக்கையுடன் பேசினார் பேட் கம்மின்ஸ்!

IPL Auction: ரூ.30 லட்சம் டு 6 கோடி! - ஆர்சிபி போட்டி போட்டு வாங்கிய ராஷிக் சலாம் யார்?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் வருகிற மார்ச் மாதம் நடைபெற இருக்கிறது. 2025 ஆம் ஆண்டிற்கான இந்த தொடரை முன்னிட்டு வீரர்களுக்கான ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில... மேலும் பார்க்க

IPL Mega Auction: 'டேவிட் வார்னர், பேர்ஸ்ட்டோ..' - ஏலத்தில் Un Sold ஆன பிரபல வீரர்கள் யார் யார்?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18வது சீசன் வருகிற மார்ச் மாதம் நடைபெற இருக்கிறது.இந்த தொடரை முன்னிட்டு வீரர்களுக்கான ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் பல முன்னண... மேலும் பார்க்க

Ashwin: "வாழ்க்கை ஒரு வட்டம்னு சொல்லுவாங்க..!" - csk அணியில் இணைந்தது குறித்து அஷ்வின்

ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்று வருகிறது.நேற்று நடைபெற்ற ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏழு வீரர்களை வாங்கி இருக்கிறது. நூர் அகமது, ரவிச்சந்திரன் அஷ்வின், டெவான் கான்வே, கல... மேலும் பார்க்க

IPL Mega Auction: `நடராஜனுக்காக போட்டியிட்ட 3 அணிகள்' - ரூ.10 கோடியை தாண்டிய ஏலம்

ஐ.பி.எல் மெகா ஏலம் சவுதியில் நடந்து வருகிறது. 500 வீரர்களுக்கும் மேல் இந்த ஏலத்தில் கலந்துகொண்டிருக்கின்றனர். இதில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கான செட் ஒன்று ஏலம் விடப்பட்டது. இந்த செட்டில் தமிழக வீரரான... மேலும் பார்க்க

AUSvIND: `நான் வந்துட்டேன்னு சொல்லு' அதிரடி கோலி; தடுமாறும் ஆஸ்திரேலியா- பெர்த் டெஸ்ட் Day 3 Report

பெர்த் டெஸ்ட்டின் மூன்றாவது நாள் ஆட்டம் நடந்து முடிந்திருக்கிறது. ஜெய்ஸ்வாலின் அசாத்திய இன்னிங்ஸ், கோலியின் சதம், நிர்ணயிக்கப்பட்ட பெரிய டார்கெட் என எல்லாமே இந்திய அணிக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. மூ... மேலும் பார்க்க

Yashaswi Jaiswal : `மும்பையின் குடிசைவாசி டு பெர்த் Standing Ovation!' - எளியவனின் சரித்திர வெற்றி

'இது கதைகள் உருவாக்கப்படுவதற்கான இடம், இது கதைகள் சொல்லப்படுவதற்கான இடம், இது கதைகள் பகிரப்படுவதற்கான இடம். இன்று நாம் இன்னொரு புதிய கதையை உருவாக்கி இங்கிருந்து உலகிற்கு பகிரப் போகிறோம்.' பூர்வக்குடிக... மேலும் பார்க்க