செய்திகள் :

Investments: `ரிஸ்க் இல்லாத முதலீடுகள்… லாபம் கேரண் டி!' - இதை ட்ரை பண்ணுங்க!

post image
யாருக்கு தான் நம்ம காசு பெருகினால் பிடிக்காமல் இருக்கும்... ஆனால், ரிஸ்க் நினைத்து பார்த்தால் பயம். கொஞ்சம் பின்னால் திரும்பி பார்த்தால், குழந்தைகள் படிப்பு செலவு, கல்யாண செலவு என பல செலவுகள் நிற்கின்றன. பயம் வேண்டாம்...இந்த செலவுகளுக்கு ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்து லாபம் பெறலாம். அந்த ஆப்ஷன்களை பார்க்கலாம்...வாங்க...

சுகன்யா சம்ருதித் திட்டம்

பெண் குழந்தைகளுக்கான கல்வி மற்றும் திருமணத்திற்கு இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.250 முதல் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும்.

பெண் குழந்தைக்கு 10 வயது ஆகும் வரை இந்த திட்டத்தில் சேரலாம். ஆனால், ஒரு பெண் குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும்.

பெண் குழந்தைக்கு 18 வயது ஆகும்வரை அவர்களின் பொறுப்பாளர்கள் இந்தக் கணக்கை பராமரிக்கலாம். அதன் பிறகு, குறிப்பிட்ட பெண் குழந்தைக்கே அந்தப் பொறுப்பு சென்றுவிடும். இந்த கணக்கு பெண் குழந்தையின் 21 வயதில் முதிர்வடையும்.

இதற்கிடையில், அந்தப் பெண்ணிற்கு கல்யாணம் ஏற்பாடு செய்யப்பட்டால் உரிய ஆவணங்களை காட்டி பணம் பெற்றுக் கொள்ள முடியும். மேலும், படிப்பு செலவிற்காக சேமிப்புத் தொகையில் 50 சதவிகிதத்தை பெற்றுகொள்ளலாம்.

சுகன்யா சம்ருதித் திட்டத்தில் கிடைக்கக்கூடிய வட்டி ஆண்டுக்கு 8.2 சதவிகிதம் ஆகும்.

பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட்

பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட்

இது பெரியவர்கள், சிறியவர்கள் என யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். ஆண் குழந்தைகளின் கல்வி மற்றும் கல்யாண செலவுகளுக்கு இது நல்ல சாய்ஸ்.

ரூ.500 முதல் ரூ.1.5 லட்சம் வரையான முதலீட்டு மூலம் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு கிடைக்கும் பிராவிடன்ட் ஃபண்ட் வட்டி விகிதம் எதுவோ, அதே வட்டி விகிதம் தான் இந்தத் திட்டத்தில் பயன்பெறுபவர்களுக்கு கிடைக்கும் என்பது இந்தத் திட்டத்தின் சிறப்பு.

கணக்குத் தொடங்கிய நிதி ஆண்டு இல்லாமல், அதன் பிறகான 15 நிதி ஆண்டுகள் முடிந்த பின் இந்தத் திட்டத்தின் கணக்கு முதிர்வு பெறும். அதன் பிறகு, நமக்கு வேண்டுமானால் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் இந்தக் கணக்கை சந்தா கட்டியோ, கட்டாமலோ நீட்டிக்கலாம்.

இந்தத் திட்டத்தில் முதலீட்டிற்கு கிடைக்கும் வட்டி 7.1 சதவிகிதம் ஆகும்.

ரெக்கரிங் டெபாசிட்

டூர், கார் வாங்குதல், வீடு கட்டுதல் போன்ற குறுகிய கால பிளான்களுக்கு குறிப்பிட்ட ஒரு தொகையை இதில் முதலீடு செய்யலாம்.

தபால் நிலையத்திலோ, வங்கியிலோ இந்தத் திட்டத்திற்கு இணையலாம். தபால் நிலையம் மற்றும் வங்கிகளுக்கு ஏற்ப வட்டி விகிதம் மாறுபடும். நீண்ட கால தேவைகளுக்கும் இந்த முதலீடு நல்ல ஆப்ஷன் தான்.

இதன் வட்டி விகிதம் 6 - 7 சதவிகிதம்.

ரிஸ்க்...?

தேசிய சேமிப்புப் பத்திரம்

இந்தப் பத்திரத்தில் முதலீடு செய்யும்போது வட்டியானது ஆண்டுக்கு ஒருமுறை அசலுடன் சேர்ந்து கூட்டு வளர்ச்சி பெறும். இதன் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். 10,000 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். வரம்பு கிடையாது. இந்தப் பத்திரத்தை அடகு வைத்து கடன் பெற முடியும்.

மாதாந்தர வருமானத் திட்டம்

ஆரம்பத்தில் ஒரு தொகையை டெபாசிட் செய்துவிட வேண்டும். பின்னர், மாதா மாதம் அதற்கான வட்டி நமக்கு கிடைக்கும். இதில் குறைந்தது ரூ.1000 முதல் டெபாசிட் செய்யலாம். இதன் முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.

10 வயதுக்கு மேல் இருந்து இந்தத் திட்டத்தில் சேரலாம். இதன் வட்டி விகிதம் 7.4 சதவிகிதம் ஆகும். இப்போது கையில் காசு இருக்கிறது...கொஞ்ச நாள் கழித்து கிடைத்தால் போதும் என்பவர்கள் இதில் முதலீடு செய்து ஒருவித லாபம் பெற முடியும்.

இந்த முதலீடுகளில் பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்டுகளை விட, குறைவான வட்டி விகிதங்கள் தான் கிடைக்கின்றன. ஆனால், ரிஸ்க் மிக மிக குறைவு மற்றும் இவை பாதுகாப்பான முதலீடுகள் ஆகும்.

`அனைவருக்கும் பென்ஷன்'- என்ன திட்டம் அது? நாம் செய்ய வேண்டியதென்ன?

'பென்சன்' - ஓய்வுக்கு பிறகு பெரும்பாலானவர்கள் நம்பியிருக்கும் ஒன்று. இது அனைவருக்கும் கிடைக்கும் என்று கூறமுடியாது.அரசு வேலைகளில் இருப்பவர்கள், சில தனியார் நிறுவனங்களில் பணிப்புரிபவர்களுக்கு மட்டுமே ப... மேலும் பார்க்க