செய்திகள் :

IPL Mega Auction : '4.80 கோடிக்கு மும்பை வாங்கிய ஆப்கன் ஸ்பின்னர்!' - யார் இந்த அல்லா கஷன்ஃபர்?

post image
ஐ.பி.எல் மெகா ஏலம் சவுதியில் இரண்டாம் நாளாக நடந்து வருகிறது. இந்த ஏலத்தில் ஸ்பின்னர்கள் செட்டில் வந்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த அல்லா கஷன்ஃபர் என்கிற வீரரை மும்பை அணி 4.80 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறது. யார் இந்த அல்லா கஷன்ஃபர்?

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு நல்ல ஸ்பின்னர் வேண்டும் என்பது மிகப்பெரிய தேவையாக இருந்தது. அந்தத் தேவையை தீர்த்துக் கொள்ளும் வகையில் ஸ்பின்னர்கள் செட்டிலிருந்து அல்லா கஷன்ஃபர் என்கிற வீரரை மும்பை அணி வாங்கியிருக்கிறது. அவரின் அடிப்படை விலை 75 லட்சம்தான். ஆனால், கொல்கத்தா மும்பையும் இவர் மீது ஒரு சேர ஆர்வம் காட்டி இவரின் விலையே ஏற்றினர். 4 கோடியை தாண்டும் போதுதான் கொல்கத்தா அணி கொஞ்சம் சுதாரித்தது. ஏனெனில், அந்த சமயத்தில் அவர்களின் கையில் கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய்தான் இருந்தது. அதுபோக அணியிலும் 14 வீரர்களை மட்டுமேதான் வைத்திருந்தனர். குறைந்தபட்சமாக இன்னும் 4 வீரர்களை அவர்கள் எடுக்க வேண்டும் என்பதால் கொல்கத்தா ரேஸிலிருந்து பின் வாங்கியது. மும்பை அணி 4.80 கோடிக்கு அல்லா கஷன்ஃபரை வாங்கியது.

கடந்த மார்ச் மாதம் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில்தான் அவர் ஆப்கானிஸ்தான் அணிக்காக அறிமுகமாகியிருந்தார். முதல் போட்டியிலேயே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். சமீபத்தில் நடந்த Emerging Asia Cup தொடரில் ஆப்கானிஸ்தான் அணி வென்றிருந்தது. அந்தத் தொடரில் 4 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தார். வலதுகை மிஸ்டரி ஸ்பின்னரான இவர் உலகெங்கும் நடக்கும் லீக் போட்டிகளிலும் ஆடி வருகிறார். 16 டி20 போட்டிகளில் ஆடி 29 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். எக்கானமி ரேட் 6 க்கும் கீழாக இருக்கிறது. கடந்த ஆண்டில் கொல்கத்தாவின் முஜீபிர் ரஹ்மான் காயம் காரணமாக விலக, அவருக்குப் பதில் அல்லா மாற்று வீரராக வாங்கப்பட்டிருந்தார். ஆனால், எந்தப் போட்டியிலும் அவருக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை.

Allah Ghazanfar

அல்லா கஷன்ஃபரின் திறமையை உணர்ந்ததால்தான் மும்பை அணி கொல்கத்தாவுடன் சண்டையிட்டு அல்லா கஷன்ஃபரை அள்ளி வந்திருக்கிறது.

IPL Mega Auction : 'சென்னையில் மீண்டும் சாம் கரண்; வரிசையாக Unsold ஆன வீரர்கள்!' - ஏல அப்டேட்ஸ்!

ஐ.பி.எல் மெகா ஏலம் சவுதியில் இரண்டாம் நாளாக இன்று நடந்து வருகிறது. இன்றைய நாளின் தொடக்கத்திலேயே சென்னை அணி சாம் கரனை ஏலத்தில் எடுத்திருக்கிறது.Sam Curranசாம் கரண் கடந்த 2020 மற்றும் 2021 சீசன்களில் செ... மேலும் பார்க்க

Aus v Ind : 'ஆதிக்கம் செலுத்திய பும்ரா & கோ'- பெர்த்தில் இமாலய வெற்றி சாத்தியமானது எப்படி?

பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியை இந்திய அணி அபாரமாக வென்றிருக்கிறது. 534 ரன்களை டார்கெட்டாக நிர்ணயித்து 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் ஒரு பெரிய தொடரின் முத... மேலும் பார்க்க

IPL Mega Auction: 'அஷ்வினுக்கு ஏன் 9 கோடி கொடுத்தோம் தெரியுமா?' - பயிற்சியாளர் ஃப்ளெம்மிங் விளக்கம்

ஐ.பி.எல் மெகா ஏலம் நேற்று நடந்திருந்தது. இந்த ஏலத்தில் சென்னை அணி முதல் நாளில் 7 வீரர்களை வாங்கியிருந்தது. அதில் அஷ்வினை சென்னை அணி வாங்கியதைத்தான் அத்தனை பேரும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், அஷ்... மேலும் பார்க்க

IPL Mega Auction: 'கம்பேக் அஷ்வின்; டாப் ஆர்டருக்கு திரிபாதி!' - ஏலத்தில் சென்னை எப்படி செயல்பட்டது?

ஐ.பி.எல் மெகா ஏலத்தின் முதல் நாள் முடிந்திருக்கிறது. எல்லா அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை கோடிகளை கொட்டி அள்ளியிருக்கின்றன. சென்னை அணியின் ஏல மேஜையும் நேற்று பரபரப்பாகவே இருந்தது. நேற்று மட்டும்... மேலும் பார்க்க

IPL Mega Auction : 'முதல் நாள் முடிவில் எந்தெந்த அணியில் எந்தெந்த வீரர்கள்?' - முழு விவரம்!

ஐ.பி.எல் மெகா ஏலம் சவுதியில் நடந்து வருகிறது. முதல் நாள் ஏல நிகழ்வு முடிந்திருக்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை முதல் நாளில் எடுத்தது? இன்னும் எவ்வளவு தொகை மீதமிருக்கிறது என்பதைப்... மேலும் பார்க்க