Wedding Plan: செலிபிரட்டி ஆடைகளை உங்கள் திருமணத்திற்கு ரீ-கிரியேட் செய்யலாமா?!
IPL Mega Auction CSK: `ரூ.20 லட்சம் டு ரூ.3.40 கோடி' - இளம் பவுலர் யாரிந்த அன்ஷுல் கம்போஜ்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் வருகிற மார்ச் மாதம் நடைபெற இருக்கிறது.
2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தொடரை முன்னிட்டு வீரர்களுக்கான ஏலம் சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்றது. இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 23 வயதுடைய இளம் பவுலர் அன்ஷுல் கம்போஜை ஏலம் எடுத்திருக்கிறது. ரூ.30 லட்சம் அடிப்படை விலைகொண்ட அன்ஷுல் கம்போஜை ரூ.3.40 கோடிக்கு மும்பை அணியுடன் போட்டி போட்டு வாங்கியிருக்கிறது. சிஎஸ்கே அணி போட்டி போட்டு வாங்கிய அன்ஷுல் கம்போஜ் யார்?
அன்ஷுல் கம்போஜ் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். 2021-22 ரஞ்சி டிராபியில் ஹரியானாவுக்காக அறிமுகமானார். பிறகு 2022-23 விஜய் ஹசாரே டிராபியில் ஹரியானாவுக்காக லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அறிமுகமானார். கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அன்ஷுல் கம்போஜ் சேர்க்கப்பட்டார். அப்போது சில போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டிருந்தார். சமீபத்தில் நடைபெற்ற ரஞ்சி டிராபி தொடரில், இளம் வீரரான அன்ஷுல் கம்போஜ் ஒரு இன்னிங்ஸின் மொத்த விக்கெட்டுகளையும் சாய்த்து சாதனை படைத்திருந்தார்.
இந்த சாதனையைச் செய்த மூன்றாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை காம்போஜ் பெற்றார். கடந்த ஆண்டு ஐ.பி.எல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.20 லட்சம் என்ற ஆரம்பத் தொகைக்கே எடுக்கப்பட்ட அன்ஷுல் கம்போஜ், மூன்று போட்டிகளில் விளையாடி 2 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.
மேலும், இந்த ஆண்டு நடைபெற்ற துலீப் டிராபி தொடரில் இந்தியா சி அணிக்காக விளையாடிய இவர் மொத்தமாக 16 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதில், இந்தியா பி-க்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். தற்போது சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டிருக்கும் அன்ஷுல் கம்போஜ் சிஎஸ்கே அணிக்கு நல்ல பவுலிங் ஆப்ஷனாக இருப்பார் என்று கூறப்படுகிறது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...