செய்திகள் :

Israel: "கிரேட்டா தன்பெர்கின் படகை எதிர்கொள்ள 'தயாராக' இருக்கிறோம்" - இஸ்ரேல் ராணுவ அதிகாரி!

post image

சுவிடனைச் சேர்ந்த 22 வயது காலநிலை செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க், காசாவில் மனிதாபிமான உதவிகளை தடுத்துவரும் இஸ்ரேஸ் ராணுவத்தை எதிர்த்து, அங்குள்ள மக்களுக்கு உதவிகள் வழங்குவதற்காகக் கடந்த ஜுன் 1ம் தேதி சிசிலியில் உள்ள கேடேனியா துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

இஸ்ரேல் ராணுவம் கிரேட்டா தன்பெர்க் செல்லும் ஃப்ரீடம் ஃப்ளோட்டிலா கூட்டணியின் (FCC) மேடலின் கப்பலை தடுத்து நிறுத்த தயாராக இருப்பதாக மூத்த ராணுவ அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) செய்தித் தொடர்பாளர் பாய்மரக் கப்பல்களுக்கான ஜெனரல் எஃபி டெஃப்ரின்

"இதுமாதிரி விஷயங்களில் நாங்கள் சமீப ஆண்டுகளில் அனுபவம் பெற்றுள்ளோம், அதன்படி செயல்படுவோம்" என, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) செய்தித் தொடர்பாளர் பாய்மரக் கப்பல்களுக்கான ஜெனரல் எஃபி டெஃப்ரின் தி டைம்ஸ் ஆஃப் லண்டனிடம் தெரிவித்தார்.

ஆனால் இஸ்ரேல் என்ன மாதிரியான நடவடிக்கையை எடுக்கக் காத்திருக்கிறது என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை.

காசா பகுதியை இஸ்ரேல் முற்றிலுமாக முற்றுகையிட்டுள்ளதால், கடந்த 90 நாட்களுக்கும் மேலாக வெளியில் இருந்து உதவிப்பொருட்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

கிரேட்டா தன்பெர்க்கின் படகு நிறைய பால், புரோட்டீன் பார்கள், பேபி ஃபார்முலா, டயப்பர்கள், மாவு, அரிசி, நீர் வடிகட்டிகள், சுகாதாரப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிப்பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

 ஃப்ரீடம் ஃப்ளோட்டிலா கூட்டணியின் (FCC) மேடலின் கப்பல்
ஃப்ரீடம் ஃப்ளோட்டிலா கூட்டணியின் (FCC) மேடலின் கப்பல்

இந்த படகு ஜூன் 7ம் தேதி காசாவைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிரேட்டாவுடன் கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகர் லியாம் கன்னிங்ஹாம், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 12 சர்வதேச செயற்பாட்டாளர்கள் செல்கின்றனர்.

இந்தச் செயற்பாட்டை,"இஸ்ரேலின் சட்டவிரோத முற்றுகை மற்றும் போர்குற்றங்களை சவால் செய்யும் வன்முறையற்ற நேரடி நடவடிக்கை" எனக் கருதுகின்றனர்.

"நாம் என்னவிதமான சவால்களை எதிர்கொண்டாலும் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்பதற்காக இதைச் செய்கிறோம். ஏனென்றால், நாம் முயற்சி செய்வதைக் கைவிடும் தருணம், மனிதாபிமானத்தை இழக்கும் தருணம்" என கிரேட்டா கூறியுள்ளார்.

கடந்த மாதம் இதேப் பணிக்காக FCC இயக்கிய ஒரு கப்பல் ட்ரோன்களால் தாக்கப்பட்டது. இதற்கு இஸ்ரேல் ராணுவம்தான் காரணம் என செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இஸ்ரேல் அதை மறுத்துள்ளது.

அமெரிக்காவில் கல்வி; 500 கோடிக்கு மேல் சொத்து; அடுத்தடுத்து வழக்குகள் - யாரிந்த ஆற்றல் அசோக் குமார்?

2024-ம் ஆண்டு மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நேரம் அது... தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க, மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.அக்கட்சியின் முக்கியப் பொற... மேலும் பார்க்க

Census - Delimitation: "ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது" - எச்சரிக்கும் ஸ்டாலின்

இந்தியாவில் 2011-க்குப் பிறகு 14 ஆண்டுகளாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாமல் இருந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர் வலியுறுத்தலுக்குப் பிறகு, 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று நேற்... மேலும் பார்க்க

RCB உயர் அதிகாரி உட்பட 4 பேர் கைது; பெங்களூரு காவல்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன?

சரிபெங்களூரு சின்னசாமி மைதானத்துக்கு வெளியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 11 பேர் உயிரிழந்த வழக்கில், ஆர்.சி.பி அணி நிர்வாகத்தின் உயர் பொறுப்பில் உள்ள நபர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 18 ஆண்டுகள... மேலும் பார்க்க

புதின்-ஜெலன்ஸ்கி வாக்குவாதம் தீவிரம்; ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபக்கம்... தாக்குதல்கள் ஒரு பக்கம்... என ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தாக்குதல்களும், பதில் தாக்குதல்களும் நடந்துகொண்டே இருக்கின்றன. இந்த நிலையில், ரஷ்... மேலும் பார்க்க

PMK: "விரைவில் நல்ல செய்தி; ஆடிட்டர் குருமூர்த்தியுடனான சந்திப்பு..." - ஜி.கே மணி சொல்வது என்ன?

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. அன்புமணி ஆதரவாளர்களான பாமக பொருளாளர் திலகபாமா உட்பட 41 மாவட்ட நிர்வாகிகளைக் கட்சியில் இருந்து நீக்கி ராமதாஸ் உத்த... மேலும் பார்க்க