செய்திகள் :

Kalvi: உலகின் சிறந்த பள்ளிகளின் பட்டியலில் இடம்பெற்ற கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி

post image
தமிழகத்தில் மதுரையை சேர்ந்த கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி, உலகின் சிறந்த பள்ளிகளுக்கான தேர்வு 2024 இல் பொதுமக்கள் வாக்குப்பதிவு மற்றும் சமூக விருப்ப அடிப்படையில் விருதைப் பெற்றுள்ளது.

உலகின் சிறந்த பள்ளிகளின் பட்டியலில் இடம்பெற்ற 50 பள்ளிகளில் கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி பொதுமக்களின் அதிக வாக்குகளைப் பெற்று, சமூக விருப்ப விருதை வென்றுள்ளது. இதன் மூலம், கல்வி இன்டர்நேஷனல் பொது பள்ளி சிறந்த பணியிடமாகத் திகழவும், ஆசிரியர் நலனை மேம்படுத்துவதற்கும், சிறந்த கல்வியாளர்களை ஈர்க்கவும், வேலைநிலைகளை மேம்படுத்தவும் உதவும் T4 எஜுகேஷனின் “Best School to Work” உறுப்பினர் பதவியும் கிடைத்துள்ளது.

கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி

T4 எஜுகேஷன் மற்றும் உலகின் சிறந்த பள்ளி விருதுகளின் நிறுவனர் விகாஸ் போட்டா கூறுவதாவது, “உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மக்களின் இதயங்களையும் மனங்களையும் கவர்ந்ததற்காக கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக்  பள்ளிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் உலகின் சிறந்த பள்ளிக்கான தேர்வில் 2024 இல் சமூக விருப்ப விருதைப் பெறுவதற்கு மிகவும் தகுதியானவர்கள். உங்கள் பள்ளியின் சாதனைகளை அரசாங்கம் பாராட்டியுள்ளது, நமது சமுதாயங்கள் எதிர்கொள்கிற சவால்களை எதிர்கொள்ளும் பள்ளிகளின் மகத்தான முனைப்பை கற்றுக்கொள்வார்கள் என நான் நம்புகிறேன். உங்களின் முயற்சிகள் ஒரு நல்ல எதிர்காலத்திற்கு வழிகாட்டுகிறது.

மதுரையில் அமைந்துள்ள கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி, 2018ல் துவங்கியதிலிருந்து, இடர்பாடுகளை எதிர்கொள்வோருக்கு உயர்ந்த கல்வி மற்றும் விளையாட்டு வாய்ப்புகளை வழங்கி, மாணவர்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. சமூக சேவைகளின் மூலம் மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கும், சமூகச் சமநிலைக்கும் பயனுள்ளதாக இருந்துள்ளது. இப்பள்ளியின் விளையாட்டு திட்டங்களில், 2,359 மாணவர்கள் பங்கேற்று சமூக பங்களிப்பை மேம்படுத்தியுள்ளனர். மேலும், 15 மாணவர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு, கல்வியுடன் விளையாட்டையும் ஒருங்கிணைத்து வெற்றியடைய முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.

கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி

கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி, பல அரசு மற்றும் தனியார் அமைப்புகளுடன் இணைந்து சமூகத்திற்கு நல்ல வேலைநிலைகளை ஏற்படுத்தியும், கல்வி வாய்ப்புகளை விரிவாக்கியும் வருகிறது. இப்பள்ளியில் பொருளாதார பின்தங்கிய  நிலையிலிருந்து 452 மாணவர்கள் கல்வி பயில்வதுடன், இவர்கள் உயர் கல்வியுடன் விளையாட்டுத் துறையிலும் மேம்பட வழிவகுத்துள்ளது. 23-24 கான வெற்றியாளர்களும், இறுதிச்சுற்று போட்டியாளர்களும் , நவம்பர் 2024ல் துபாயில் நடைபெறும் உலக பள்ளிகள் உச்சிமாநாட்டில் கலந்துகொள்வார்கள்.

'முழு கல்விக் கட்டணம் டு லேப்டாப்' - பெடரல் வங்கி வழங்கும் உதவித்தொகை - யார் யார் விண்ணப்பிக்கலாம்?!

கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பெடரல் வங்கி தங்களது நிறுவனர் கே.பி.ஹார்மிஸ் நினைவாக 'பெடரல் வங்கி ஹார்மிஸ் நினைவு உதவித்தொகை 2024-25' வழங்க விண்ணப்பங்களை கோரியுள்ளது.யார் யார் விண்ணப்பிக்கலாம்?எம்.பி.பி.எஸ... மேலும் பார்க்க

திண்டுக்கல்: "30 அரசுப் பள்ளிகளில் மைதானம் இல்லை" - ஆர்டிஐ சொல்லும் அதிர்ச்சி தகவல்கள் என்னென்ன?

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரதிஷ் பாண்டியன். சமூக ஆர்வலரான இவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெற்று மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயற்சிகள் மேற்கொண்டு வ... மேலும் பார்க்க

பந்தலூர்: மூடப்பட்ட 50 ஆண்டுக்கால ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி; வருத்தத்தில் மக்கள்! காரணம் என்ன?

மலை மாவட்டமான நீலகிரியில் பழங்குடிகள் மற்றும் ஆதிதிராவிடர் மக்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர். அந்த மக்களை கல்வியில் மேம்படுத்தும் வகையில் பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்ப... மேலும் பார்க்க

Maharashtra: `35 இல்லை இனி 20 மார்க் எடுத்தாலே பாஸ், ஆனால்...' - மகாராஷ்டிரா அரசின் `புது' திட்டம்

பொதுவாக பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்கள் 35 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். அதுதான் தேர்ச்சி மதிப்பெண்ணாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.ஆனால் தற்போது மகாராஷ்டிரா மாநிலம் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்பட... மேலும் பார்க்க