செய்திகள் :

Kanguva: "சூர்யாவுக்கு எதிராகக் கொந்தளிப்பவர்கள்; சமூகப் பிரச்னைக்கு கொந்தளிப்பதில்லை"- இரா.சரவணன்

post image
சூர்யா நடிப்பில், இயக்குநர் சிவா இயக்கத்தில் 'கங்குவா' திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியிருந்தது.

இந்த படம் குறித்த விமர்சனங்களுக்கு சமீபத்தில் ஜோதிகா, "கண்டிப்பாக கங்குவா படத்தில் முதல் அரைமணி நேரம் சத்தம் பிரச்னையாகவே இருக்கிறது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். மொத்தம் 3 மணி நேரம் வெளியான கங்குவா படத்தில் ஒரு அரை மணி நேரம்தான் அப்படியிருக்கிறது. தமிழ் சினிமாவில் இது போல் கேமரா பயன்பாடுகளை பார்த்ததே இல்லை. பெரிய பட்ஜெட் படங்களாக இருந்தாலும் நன்றாகவே இல்லாத படங்களுக்குகூட இத்தகைய விமர்சனங்கள் வந்ததில்லை. ஆனால் ஊடகங்களில் இருந்து கங்குவாவுக்கு எதிராக இது போன்று எதிர்மறையான விமர்சனங்களைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளேன். பெண்களை இழிவாக சித்தரித்து இரட்டை அர்த்த வசனங்கள் கொண்ட படங்களுக்குக்கூட இப்படி விமர்சனங்கள் வந்ததில்லை. படம் வெளியான முதல் நாளே இது போன்று அவதூறுகள் பரப்பப்பட்டன." என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த விவகாரத்தில் 'கங்குவா' படத்தை விமர்சிக்கலாம். ஆனால், இனி இப்படியான முயற்சியை தமிழில் யாருமே செய்துவிடக் கூடாது என்னும் அளவிற்கு கடுமையான விமர்சனங்களை உள்நோக்கத்துடன் பரப்புவது தவறானது என்பதே பலரின் கருத்தாக இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது 'கத்துக்குட்டி', 'உடன்பிறப்பே', 'நந்தன்' படங்களை இயக்கிய இரா.சரவணன், "சினிமாவிற்காகக் கொந்தளிப்பவர்கள், சமூக பிரச்னைகளுக்காக இவ்வளவு கொந்தளிப்பதில்லை" என்றும் "சினிமாகாரர்களை இந்தளவுக்குக் கொண்டாடவும் தேவையில்லை. இவ்வளவு மோசமாகக் குறை சொல்லவும் தேவையில்லை" என்று நீண்ட பதிவு ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அதில் குறிப்பாக,

"1.சினிமாகாரர்களை இந்தளவுக்குக் கொண்டாடவும் தேவையில்லை. இவ்வளவு மோசமாகக் குறை சொல்லவும் தேவையில்லை.

2.இந்தக் கோபத்தை ஆவேசத்தை தட்டிக் கேட்கும் தைரியத்தை சினிமாவுக்கு எதிராக மட்டும் காட்டாமல், நம்மை ஏமாற்றும் அத்தனை அநீதிகளுக்கு எதிராகவும் காட்டுவோம். சினிமா நம் பொழுதுபோக்கு. பொழுது அதைவிட முக்கியம். 3மணி நேரம் வீணாகி விட்டதாகப் புலம்பும் நாம், நம் எம்.பி, எம்.எல்.ஏ. உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு 5 வருடங்களைக் கொடுத்திருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

3. சில சண்டைகளில் என்ன ஏதென்றே தெரியாமல் போவோர் வருவோரும் சேர்ந்து அடிப்பதுபோல், பெரும்பான்மை கருத்து என்பதாலேயே அதற்கு வலு சேர்க்கும் வேலைகளை ஒருபோதும் செய்யாதீர்கள். ஆய்ந்தறியுங்கள். உங்கள் மனம்தான் உயர்ந்த நீதிபதி. பி.கு: நடிகர் சூர்யாவை விமர்சிக்க நமக்கு உரிமை இருக்கிறது. சூர்யாவை விமர்சிக்க அல்ல…" என்று 'கங்குவா' படத்திற்கு வரும் நெகட்டீவ் விமர்சனங்கள் குறித்து தனது கருத்தைக் கூறியிருக்கிறார் இயக்குநர் சரவணன்.

Nayanthara: "அந்த நபராலத்தான் நான் சினிமாவில் இருந்து விலகினேன்"- எமோஷனலாகப் பேசிய நயன்தாரா

நெட்பிளக்ஸ் ஓடிடி தளத்தில் நயன்தாராவின் வாழ்க்கை, திருமணம் பற்றிய 'Nayanthara: Beyond the Fairytale' என்ற ஆவணப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. அதில் நயன்தாரா, சில காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்த... மேலும் பார்க்க

Trisha: `விடாமுயற்சி, தக் லைப்' - டாப் ஹீரோக்களின் படங்களில் த்ரிஷா - அசத்தும் லைன் அப்

தென்னிந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் கதாநாயகியாக அசத்தி வருபவர் த்ரிஷா. கமல், சிரஞ்சீவி, மோகன்லால், அஜித், டொவினோ தாமஸ் என ஒவ்வொரு இன்டஸ்ட்ரியின் டாப் ஹீரோக்களின் படங்களிலும் நடித்து வருகிறார் த்ரிஷ்... மேலும் பார்க்க

Vanangaan: "கனத்த இதயத்துடனும், மன நெகிழ்வுடனும் பாலா சாருக்கு.." - அருண் விஜய் உருக்கம்

2022 மார்ச் 28 ஆம் தேதி, பாலா இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி ஷெட்டி, மமிதா உட்பட பலர் நடிப்பில் வணங்கான் படம் தொடங்கப்பட்டது.நடிகர் சூர்யா படத்திலிருந்து விலகிவிட, இதையடுத்து சூர்யாவுக்குப் பதில் 'வணங்க... மேலும் பார்க்க

Soori: ``கங்குவா, நெகட்டிவ் விமர்சனம் சொல்லி பிரபலமாகிறார்கள்; அடுத்தடுத்த படங்கள் ரெடி" - சூரி

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி நடிக்கும் 'விடுதலை பாகம் 2' திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகவிருக்கிறது. இதையொட்டி சமீபத்தில் இளையராஜா இசையில் உருவான 'தினம் தினமும்' பாடல் வெளியாகி வரவேற்ப... மேலும் பார்க்க

A R Rahman: ``இந்தியாவில் VR மூலமாக கோயில்களை சுற்றி பார்க்கலாம்...'' - ஏ.ஆர். ரஹ்மான்

சென்னை ஐஐடியின் இந்த ஆண்டிற்கான 'XTIC' எனும் ஆராய்ச்சி விருதை இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் பெற்றார். 2022 ஆம் ஆண்டு வெளிவந்த 'லீ மஸ்க் (Le Musk)' என்ற 5D திரைப்படத்தை செயற்கைத் தொழில்நுட்பம் மற்றும் VR ... மேலும் பார்க்க

Surya & AR Rahman கதையை கேட்டுட்டு சொன்னது இதுதான்! - RJ Balaji | Suriya 45 | Naanum Rowdy Dhaan

விகடன் குழுவுடன் ஆர்.ஜே.பாலாஜியின் பிரத்யேக பத்திரிக்கையாளர் சந்திப்பு பகுதி 1 வீடியோ.இந்த பிரத்யேக நிகழ்வில், ஆர்.ஜே.பாலாஜி தனது குழந்தைப் பருவம் முதல் இன்று வரையிலான தனது முழு பயணத்தையும் திறந்து வை... மேலும் பார்க்க