செய்திகள் :

KJ Yesudas: தீவிர சிகிச்சையில் உள்ளாரா யேசுதாஸ்!? - மகன் விஜய் யேசுதாஸ் என்ன சொல்கிறார்..?

post image

மக்கள் மனதைக் கவர்ந்தவர் பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் கடந்த 60 ஆண்டுகளாக, மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காள மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம் எனப் பல்வேறு மொழிகளில் 80000-க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை பாடியுள்ளார்.

கடந்த ஜனவரி 10 ஆம் தேதி அன்றுதான் யேசுதாஸ் தனது 85-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இந்த நிலையில், கே.ஜே.யேசுதாஸ் உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், சென்னை மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருதவாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பானது. இதனால் ரசிகர்கள் வேதனை அடைந்தனர்.

KJ Yesudas

இந்த நிலையில், இந்த தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்திகள்தான் என்று மறுப்பு தெரிவித்துள்ள அவரது மகன் விஜய் யேசுதாஸ், "எனது தந்தை யேசுதாஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் உண்மையல்ல, அவர் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் அமெரிக்காவில் உள்ளார்." என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய கே.ஜே.யேசுதாஸின் மேலாளர் சேது ஐயல், ``கே.ஜே.யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வந்த செய்திகள் அடிப்படை ஆதாரமற்ற வதந்திகள். அவர் நலமாக இருக்கிறார். இந்த ஊகங்களை மறுக்குமாறு ஊடகங்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அவர் தற்போது தனது மனைவி பிரபாவுடன் அமெரிக்காவில் வசிக்கிறார்." என்று தெரிவித்துள்ளார்.

Aadhi: ``பேய் பயம் இருக்கு... அஜித், விஜய் சாருடன் வில்லனாக நடிக்க ஆசை..'' - நடிகர் ஆதி

'ஈரம்', 'வல்லினம்', 'குற்றம் 23' படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கத்தில், ஆதி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'சப்தம்'.'ஈரம்' படத்திற்குப் பிறகு மீண்டும் ஆதி - அறிவழகன் இணைந்திருக்கின்றனர். தமன் இ... மேலும் பார்க்க

Kingston: ``அவர் சொல்ல மாட்டார்; செயலில்தான் காட்டுவார்..." - சுதா கொங்கரா பாராட்டு

அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், G.V. பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'கிங்ஸ்டன்'.இசையமைப்பாளராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் G.V. பிரகாஷ், இப்படத்தின் மூலம் தயாரிப... மேலும் பார்க்க

Trisha: ``VTV இதயத்துக்கு நெருக்கமான படம்.." - 15 ஆண்டுகள் நிறைவு; வெற்றிக்கு த்ரிஷா சொன்ன காரணம்!

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் வெளியான `விண்ணைத் தாண்டி வருவாயா' படம் வெளியாகி 15 ஆண்டுகள் முடிந்திருக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அழகான பாடல்களுடன் வெளியான இந்த திரைப்படம், ரசிகர்கள... மேலும் பார்க்க

Vetrimaaran: ``வெற்றி மாறன் என் அம்மா மாதிரி ஏன்னா..." - நெகிழ்ந்த ஜி.வி.பிரகாஷ்

அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'கிங்ஸ்டன்'.இசையமைப்பாளராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் ஜி.வி, இப்படத்தின் மூலம் தயாரிப்பாளரா... மேலும் பார்க்க

Dragon: `சொல்லி வச்ச மாதிரி சீறும் டிராகன்!' - `டிராகன்' பட வெற்றியைக் கொண்டாடிய `LIK' குழுவினர்!

`டிராகன்' திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிரடியான வரவேற்பு கிடைத்திருக்கிறது.`லவ் டுடே' படத்திற்குப் பிறகு மீண்டும் `டிராகன்' திரைப்படத்தின் மூலம் ஒரு சென்சேஷனல் ஹிட் கொடுத்திருக்கிறார் பிரதீப் ரங... மேலும் பார்க்க

Kingston: `` 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' படத்தில ஜி.வி சாரோட ரசிகனாகிட்டேன்" - அஸ்வத் மாரிமுத்து

அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'கிங்ஸ்டன்'.இசையமைப்பாளராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் ஜி.வி, இப்படத்தின் மூலம் தயாரிப்பாளரா... மேலும் பார்க்க