செய்திகள் :

Liechtenstein: விமான நிலையம், நாணயம் இல்லாத சிறிய நாடு; பணக்கார நாடுகளில் ஒன்றாக இருப்பது எப்படி?

post image

ஒரு நாட்டின் வளர்ச்சி மற்றும் வலிமையை அதன் பரந்த நிலப்பரப்பு, ராணுவ பலம், சொந்த நாணயம் மற்றும் சர்வதேச விமான நிலையங்களைக் கொண்டு அளவிடுவது வழக்கம். ஆனால், சுவிட்சர்லாந்துக்கும் ஆஸ்திரியாவுக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு ஐரோப்பிய நாடு இந்த அளவீடுகளை உடைத்து, பொருளாதாரத்திற்கு ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது.

உலகின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றான லீச்சென்ஸ்டீன் (Liechtenstein), சொந்த சர்வதேச விமான நிலையமோ அல்லது நாணயமோ இல்லாமல் இருந்தாலும், தனிநபர் வருமானத்தில் உலகின் பெரும் பணக்கார நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

இந்த நாடு, சுவிஸ் ஃபிராங்கை (Swiss Franc) தனது அதிகாரப்பூர்வ நாணயமாக ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால் நாணயக் கொள்கைகளை நிர்வகித்தல், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பணத்தை அச்சிடுதல் போன்ற நிதிச் சுமைகளிலிருந்து லீச்சென்ஸ்டீன் விலகி இருக்கிறது.

லீச்சென்ஸ்டீன் (Liechtenstein
லீச்சென்ஸ்டீன் (Liechtenstein

லீச்சென்ஸ்டீனில் சர்வதேச விமான நிலையம் இல்லை என்றாலும், அண்டை நாடுகளான சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரியாவில் உள்ள விமான நிலையங்களை எளிதாகப் பயன்படுத்துகிறது.

மக்கள் பொதுவாக சூரிச் (Zurich) அல்லது இன்ஸ்ப்ரூக் (Innsbruck) விமான நிலையங்களுக்குச் சென்று, அங்கிருந்து கார் அல்லது ரயில் மூலம் நாட்டிற்குள் வருகின்றனர்.

இந்த நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக அதன் உற்பத்தித் துறை உள்ளது. தொழில்துறை உபகரணங்கள், தொழில்நுட்பப் பொருட்கள், பல் மருத்துவக் கருவிகள் மற்றும் விண்வெளித் திட்டங்களில் பயன்படுத்தப்படும் பாகங்கள் தயாரிப்பில் லீச்சென்ஸ்டீன் ஒரு உலகளாவிய மையமாக விளங்குகிறது.

இந்த நாட்டில் அதிகமான பதிவுசெய்யப்பட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன. இது அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, ஏற்றுமதியை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தையும் வலுப்படுத்துகிறது.

ஊட்டி மலை ரயில் சேவை ரத்து - என்ன காரணம்?

கனமழை காரணமாக நீலகிரி மலைப்பாதையில் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் பாதையில் கடந்த மூன்று நாட்களாக பாறைகள் சரிந்து விழுந்ததால், மலை ரயில் சேவை முழுமைய... மேலும் பார்க்க

Camping: ரூ.1,500தான்.. பிச்சாவரம், ஏலகிரி... 'கேம்பிங்' - நியூ இயருக்கு இப்போவே பிளான் பண்ணுங்க!

இன்னும் இரண்டு மாதங்களில் கிறிஸ்துமஸ், நியூ இயர் விடுமுறைகள் வரப்போகின்றன. அதற்கு இப்போதிருந்தே பிளான் பண்ணத் தொடங்கியிருப்பீர்கள். அந்த விடுமுறையைக் கொண்டாட வெளிநாடு, வெளிமாநிலத்திற்குத்தான் போக வேண்... மேலும் பார்க்க

கேரளா: `பூம்பாவாய் ஆம்பல், ஆம்பல்' - மனதை மயக்கும் மலரிக்கல் கிராமம் | Photo Album

மலரிக்கல்மலரிக்கல்மலரிக்கல்மலரிக்கல்மலரிக்கல்மலரிக்கல்மலரிக்கல்மலரிக்கல்மலரிக்கல்மலரிக்கல்மலரிக்கல்மலரிக்கல்மலரிக்கல்மலரிக்கல்மலரிக்கல்மலரிக்கல்மலரிக்கல்மலரிக்கல்மலரிக்கல்மலரிக்கல்மலரிக்கல்மலரிக்கல்மல... மேலும் பார்க்க

Sammoo : பல நூற்றாண்டுகளாக தீபாவளி கொண்டாடாத இந்திய கிராமம் பற்றி தெரியுமா?

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படும் வேளையில், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமம் பல நூற்றாண்டுகளாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடுவதில்லை என்ற தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்... மேலும் பார்க்க

Diwali Tour: ஊட்டி, கொடைக்கானல் போர் அடிச்சுடுச்சா? இங்க விசிட் பண்ணுங்க; சூப்பர் பட்ஜெட் ஸ்பாட்

தொடர் விடுமுறை என்றாலே பலரும் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்வார்கள். ஆனால் சென்னையில் இருப்பவர்கள் வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள விரும்புவார்கள். சென்னையில் இருந்து பட்ஜெட்டிற்குள் ட்ரிப் செ... மேலும் பார்க்க

பின்லாந்து: உலகின் மகிழ்ச்சியான நாட்டில் இந்தியர்களுக்கு நிரந்தர குடியுரிமை; யார் விண்ணப்பிக்கலாம்?

பின்லாந்து, உலகின் மிக மகிழ்ச்சியான நாடாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது. இந்நாடு தற்போது இந்தியர்களுக்கு நிரந்தர குடியுரிமை (Permanent Residency) பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்த ஆண்டு உருவாக்கப்ப... மேலும் பார்க்க