செய்திகள் :

Nippo Swooper: கொசுக்களால் ஏற்படும் பிரச்னைகளைத் தடுக்க நிப்போ நிறுவனம் அறிமுகம்

post image
அதி நவீன கொசு விரட்டியான "நிப்போ ஸ்வூப்பர்" பிராண்டை வெளியிடுவதன் மூலம் நிப்போ இப்போது வீட்டுப் பராமரிப்பு வகைக்குள் நுழைகிறது.

அன்டர்டாக் (Underdog)-ன் ஒத்துழைப்போடு திட்டமிடப்பட்டுள்ள இந்தப் பிரச்சாரம் நுகர்வோர் தங்களுடைய தற்போதைய பிராண்டிலிருந்து மாறுவதற்கு ஒரு வீரியமான கருத்தை அளிக்கிறது. இன்டோ நேஷனல் லிமிடெட், ஐம்பந்தாண்டுகளுக்கும் மேலாக அதன் தனித்துவமான நிப்போ பிராண்டிற்கு பெயர் பெற்றது, அதன் சமீபத்திய கண்டுபிடிப்பான நிப்போ ஸ்வூப்பர் லிக்விட் வேப்பரைசர் கொசு விரட்டியை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறது. நாட்டில் கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள் ஆண்டுதோறும் 7,00,000 உயிர்களைக் கொல்லும் நிலையில், நுகர்வோர் தங்களுடைய வீடுகளில் கொசு பிரச்சனைகளை எதிர்கொள்ளும் விதத்தை இந்தப் புதிய தயாரிப்பு மாற்றப்போகிறது.

இந்தத் தயாரிப்பு ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றடைவதை உறுதிசெய்ய, நிறுவனம் அதன் விரிவான விநியோக நெட்வொர்க் மற்றும் வீரியமான ஓம்னி-சேனலான மின் வணிகம் மற்றும் விரைவான வர்த்தக தளங்களில் தன்னுடைய வலுவான இருப்புடன் முறைப்படுத்தப்பட்ட வர்த்தகம் மற்றும் பாரம்பரிய வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள 2.3 மில்லியன் சில்லறை விற்பனை நிலையங்களைப் பயன்படுத்தும். அனைத்து நுகர்வோருக்கும் தடையற்ற மற்றும் நல்ல ஷாப்பிங் அனுபவத்திற்கு இந்த விரிவான அணுகுமுறை உத்தரவாதம் அளிக்கிறது.

இந்தியாவின் வெப்பமண்டல காலநிலை காரணமாக ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 40 மில்லியன் உயிரிழப்பினை ஏற்படுத்தும் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா மற்றும் ஜிகா போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. காலநிலை மாற்றத்தின் காரணமாக கொசுத் தொல்லை அதிகமாக உள்ள காலத்தையும் மோசமான வானிலை ஏற்படும் காலங்களையும் நீட்டிப்பதால் மனிதர்களுக்குத் தொல்லைதரும் இந்த எதிரி புதிய பகுதிகளுக்குச் செல்கிறது.

நவீன இந்திய குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தன்னுடைய உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், ஹோம் கேரில் நிறுவனத்தின் தைரியமான நுழைவையே இந்த நிப்போ ஸ்வூப்பர் அறிமுகம் எடுத்துக்காட்டுகிறது. கடந்த ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட புரட்சிகரமான பிராண்ட் புதுப்பிப்பைத் தொடர்ந்து இது நிகழ்கிறது. நிப்போவின் புதுமைக்கான அர்ப்பணிப்பினையும் சமகால வாழ்க்கை முறை தேவைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் நிலைப்பாட்டையும் இது பிரதிபலிக்கிறது.

மேம்பட்ட ஜப்பானிய Metofluthrin (MFT) ஃபார்முலாவில் தயாரிக்கப்படும் இந்த ஸ்வூப்பர் வேப்பரைசர் சந்தையில் இருக்கும் தயாரிப்புகளின் செயல்திறனை விஞ்சி நிற்கும் என்று நம்புகிறோம். அதன் வீரியமாகச் செயல்படும் மூலக்கூறு நிச்சயமாக உயர்ந்ததாக இருப்பதோடு அனைத்து நோய் பரப்பும் கொசுக்களுக்கு எதிராகவும் குறிப்பிடத்தக்க சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது.

நுகர்வோர் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் விதத்தில், நிப்போ ஸ்வூப்பர் ஒரு இனிமையான சந்தன வாசனையை அளிக்கிறது, இது மற்ற அனைத்து கொசு விரட்டிகளிலிருந்தும் தனித்து நிற்கும் மற்றொரு தனித்துவமான அம்சமாகும். மேலும், பயனர்கள் எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் இந்தத் தயாரிப்புக்கு மாறுவதை உறுதி செய்வதற்காக, ஸ்வூப்பர் ரீஃபில் தற்போது இருக்கும் அனைத்து இயந்திரங்களிலும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கியமே நுகர்வோர் தேவையின் மையம் என்பதைக் கருத்தில் கொண்டு, தொடர்புடைய பல வகைகளில் விரிவாக்கம் செய்யவும், வீட்டுப் பராமரிப்பு பாதுகாப்பின் அளவுகோளாக ஸ்வூப்பர் பிராண்டை நிலைநிறுத்தவும் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும், இந்த வளர்ச்சிக்கு உதவும் வகையிலும் தன்னுடைய தயாரிப்புகள் பரவலாக கிடைக்கக்கூடியதாக இருப்பதை உறுதி செய்வதற்கும் வலுவான விநியோக சங்கிலி நெட்வொர்க்கை உருவாக்க உறுதிபூண்டுள்ளது.

அண்டர்டாக்-உடன் சேர்ந்து உருவாக்கப்பட்ட இந்த தகவல்தொடர்பு பிரச்சாரம், தேவையான மாற்றங்களைச் செய்ய நுகர்வோரை ஊக்குவிக்கும் விதத்தில் நிப்போ ஸ்வூப்பர்-ன் நன்மைகளை திறம்பட வெளிக்காட்டுகிறது. நன்கு அறிமுகமான பிராண்டுகள் ஆதிக்கம் செலுத்தும் சந்தையில், இந்தப் பிரச்சாரம் தைரியமாக சவாலை எதிர்கொள்வதோடு, இந்த மாற்றம் ஏன் அவசியமானது என்பதற்கு வலுவான காரணத்தை உருவாக்குகிறது.

இந்த பிரச்சாரத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் உன்னிப்பாகக் கண்காணித்த திரு. பவன் குமார், COO, இன்டோ நேஷனல் லிமிடெட் பேசும்போது, இதை நுகர்வோர் எப்படி ஏற்கிறார்கள் என்பதைப் பார்க்க ஆவலோடு இருக்கிறோம் என்கிறார். அவர் பேசும்போது: "நாங்கள் ஒரு பிராண்ட் புதுப்பிப்பைப் பெற்றதிலிருந்தே, எமது நுகர்வோரின் வாழ்க்கையை மிகவும் குறிப்பிடத்தக்க விதத்திலும் ஆழமாகவும் தாக்கம் செய்யக்கூடிய பல தயாரிப்புகளைக் கொண்டு வர முயற்சித்து வந்திருக்கிறோம். நிப்போ ஸ்வூப்பர் மூலம் நாங்கள் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைத்தது. பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும் அன்றாட வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் எங்களுடைய உறுதிப்பாட்டினால் உந்தப்பட்டு, வீட்டுப் பராமரிப்புத் துறையில் எங்களுடைய தைரியமான முயற்சியைக் கருத்தில் கொள்ளுங்கள்.

சவால்மிக்க இந்த தயாரிப்புகளை தயாரிப்பதற்கு பொறுப்பளிக்கப்பட்ட BLN பிரசாத், V.P மார்கெட்டிங், பேசுகையில்: “மேம்பட்ட ஜப்பானிய MFT ஃபார்முலாவில் தயாரிக்கப்பட்டுள்ள நிப்போ ஸ்வூப்பர் புத்துணர்ச்சியூட்டும் சந்தன வாசனையுடன் இருப்பதோடு கொசுக்கள் மூலம் பரவும் நோய்களுக்கு எதிரான போராட்டத்தில் புரட்சியை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம். பழைய உலக நடைமுறைத்தன்மையுடன் அதிநவீன கண்டுபிடிப்புகளை ஒன்றிணைத்து, இன்றைய நவீன குடும்பங்களுக்கு ஏற்ற ஒரு தயாரிப்பை உருவாக்கிய திருப்தி எங்களுக்கு உள்ளது" என்றார்.

அண்டர்டாக் நிறுவனத்தின் இணை நிறுவனரும் CCO-வுமான திரு. விக்ரம் கெய்க்வாட் அவர்களும் ஏஜென்சியின் புதிய பிரச்சாரத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறார். அவர் பேசும்போது, "ஏற்கனவே நன்கு அறிமுகமான பிராண்டுகளின் சவாலை உடைக்க ஒரு புதிய அணுகுமுறை தேவைப்படுகிறது. இதுதான் எங்களுடைய பிரச்சாரத்தின் கட்டமைப்பை கருத்திற்கொள்ளும் தொடக்க புள்ளியாகும். நிப்போ ஸ்வூப்பரின் சிறந்த பலன்களை நன்கு விளக்கும் ஒரு விளம்பரத்தை நாங்கள் உருவாக்கிவிட்டோம் என்று நினைக்கிறேன். நுகர்வோரைச் சந்திக்கும் ஒவ்வொரு இடத்திலும் அதே புதுமை வெளிப்படுவதையும் நாங்கள் உறுதிசெய்கிறோம்.”

இணை நிறுவனரும் அண்டர்டாக்-ன் CCO-வுமான விஸ்டாஸ்ப் ஹோடிவாலா தனது சக அதிகாரியின் உணர்வுகளையே பிரதிபலிக்கும் விதத்தில் பேசும்போது, “இந்த விளம்பரத்தின் மாங்கா ஸ்டைல் தயாரிப்பு விண்டோவாக இருக்கட்டும் அல்லது புதுமையான அச்சு விளம்பரமாக இருக்கட்டும், கடுமையான போட்டிமிக்க சந்தைக்குள் தனக்கென தனி இடத்தைப் பிடிக்கும், ஏற்கனவே அறிமுகமான நிறுவனங்களின் விலைக்கு சவால் விடும் ஒரு லாஞ்ச் பேக்கேஜை கொடுக்க விரும்பினோம். கிளையன்டின் குழுவினர் மிகப் புதுமையான ஆலோசனைகளை ஆர்வத்தோடு ஆதரிப்பவர்களாக இருந்ததால் எங்களுடைய வேலை மிகச் சுலபமாகவே அமைந்துவிட்டது" என்றார்.

TVC-களை நோபின் தத்தா இயக்கத்தில் லிட்டில் லாம்ப் பிலிம்ஸின் சுர்பி பாஃப்னா தயாரித்துள்ளார். பெரும்பாலானவர்களால் பார்க்கப்படுவதையும், ஈர்க்கப்படுவதையும் உறுதி செய்ய இந்தப் பிரச்சாரம் டிஜிட்டல், தொலைக்காட்சி, அவுட்டோர், பிரிண்ட், மற்றும் மாஸ் மீடியாக்களின் வழியாக நடைபெறுகிறது.

Nippon Paint: சமூக சுவர் ஓவியம் மூலம் மாணவர்களுடன் இணையும் நிப்பான் பெயின்ட்

இன்க்லிங்க் அறக்கட்டளை மற்றும் HLC இன்டர்நேஷனல் ஸ்கூல், தாலம்பூர் இணைந்து நடத்திய ஆர்ட் அட் ஹார்ட் முன்முயற்சி.மாணவர்களின் படைப்பாற்றல், சுய வெளிப்பாடு மற்றும் ஒத்துணர்வு திறனை வளர்க்கும் முயற்சியில் ... மேலும் பார்க்க

HCL Shiv Nadar: அதிக நன்கொடை வழங்கியோர்... முதலிடத்தில் ஷிவ் நாடார் - அம்பானி, அதானிக்கு என்ன இடம்?!

மும்பையைச் சேர்ந்த 'Hurun India' நிறுவனம் ஆண்டுதோறும் அதிக நன்கொடைகள் வழங்கிய இந்திய நிறுவனங்களின் டாப் 10 நன்கொடையாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.அவ்வகையில் இந்த ஆண்டிற்கான பட்டியலில் அம்பானி அல... மேலும் பார்க்க

`35 நாள்களில் 48 லட்சம் திருமணங்கள்' - இந்த கல்யாண சீசனில் அதிக வணிகம் நடக்கும் தொழில்கள் என்னென்ன?

வரவிருக்கும் திருமண சீசனில் 48 லட்சம் திருமணங்கள் நடைபெறும் என கணித்துள்ளது அனைத்திந்திய வர்த்தகர் கூட்டமைப்பு (CAIT). நவம்பர் 12 முதல் டிசம்பர் 16 வரை 35 நாள்களுக்குள் திருமணங்களால் மட்டும் 6 லட்சம் ... மேலும் பார்க்க