Vikatan Weekly Quiz: விவாதப்பொருளான அரசியலமைப்புச் சட்டப் பிரிவு டு ஐபிஎல்; இந்த...
Off-Road எக்ஸ்பிரீயன்ஸுக்காக கார் தேடுபவரா நீங்க? - Camp Jeep Event உங்களுக்காகத்தான்!
ஆஃப் ரோடு எக்ஸ்பிரீயன்ஸுக்காக கார் தேடுபவரா நீங்க? எனில் Jeep ஒருங்கிணைக்கிற கேம்ப் ஜீப் ஈவண்ட்ஸ் உங்களுக்காக தான். அப்படியான நிகழ்வொன்றில் மோட்டார் விகடன் சார்பில் கலந்துகொள்ள சென்றோம். சென்னை புறநகரில் தி பார்ம் என விரிந்திருக்கும் நிலப்பரப்பில் ஜீப்பின் பல வேரியண்ட்களின் ஆஃப் ரோடு திறனை சோதிக்க ஜீப் தனது முந்தைய வாடிக்கையாளர்கள், புதிய வாடிக்கையாளர்கள், ஆர்வலர்களை அழைத்திருந்தது. ஜீப்பின் காம்பஸ், மெரிடியன், கிராண்ட் ச்ரோக்கி, வேரங்களர் ஆகிய கார்கள் நாம் ஓட்டி பார்ப்பதற்காக தயாராக இருந்தது.
அதற்கு முன்பு ஜீப்பின் பிசினஸ் ஹெட் குமார் பிரியேஷ் உடன் இந்த நிகழ்வு குறித்து பேசினோம்.
``இந்த நிகழ்வை கேம்ப் ஜீப் என அழைக்கிறோம். இந்த இடத்தில் வேறு வேறு நிலப்பரப்பை நீங்கள் பார்க்கலாம். ஜீப்பின் மாடல்கள் டிஸ்பிளே செய்யப்பட்டிருக்கும். பார்ப்பதற்கு மட்டுமில. நீங்க ஜீப் எப்படி பர்பார்ம் செய்யும் என்பதை இந்த வெவ்வேறு நிலப்பரப்பில் எக்ஸ்பிரீயன்ஸ் செய்து பார்க்கலாம். அதற்காகவே இந்த நிகழ்வு.


ஜீப் உலகளவில் அறியப்பட்ட பிராண்ட். அதனை இது போன்ற நிகழ்வுகள் மூலமாகவும் எங்களின் வாடிக்கையாளர்களை ஒருங்கிணைத்து கம்யூனிட்டியாகவும் செயல்படுகிறோம். ஜீப்பின் புதிய அப்டேட்கள் பகிர இந்த கம்யூனிட்டிகள் உதவுகின்றன. ஜீப் வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல் ஆர்வலர்களும் ஜீப்பை எக்ஸ்பிரீயன்ஸ் செய்ய கேம் ஜீப் போன்ற ஈவன்ட்ஸ் ஒருங்கிணைக்கிறோம். இந்தியா முழுவதுக்கும் ஒரு இடத்தில் இந்த நிகழ்வை நடத்தாமல் வெவ்வேறு இடங்களில் நடத்துவதன் மூலம் பரவலான மக்களை சென்றடைய முடியும் என்பதால் அவ்வாறு திட்டமிடுகிறோம். சென்ற வாரம் பெங்களூரு, இந்த வாரம் சென்னை. அடுத்து புனே.. இப்படி.
ஜீப் பிரீமியம் பிராண்ட். இருந்தபோதும் பொருத்தமான விலையில் சமீபத்தில் மெரிடியன் மாடல் காரை அறிமுகப்படுத்தினோம். விரைவில் இன்னும் குறைந்த விலையில் ஜீப் கார்கள் வெளியாகும்" என்றார்.


ஜீப்பின் கேம்பஸ் எஸ் மாடல் காரில் நாங்கள் அந்த கேம்ப்பில் ஒரு ரவுண்டு சென்று பார்த்தோம். 4x4 வேரியண்ட். 173 Bhp பவர் உற்பத்தி செய்கிறது. 315Nm டார்க் இதில் உள்ளது. 2 லிட்டர் என்ஜின். ஆப் ரோடுக்கான முழுமையான கார். 4 வீல் டிரைவ் ஆஃப் செய்வதற்கான ஆப்ஷனும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
கேம்ப் ஜீப் நிகழ்வில் நம்மோடு அனுபவமிக்க ஜீப் டிரைனர் ஒருவரும் உடன் வருவார். ஆஃப் ரோடுக்கான நல்ல மெஷினாகவே இருந்தாலும் நமது டிரைவிங் ஸ்கில்ஸ் மிகவும் முக்கியம். நீங்கள் முயற்சி செய்வதாக இருந்தாலும் அனுபவமிக்கவர்களை உடன் வைத்துக்கொள்ளுங்கள்.
முதலில் ஒரு பெரிய பள்ளத்தில் காரை செலுத்தினோம். உண்மையான 4x4 எக்ஸ்பிரீயன்ஸ் பெற முடிந்தது. நாம் ஆக்ஸிலேட்டர், பிரேக் மட்டுமே கொடுத்தோம். எங்கு எந்த வீலை செலுத்த வேண்டும். நிறுத்த வேண்டும் என்பதை கார் மெக்கானிசமே தீர்மானிக்கிறது. ஆஃப் லோடு டயர்களுக்கு பவர் நிறுத்தப்பட்டு தேவையான இடத்தில் கொடுக்கப்படுகிறது.
மலை விளிம்புகள், பள்ளங்கள், பாளம் பாளமாக வெடித்திருக்கும் ஆற்றுக் கரைகள், ஆழமில்லாத நீர் பரப்புகள்.. இப்படி வெவ்வேறு நிலப் பரப்புகளில் காம்பஸை சோதித்து பார்த்தோம். (சில இடங்கள் நமக்கு சோதனையாக இருந்தது. வீடியோவில் பாருங்க.)
இடது பக்கம் உள்ள ஒரு பள்ளத்தில் காரை செலுத்தும்போது கார் அப்படியே ஏரில் நின்றது. ஒரு பக்கம் மட்டும் தூக்கி. நாம் எதுவுமே மெனக்கெட வேண்டியிருக்காது சேப்பாக கார் பேலன்ஸ் செய்ய முடிந்தது.
360 டிகிரி கேமரா, சரிவுகளில் இறங்கும்போது ஆட்டோமேட்டிக் பிரேக்கிங் அளிக்கும் ஹில் அசிஸ்ட் வசதி ஆகியவை இதில் இருப்பது ஆப்ரோடிங்கை இன்னும் சிறப்பாக மாற்றுகிறது.
ஒரு நல்ல ஆஃப் ரோடு ரைடிங் எக்ஸ்பிரீயன்ஸுக்கு இது போன்ற நிகழ்வுகள் நடந்தால் சென்று பார்த்துவிட்டு வாருங்கள். எக்ஸ்யூவி எடுக்கிற முடிவில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இது நல்ல அனுபவமாக இருக்கும்.
ஜீப் கார்கள் பற்றி உங்களுடைய கருத்தை பதிவு செய்யுங்கள். எதுவும் கேள்வி இருந்தாலும் தெரிவியுங்கள். நாங்கள் பதிலளிக்கிறோம்.