செய்திகள் :

One Direction குழுவின் பாடகர் Liam Payne (31) மரணம் - என்ன நடந்தது?

post image
ஒன் டைரக்‌ஷன் என்ற பிரபல ஆங்கில பாடல் குழுவின் முன்னாள் உறுப்பினரான லியம் பேய்னே அர்ஜெண்டினாவில் பியூனஸ் அயர்ஸ் என்ற ஹோட்டலில் தங்கியிருந்தபோது பால்கனியில் இருந்து விழுந்து மரணமடைந்துள்ளார்.

31 வயதான பேய்னே குறித்து ஹோட்டலில் இருந்தவர்கள் கால் செய்ததைத் தொடர்ந்து காவலர்கள் ஹோட்டலுக்கு சென்று, அவரது உடலை மீட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

2010ம் ஆண்டு எக்ஸ் ஃபேக்டர் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் தொடங்கப்பட்ட உலக அரங்கில் பல மில்லியன் மக்களால் கொண்டாடப்பட்ட ஆண்கள் இசைக்குழு (BoyBand) ஒன் டைரக்‌ஷன்.

லியம் பேய்னே ஹாரி ஸ்டைல்ஸ், லூயிஸ் டாம்லின்சன், நியால் ஹொரன் மற்றும் ஜெய்ன் மாலிக் ஆகியோரையும் உள்ளடக்கிய குழுதான் ஒன் டைரக்‌ஷன்.

பால்கனியில் இருந்து விழும் முன்னர் அவர் மது அல்லது போதைப் பொருட்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பைனுக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளித்த ஆல்பர்டோ கிரெசென்டி உள்ளூர் ஊடகங்களில் அவர் கடுமையான காயங்களுக்கு ஆளானதாகவும், பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் பயன்பாடு உள்ளிட்ட கேள்விகளுக்கு ஆல்பர்டோ கிரெசென்டி பதிலளிக்க மறுத்துவிட்டதாக பிபிசி ஊடகம் கூறுகிறது.

பால்கனியில் இருந்து விழுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான், "இது அர்ஜெண்டினாவில் இரு சிறந்த நாள்" என ஸ்னாப் சேட்டில் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்திருக்கிறார் பேய்னே.

Liam Pyne

இங்கிலாந்து வெளியுறவு அலுவலகமும் லியம் பேய்னேவின் மரணத்தை உறுதி செய்திருக்கிறது. இந்த செய்தி வெளியானதுமே பியூனஸ் அயர்ஸ் ஹோட்டலை அவரது ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர். இதனால் காவல்துறையினர் ஹோட்டலின் நுழைவு வாயிலில் பாதுகாப்பை அதிகப்படுத்தியிருக்கின்றனர். சிலர் ஹோட்டல் வாசலில் பாடகரின் நினைவாக மெழுகுவர்த்திகளை ஏந்தி அஞ்சலி செலுத்தியிருக்கின்றனர்.

ஒன் டைரக்ஷனின் வாட் மேக்ஸ் யூ பியூடிஃபுல், ஸ்டோரி ஆஃப் மை லைஃப், நைட் சேஞ்சஸ், லிவ் வைல் விஆர் எங் உள்ளிட்ட பாடல்கள் உலகப் பிரசித்தி பெற்றவை.

2015ம் ஆண்டு இந்தக் குழுவில் ஏற்பட்ட சிறு பிரச்னையால் இவர்கள் பிரிந்தனர். அதன் பிறகும் லியம் பேய்னே (Liam Payne) சோலோவாக சில ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார்.

ரசிகர்களும் இசை உலகத்தைச் சேர்ந்தவர்களும் லியம் பேய்னே குறித்து நினைவுகளைப் பகிர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Krishnakumar Kunnath - KK (கிருஷ்ணகுமார் கண்ணதாசன்) பாடகர்

கிருஷ்ணகுமார் கண்ணதாசன் (KK)பிறப்பு: 1968, சென்னை, இந்தியாஇறப்பு: 31 மே 2022கோடைச் சொற்கள்: இந்திய இசை, பாடகர், இசையமைப்பாளர்மருத்துவம்: கிருஷ்ணகுமார் கண்ணதாசன் (KK) தமிழில் அதிகம் பரபரப்பாக பேசப்படும... மேலும் பார்க்க

Navarasa: 9 பிரபல பாடகர்கள் பங்கேற்கும் 'நவரசா'- லஷ்மன் ஸ்ருதியின் இசைக் கச்சேரி

அக்டோபர் 19ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு சென்னை காமராஜர் அரங்கத்தில் 'லஷ்மன் ஸ்ருதி' இசைக்குழு `நவரசா' என்கிற தலைப்பில் 9 பாடகர்கள் பங்கேற்கும் இசைக்கச்சேரி நடக்க இருக்கிறது.இந்த இசை கச்சேரியி... மேலும் பார்க்க