செய்திகள் :

SK - Bigg Boss Tamil 8: `ஒற்றுமை ரொம்ப முக்கியம்!' - பிக் பாஸ் வீட்டிற்குள் சிவகார்த்திகேயன்!

post image
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு வார எவிக்‌ஷன்கள் முடிந்துவிட்டது.

மூன்றாவது வாரத்தில் போட்டியாளர்கள் பலரும் சுறு சுறுப்புடன் களமிறங்கி என்டர்டெயின் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் பல திரைப்படங்களை விளம்பரப்படுத்த இப்படியான கவனத்தை ஈர்க்கும் டெலிவிஷன் நிகழ்ச்சிக்குள் ஒரு படக்குழுவோ அல்லது நடிகரோ செல்வது வழக்கமான ஒன்று.

அந்த வகையில் கடந்தாண்டு அறிமுக இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் உருவான `டாடா' திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக கவினும் அத்திரைப்படத்தின் கதாநாயகி அபர்னா தாஸும் பிக் பாஸ் வீட்டிற்க்குள் சென்றிருந்தனர். இதுமட்டுமல்ல, `பார்க்கிங்' திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காகவும் ஹரீஷ் கல்யாண், இந்துஜா ஆகியோரும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருந்தனர்.

SK in bigg boss

கவினும் ஹரீஷ் கல்யாணும் இதற்கு முந்தைய சீசன்களின் பிக் பாஸ் போட்டியாளர்கள் என்ற செய்தி ஊர் அறிந்ததே. ஆனால், இந்தாண்டு `ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு'. எதிர்பார்க்காத நேரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

அவர் நடித்திருக்கும் `அமரன்' திரைப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது. இத்திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருக்கிறார். இது தொடர்பான ப்ரோமோவும் தற்போது வெளியாகியிருக்கிறது. பிக் பாஸ் வீட்டில், " அமரன் திரைப்படம் பல எமோஷன்களை பதிவு செய்கிற திரைப்படம். அமரன் திரைப்படத்திற்கும் பிக் பாஸுக்கும் பல தொடர்புகள் இருக்கிறது. ஒற்றுமை மிகவும் முக்கியம்" என போட்டியாளர்களிடம் பேசியிருக்கிறார். வேறு என்னென்ன விஷயங்கள் பேசயிருக்கிறார் என்பதை பொறுத்திருந்து எபிசோடில் பார்க்கலாம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

BB Tamil 8 Day 18: `அதிகாரம் காட்டிய முத்து - அழுகையுடன் சென்ற ஆனந்தி' - பெஸ்ட், வொர்ஸ்ட் யார்?

ஹோட்டல் டாஸ்க்கில் பெண்கள் அணியை விடவும் ஆண்கள் அணி சிறப்பாகச் செய்தது. ஆண்கள் செய்த சுவாரசியத்தோடு ஒப்பிடும் போது பெண்கள் அணி சுமார்தான். ஒருவரையொருவர் பிறாண்டிக் கொள்வதில்தான் அவர்கள் அதிக கவனம் செல... மேலும் பார்க்க

திருமணத்தை நிறுத்திய `வாணி ராணி' ஜெனிப்ரியா; ஏமாற்றினாரா சிங்கப்பூர் பைலட் - நடந்தது என்ன?

வாணி ராணி', 'அழகு' முதலான பல சீரியல்களில் நடித்தவர் நடிகை சாரா என்ற ஜெனிப்ரியா. 'ராஜ மன்னார் வகையறா' தொடரில் லீட் ரோலில் நடித்தார். பிறகு சினிமா முயற்சியில் இறங்கினார். 'தமிழ்ப்படம் 2' உள்ளிட்ட சில பட... மேலும் பார்க்க

BB Tamil 8: தீபாவளிக்கு வைல்டு கார்டு என்ட்ரி! 'பிக் பாஸ்' செல்கிறாரா `எவிக்ட்’ ஆனவரின் மனைவி?

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 8 அக்டோபர் 6-ம் தேதி ஒளிபரப்பாகத் தொடங்கியது. அர்னவ், ரவீந்தர், தர்ஷா குப்தா, பவித்ரா ஜனனி உள்ளிட்ட பதினெட்டுபேர் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார்கள்.அடுத்த... மேலும் பார்க்க

BB Tamil 8: `தர்ஷா தமிழ்நாட்டுக்கு வந்த கதை பற்றி உங்களுக்குத் தெரியுமா?' - ரவீந்தர் ஓப்பன் டாக்

பிக்பாஸ் சீசன் 8-லிருந்துஇரண்டாவதாக வெளியேறிய போட்டியாளர் ரவீந்தர். இவருடைய கேம் பிளான் பலருக்கும் பிடித்திருந்தது. பிக்பாஸ் வீட்டிலுள்ளபோட்டியாளர்கள் குறித்து ரவீந்தரிடம்பல கேள்விகள் முன்வைத்திருந்தோ... மேலும் பார்க்க

Siragadikka aasai: முத்து - மீனா கொடுத்த அதிர்ச்சி; பல்ப் வாங்கிய ரோகிணி!

சிறகடிக்க ஆசை நேற்றைய (அக்டோபர் 23) எபிசோடில் ரோகிணி - மனோஜ் திருமண நாள் மற்றும் பிஸ்னஸ் பார்ட்டியில் குடும்பமாக அனைவரும் கலந்து கொள்ள ஒப்புக் கொள்கின்றனர். ஆரம்பத்தில் மீனாவும் ஸ்ருதியும் ஒப்புக்கொள்... மேலும் பார்க்க

BB Tamil Day 17: 'போடா - போடி' ஜெஃப்ரிக்கும் சாச்சனாவிற்கும் சண்டை; ‘திண்டுக்கல் ரீட்டா’வாக விஷால்

ஹோட்டல் டாஸ்க்கில் பெண்கள் அணி ஓவர் அலப்பறை செய்தது. ஆண்களைப் பழிவாங்குவது போலவே நடந்து கொண்டதைப் போல் தெரிந்தது. எழுதுவதற்கு இடம் போதாத அளவிற்கு பலகையில் நிறைய புகார்களை எழுதிக் குவித்தார்கள். இந்த ம... மேலும் பார்க்க