செய்திகள் :

Rain Alert: சென்னைக்கு ஏன் மீண்டும் ரெட் அலர்ட்... வானிலை ஆய்வு மையம் கூறும் விளக்கம் என்ன?

post image

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு கடந்த இரண்டு நாள்களாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த சூழலில், நேற்றிரவு முதலே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படிப்படியாக மழை குறைந்தது. அதேசமயம், தெற்கு ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் மழை வெளுத்துவாங்கியது.

சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இப்படியிருக்க, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்தது. இந்த நிலையில், எதற்காக ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து செய்தியாளர்களிடம் வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் விளக்கமளித்திருக்கிறார்

அதில் பாலச்சந்திரன், ``கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்திருக்கிறது. வடகிழக்குப் பருவமழை தீவிரமாக இருக்கிறது. தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு நிலை, மேற்கு வடமேற்கு திசையில் நாளை அதிகாலை புதுவைக்கு நெல்லூருக்கும் இடையே, சென்னைக்கு அருகே கரையைக் கடக்கக் கூடும். இதன் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழை பெய்யக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

பாலசந்திரன்

17-ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. காற்றழுத்தத் தாழ்வு நிலை இன்னும் வலுவிழக்கவில்லை, கரையை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. நாளை காலை கரைக்கு அருகில் வருகின்றபோது மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கின்ற காரணத்தினால் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ரெட் அலர்ட் கொடுத்திருக்கிறோம். மேலும், இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போதைக்கு புயலாக மாறுவதற்கு வாய்ப்பு இல்லை" என்று கூறியிருக்கிறார்.

Rain Alert: வங்க கடலில் உருவாகும் அடுத்த புயல் - தமிழகத்தைப் பாதிக்குமா?

வங்க கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி, வரும் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.மத்திய அந்தமான் கடல்பகுதியில் தற்போது வள... மேலும் பார்க்க

Rain Alert: பருவமழை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் - ரமணன் சொல்வது என்ன?

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதையடுத்து எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக அதிகாரிகள் கூட்டத்தை இரு தினங்களுக்கு முன் கூட்டியிருந்தார் தலைமைச் செயலர்இந்... மேலும் பார்க்க

Rain Alert: ``அதிகனமழை பாதிப்பு சென்னையைத் தாக்காது; சற்று இளைப்பாறலாம்'' - வானிலை ஆர்வலர் தகவல்

சென்னையில் நேற்று முதல் பெய்துவரும் கனமழையால் நகரம் இயல்புநிலையை இழந்து, மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகும் நிலை இருக்கிறது. சாலைகள், சுரங்கப்பாதைகள் மூழ்கியுள்... மேலும் பார்க்க

Rain Alert : `அடுத்த 2 நாள்களுக்கு மழை எப்படி இருக்கும்?' - வானிலை ஆய்வு மையம் தகவல்!

'கனமழை, அதி கனமழை', 'எந்ததெந்த மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும் என்பவைதான் இன்றைய முக்கியச் செய்திகள்.வட கிழக்குப் பருவமழைத் தொடங்கிவிட்ட நிலையில் தமிழ்நாட்டின் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட... மேலும் பார்க்க

Rain Alert: தொடரும் தமிழ்நாடு கன மழை பாதிப்புகள்...| Exclusive Videos

சென்னையில் தொடரும் கனமழை: இடம்: உஸ்மான் சாலை தி.நகர்சென்னையில் தொடரும் கனமழை; முல்லை நகர் பகுதியில் படகு மூலம் பொதுமக்கள் வெளியே அழைத்து வரப்படுகின்றனர். சென்னையில் தொடரும் கனமழை போக்குவரத்து நெரிசல் ... மேலும் பார்க்க