தலித் இளைஞர் அடித்தே கொலை! கிணற்று நீரை பயன்படுத்துவதில் ஏற்பட்ட தகராறு..
Rain Alert: சென்னை மெரினாவில் பலத்தக் காற்று; வலுப்பெறும் புயல், நவம்பர் 29, 30 தேதிகளில் கனமழை..!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது.
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் கடந்த மூன்று நாள்களாக (நவ.26, 27, 28) திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட டெல்டா பகுதியில் கனமழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடைந்து இன்று சூறாவளி புயலாக (ஃபெங்கல் புயலாக) மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இன்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வரும் இந்தப் புயல் தெற்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டு வருகிறது. இதனால் இன்றே சென்னை, புதுச்சேரி, நாகப்பட்டினம் வரை வரையிலான கடலோரப் பகுதிகளில் ஆங்காங்கே கடல் சீற்றமடைந்து வருகிறது. அப்பகுதிகளில் கனமழை பெய்யவும் அதிக வாய்ப்புகள் இருந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தற்போது சென்னையில் ஆங்காங்கே கனமழையும், அடைமழையும் பெய்துவருகிறது. குறிப்பாக சென்னை, மெரினாவில் மெரினா கடல் பகுதியில் பலத்தக் காற்று விசி வருவதால் ஆராய்ச்சிக்காக நடுக்கடலில் போடப்பட்டிருந்த மிதவை கூண்டு விவேகானந்தர் இல்லம் எதிரே கரை ஒதுங்கியுள்ளது.
இந்நிலையில் நாளை டெல்டா முதல் கடலூர் வரை பெரிய அளவில மழை பெய்யும் என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானிலை ஊட்டி போன்று இருக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருக்கிறார். மேலும், தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ள இப்புயல் கடலூர் மற்றும் சென்னை பகுதியை நவம்பர் 30-ம் தேதியைக் கடக்கும் என்றும் நவம்பர் 29, 30 தேதிகளில் சென்னையில் அதி கனமழை பெய்யும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
இதன் காரணமாக ராணிபேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் கொங்குப் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். சென்னை மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இந்த அதி கனமழையை எதிர்கொள்ளவும், மழை பாதிப்பைத் தவிர்க்கவும் அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...