நீண்ட காலம் இந்திய அணியில் விளையாட வேண்டுமா? ஜெய்ஸ்வாலுக்கு விராட் கோலி கொடுத்த ...
Rain Alert: நாளை 12 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை; வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன?
கடந்த 24 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட சில கடலோரப் பகுதிகளில் லேசான மழையும், சில இடங்களில் கன மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் இன்று (நவம்பர் 12) அதிகாலை முதலே சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும், சில இடங்களில் தொடர் மழையும் பெய்து வருகிறது.
ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம், "வரும் நவம்பர் 14ஆம் தேதி சென்னை, கோவை, மதுரை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் கன மழை பெய்யும். நவம்பர் 15ஆம் தேதி கோவை, மதுரை, நீலகிரி உள்ளிட்ட பல மேற்கு மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் மழை பெய்யும். நவம்பர் 16ஆம் தேதி கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும்" என்று வானிலை மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட சில கடலோரப் பகுதிகளில் கனமழையும், லேசான மழையும் பெய்து வருகிறது.
இது தொடர்பாகச் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்திருக்கும் சென்னை தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், "நாளை (நவம்பர் 13) சென்னை உட்பட 12 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் நாளை, நாளை மறுநாள் கனமழை பெய்யும். அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழ்நாட்டை நோக்கி நகர்கிறது.
வடதமிழ்நாட்டை ஒட்டிய கடற்பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நீடிக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும். தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
அதிகபட்சமாக சென்னை பெருங்குடியில் 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. வடகிழக்குப் பருவமழை இயல்பை விட ஒரு சதவீதம் குறைவாகவே பெய்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைய வாய்ப்பில்லை" என்று பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb