செய்திகள் :

Rajini: "லோகேஷ் கனகராஜ் எங்க ஊர் ராஜமௌலி; நானே வில்லனாக நடிக்க ஆசைப்பட்டேன்!'' - ரஜினிகாந்த்

post image

`வேட்டையன்' திரைப்படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் `கூலி' திரைப்படம் வெளியாக இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

கூலி
கூலி

வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாக இருக்கிறது. புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்த் தெலுங்கில் 'கூலி' படம் குறித்து பேசியிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

"தெலுங்கு ரசிகர்களுக்கு வணக்கம். நான் சினிமா துறைக்கு வந்து 50 வருடங்கள் ஆகிவிட்டது. என்னுடைய வைர விழாவான இந்த ஆண்டில் ஆகஸ்ட் 14 -ல் 'கூலி' வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் இயக்கத்தில், அனிரூத் இசையில் 'கூலி' படம் வெளியாகிறது.

கூலி
கூலி

லோகேஷ் கனகராஜ் தெலுங்கு திரையுலகின் ராஜமௌலியை போன்றவர். ராஜமெளலியைப் போலவே லோகேஷ் எடுத்த எல்லா படங்களும் சூப்பர் ஹிட். தென்னிந்திய திரைப்படத்தில் அமீர்கான் முதன் முதலாக நடிக்கிறார். அதுவும் கேமியோ ரோலில். அவருடைய கரியரிலேயே அவர் கேமியோ ரோலில் நடித்ததில்லை. இதுதான் முதல் முறை.

அதேமாதிரி, கிங் நாகார்ஜூனா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சைமன் என்கிற அந்த வில்லன் கதாபாத்திரத்தை கேட்டவுடன் நானே நடிக்கலாமா என்று கூட தோன்றியது. எனக்கு எப்போதும் வில்லன் கதாபாத்திரங்கள் ரொம்ப பிடிக்கும். அடிப்படையில் நான் வில்லனாகத்தான் சினிமாவுக்கு வந்தேன்" என்று பேசியிருக்கிறார்.

'ஹீரோயினுக்கு நான் சொல்றவங்களைக் கமிட் செய்யுங்க’னு சொன்னார் ஹெச்.ராஜா!' - 'கந்தன் மலை' இயக்குநர்

முதன்முதலாக நடிகர் அவதாரம் எடுத்திருக்கிறார் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா.இவர் நடிக்கும் 'கந்தன் மலை' படத்தின் போஸ்டர் வெளியாகயிருக்கும் நிலையில், படத்தின் இயக்குநர் வீர ம... மேலும் பார்க்க

71-வது தேசிய விருது: ``என் கேள்விகளுக்கு விருது குழு பதிலளிக்க வேண்டும்'' - நடிகை ஊர்வசி விமர்சனம்

71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறந்த நடிகராக பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், விக்ராந்த மெஸ்ஸி, சிறந்த நடிகை ராணி முகர்ஜி, சிறந்த துணை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், மலையாள நடிகர் வ... மேலும் பார்க்க

'இந்த திட்டம் பல உயிர்களைக் காக்கும்'- 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை பாராட்டிய சமீரா ரெட்டி

தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கும் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை பாராட்டிப் நடிகை சமீரா ரெட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவில், "8 -9 வருடங்க... மேலும் பார்க்க

Ajith Kumar: ``பிரதமர் மோடிக்கும், இந்திய அரசுக்கும் நன்றி'' - நடிகர் அஜித் குமார் அறிக்கை

நடிகர் அஜித் குமார் சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``சினிமா எனும் அற்புதமான பயணத்தில் 33 வருடங்கள் நிறைவு செய்கிறேன். ஆனால்... மேலும் பார்க்க

Agaram: "ரசிகர் மன்றம் அரசியலுக்கு போறவங்களுக்கு; நீ ஏன் அதைப் பண்ணுறன்னு அவர் கேட்டார்" - கமல்ஹாசன்

சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின், விதைத் திட்டம் 15-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு சென்னையில் இன்று பிரமாண்ட விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், சிவகுமார், சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் கலைப்ப... மேலும் பார்க்க

Agaram: "சனாதன சங்கிலிகளை நொறுக்கித் தள்ளக்கூடிய ஒரே ஆயுதம்..." - கமல்ஹாசன்

சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின், விதைத் திட்டம் 15-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு சென்னையில் இன்று பிரமாண்ட விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், சிவகுமார், சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் கலைப்ப... மேலும் பார்க்க