Rupee vs Dollar: டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடும் சரிவு ஏன்? - RBI எப்படி சரிசெய்யும்?
அமெரிக்க டாலருக்கு இணையான இந்தியா ரூபாயின் மதிப்பு பெரும் சரிவைச் சந்திந்துள்ளது.
கடந்த புதன் கிழமை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.84.94 ஆக இருந்த நிலையில், நேற்று 14 காசுகள் குறைந்து ரூ.85.08 ஆக ஆனது. இது வரலாறு காணாத சரிவு ஆகும்.
அமெரிக்க பெடரல் வங்கியின் சமீபத்திய முடிவே இந்த சரிவிற்கு மிக முக்கிய காரணமாகும். சமீபத்தில், அமெரிக்க ரிசர்வ் வங்கி அதன் வட்டி விகிதங்களை 0.25 சதவிகிதம் குறைத்தது. கூடவே, தற்போதைய அமெரிக்க பொருளாதார கொள்கைகள் வலுவாக உள்ளது. இதனால், கொஞ்சம் கொஞ்சமாக டாலர் மதிப்பு உயரத் தொடங்கியுள்ளது.
இது மட்டுமல்லாமல், இந்தியாவும் இந்த சரிவிற்கு ஒருவித காரணம் எனலாம். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சமீப காலமாக மந்தமடைந்துள்ளது. மேலும், நாட்டில் மூலதன வரவு குறைந்துள்ளது.
அமெரிக்க பெடரல் வங்கியின் முடிவு, இந்தியாவை மட்டுமல்ல, ஆசிய அளவிலும் அந்தந்த நாட்டு நாணயங்களின் மதிப்பில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சரிவினால் இந்திய ரூபாயின் மீதான முதலீடுகள் குறையலாம், பாதிக்கலாம். அதனால் தற்போது, இந்திய ரிசர்வ் வங்கி இந்திய ரூபாய் மதிப்பை சரிசெய்ய அதன் வட்டியை குறைக்க வேண்டிய சூழ்நிலை எழுந்துள்ளது.