செய்திகள் :

Sandy: ``திருநங்கையாக நடிப்பது பெருமை!" - தமிழ், தெலுங்கு, மலையாளம் என வில்லனாக கலக்கும் சாண்டி!

post image

'லியோ' படத்திற்குப் பிறகு நடன இயக்குநர் சாண்டி தொடர்ந்து அடர்த்தியான வில்லன் கதாபாத்திரங்களில் களமிறங்கி நல்லதொரு நடிப்பையும் கொடுத்து வருகிறார்.

அப்படி சமீபத்தில் லோகா' படத்திலும் கொடூர வில்லனாக தன்னுடைய மல்லுவுட் அறிமுகப் படத்திலேயே மிரட்டியிருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது இவர் கிஷ்கிந்தபுரி' என்ற படத்தின் மூலம் டோலிவுட்டிலும் அறிமுகமாகியிருக்கிறார்.

Sandy Master
Sandy Master

அதிலும் வில்லனாகவே களமிறங்கியிருக்கிறார் சாண்டி. தமிழ், மலையாளம், தெலுங்கு சினிமாவைத் தொடர்ந்து கூடிய விரைவில் கன்னட சினிமாவிலும் அறிமுகமாகவிருக்கிறார் சாண்டி.

`ரோஸி' என்ற படத்தில் கன்னட சினிமாவிற்குள் அறிமுகமாகும் சாண்டி அப்படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்

அந்தக் கதாபாத்திரம் குறித்து சமீபத்தில் விகடனுக்கு அளித்த பேட்டியில் பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், `` `ரோஸி' திரைப்படம் சில பிரச்னைகளில் இருக்கிறது.

அப்படத்தின் டீசரையும் தயார் செய்துவிட்டார்கள். அதில் நான் திருநங்கையாக நடித்திருக்கிறேன். திருநங்கையாக நடிப்பதில் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.

Sandy Master

அதுவும் வில்லன் கேரக்டர்தான். அந்தப் படத்தில் வரும் மிக டேஞ்சரான கதாபாத்திரம் அதுதான். அந்தப் படமும் பயங்கரமாக இருக்கும்.

பிரச்னைகள் முடிந்ததும் அந்தப் படம் பற்றிய விஷயங்கள் தெரியவரும்." எனக் கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Meena: ``அன்று செளந்தர்யாவுடன் நானும் பிரசாரத்திற்கு செல்ல வேண்டியது!" - நடிகை மீனா ஷேரிங்ஸ்

நடிகை மீனா எவர்கிரீன் நாயகியாக தொடர்ந்து கோலிவுட், டோலிவுட், மாலிவுட் என தூள் கிளப்பி வருகிறார். சமீபத்தில் நடிகர் ஜெகபதி பாபு பேட்டியெடுக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்திருக்... மேலும் பார்க்க

இட்லி கடை: ``நான் ஒரு நல்ல தகப்பன் என நெஞ்சை நிமிர்த்தி பெருமையாகச் சொல்வேன்'' - நெகிழும் தனுஷ்

தனுஷ் இயக்கி நடித்திருக்கும் `இட்லி கடை' திரைப்படம் அக்டோபர் 1-ம் தேதி திரைக்கு வருகிறது. அருண் விஜய், ராஜ்கிரண், சத்யராஜ், நித்யா மேனன், ஷாலினி பாண்டே எனப் பலரும் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஜி... மேலும் பார்க்க

Dhanush:``முன்னோர்களின் ஆசீர்வாதம் என்னுடன் இருப்பதாக...'' - கருங்காலி மாலை சீக்ரெட் சொன்ன தனுஷ்

தனுஷ் இயக்கி நடித்திருக்கும் `இட்லி கடை' திரைப்படம் அக்டோபர் 1-ம் தேதி திரைக்கு வருகிறது. அருண் விஜய், ராஜ்கிரண், சத்யராஜ், நித்யா மெனேன், ஷாலினி பாண்டே எனப் பலரும் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஜ... மேலும் பார்க்க

"குட் பேட் அக்லி படத்திலிருந்து பாடல்களை நீக்குக" - அஜித் பட தயாரிப்பாளருக்கு இளையராஜா எச்சரிக்கை!

அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படத்தின் தயாரிப்பாளரான மைத்ரி மூவி மேக்கர்ஸுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் இளையராஜா. அதில் தனது அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்ட பாடலை படத... மேலும் பார்க்க